தேசிய தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, SLT-Mobitel Home வாடிக்கையாளர்களுக்கு (நிரந்தர இணைப்பு) mGuide சேவையை வழங்க முன்வந்துள்ளது. அதனூடாக, கட்டடக்கலை மற்றும் வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பார்வையிடக்கூடியதாக இருக்கும்.
SLT-Mobitel mGuide சேவை என்பது, வாடிக்கையாளர்களுக்கு இலங்கையின் வரலாற்று, கலாசார மற்றும் சமய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பற்றிய தகவல்களை செவிமடுக்கக்கூடிய வகையில் அமைந்த தொடர்பாடல்களை பேணக்கூடிய குரல் மூலமாக கட்டுப்படுத்தும் கட்டமைப்பாக அமைந்துள்ளது. இந்தச் சேவை முன்னர் SLT-Mobitel மொபைல் வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டிருந்தது.
சிறந்த பெறுமதி சேர்ப்பை வழங்கியுள்ளதனூடாக SLT-Mobitel Home வாடிக்கையாளர்களுக்கும் தற்போது இலங்கையின் உண்மையான வனப்பை 1299 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். interactive voice response (IVR)முறையிலமைந்த கட்டமைப்பினூடாக பாவனையாளர்களுக்கு இலங்கையின் உயர்ந்த கலாசாரம் மற்றும் பாரம்பரியம் பற்றிய தகவல்களை தெளிவான விளக்கங்களுடன் பெற்றுக் கொள்ள முடியும்.
SLT-MOBITEL மொபைல் வாடிக்கையாளர்களுக்கு mGuide சேவை என்பதை 888 எனும் குறும் இலக்கத்தினூடாக பெற்றுக் கொள்ள முடியும். மேலும், இந்த சேவையை விரிவாக்கம் செய்துள்ள நிலையில், சகல SLT-Mobitel Home வாடிக்கையாளர்களுக்கும் மொபிடெல் குறும் இலக்க சேவை 888 ஐ ஸ்ரீ லங்கா ரெலிகொம் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், SLT-MOBITEL இனால் mGuide சேவை மீளமைக்கப்பட்டுள்ளது. இதனூடாக சிறந்த உள்ளம்சங்கள் வழங்கப்படுகின்றன. இந்தச் சேவை பத்துக்கும் அதிகமான மொழிகளில் காணப்படுகின்றது. குறிப்பாக வெளிநாட்டு பயணிகளுக்கு இந்த mGuide சேவையினூடாக அதிகளவு பயன் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். பிரென்ஞ், ஜப்பனீஸ், தமிழ், ஜேர்மன், ஹிந்தி, சைனீஸ் மற்றும் கொரிய மொழிகளிலும், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் விளக்கங்களும் வழங்கப்படுகின்றன.
தேசிய பாரம்பரிய அமைச்சு, தொல்பொருள் திணைக்களம் மற்றும் இலங்கை சுற்றுலா ஆகியவற்றுடன் இணைந்து இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. 300 க்கும் அதிகமான சுற்றுலாத் தலங்களின் தகவல் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. SLT-Mobitel mGuide சேவையினூடாக மெய்நிகர் முறையில் வழிகாட்டியாக கிடைக்கும் தகவல்கள் யாத்திரிகர்கள், பிரயாணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பெறுமதி வாய்ந்தவையாக அமைந்திருக்கும்.
மேலும், உலகின் பாரம்பரிய மற்றும் தொல்பொருள் பகுதிகள், தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய விவரங்களையும் மேம்படுத்தப்பட்ட SLT-Mobitel mGuide சேவையினூடாக பெற்றுக் கொள்ள முடியும். மாணவர்களுக்கு இந்த உள்ளம்சம் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும், குறிப்பாக தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் வசதிகள் குறைந்த பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கைகொடுக்கும்.
எதிர்காலத்தில் mGuide சேவையை மேலும் மேம்படுத்தி விஸ்தரிப்பதற்கு SLT-MOBITEL திட்டமிட்டுள்ளது. இதில் (www.888.lk) அடங்கியிருக்கும் என்பதுடன், SLT-Mobitel mGuide App உம் உள்ளடக்கப்பட்டிருக்கும். SLT-MOBITEL இனால் mGuide சேவையினூடாக புதிர் போட்டி ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதனூடாக பொது மக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இலங்கையின் உள்நாட்டு பாரம்பரியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வந்துள்ளது.