தேசிய வியாபார சிறப்பு விருதுகள் 2021 நிகழ்வில் லங்கா SSL க்கு இரட்டை விருதுகள் வழங்கிக் கௌரவிப்பு

Home » தேசிய வியாபார சிறப்பு விருதுகள் 2021 நிகழ்வில் லங்கா SSL க்கு இரட்டை விருதுகள் வழங்கிக் கௌரவிப்பு
Share with your friend

முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்ட லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெட் (லங்கா SSL), அதன் உயர் தரம் வாய்ந்த கம்பிகள் விநியோகத்துக்காக ஒப்பற்ற கீர்த்தி நாமத்தைக் கொண்டுள்ளதுடன், E B Creasy & Company PLC நிறுவனத்தின் துணை நிறுவனமாக திகழ்கின்றது. அண்மையில் இடம்பெற்ற தேசிய வியாபார சிறப்பு விருதுகள் 2021 நிகழ்வில் பாரியளவு பிரிவில் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.  இந்நிகழ்வை இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் (NCCSL) ஏற்பாடு செய்திருந்தது.

ஏனைய – உற்பத்தி பிரிவில் லங்கா SSL வெற்றியாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக, 2018 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்விலும் இந்நிறுவனம் ஒட்டுமொத்த பாரிய பிரிவில் மூன்றாமிடத்தையும், ஏனைய – உற்பத்திப் பிரிவில் தங்க விருதையும் சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில், உறுதி செய்யப்பட்ட விஞ்ஞானபூர்வ ஆய்வுகள் மற்றும் நிபுணத்துவ வழிகாட்டல்களினூடாக பரந்தளவு கல்வனைஸ் செய்யப்பட்ட இரும்புக் கம்பிகள் உற்பத்தியில் லங்கா SSL தன்னை ஈடுபடுத்தியுள்ளதுடன், எல்லை முட்கம்பிகள் பிரிவில் மாபெரும் உற்பத்தியாளராகவும், சந்தை முன்னோடியாகவும் திகழ்கின்றது. சந்தையின் 70 சதவீதமான பங்கை தன்வசம் கொண்டுள்ளது. நாட்டில் காணப்படும் ஒரே கல்வனைஸ் உருக்கிரும்பு கம்பிகள் உற்பத்தியாளர் எனும் பெருமையையும் லங்கா SSL தன்னகத்தே கொண்டுள்ளது.

லங்கா SSL பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பிரவீன் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் மற்றும் எம்மீது தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகத்தர்களின் பங்களிப்பின்றி எம்மால் இந்த சாதனையை எய்தியிருக்க முடியாது.” என்றார். 

புத்தாக்கம் மற்றும் சிறப்பு ஆகியவற்றில் தொடர்ச்சியாக காண்பிக்கும் அர்ப்பணிப்புடன், பரந்த விநியோக வலையமைப்பினூடாக மேலும் வளர்ச்சியடைந்த வண்ணமுள்ளது. கடந்த 23 வருடங்களில் நாட்டின் கம்பிகள் துறையில் நிறுவனத்தினால் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை ஏற்படுத்துவதற்கு இது ஏதுவாக அமைந்திருந்தது. தமது வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற தரமான சேவைகளைப் பெற்றுக் கொடுப்பது என்பதில் லங்கா SSL நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அதனை உறுதி செய்வதற்காக உள்ளக மற்றும் சுயாதீன QA நிபுணர்களுடன் செயலாற்றுகின்றது.

கடந்த ஆண்டின் இறுதியில், லங்கா SSL இனால் இலங்கையின் ஒரே SLS சான்றிதழ் பெற்ற முட் கம்பிகள் (barbed wire) அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. அத்துடன், நீண்ட காலமாக பேணி வரும் SLS சான்றிதழ் பெற்ற hot-dipped galvanized (Gi) கம்பிகளின் ஒரே உற்பத்தியாளராகவும் திகழ்கின்றது. இந்திய சந்தைக்கு கல்வனைஸ் செய்யப்பட்ட கம்பிகளை விற்பனை செய்கின்றமைக்காக IS 280:2006 எனும் BIS சான்றிதழையும் பெற்றுள்ளது.

ISO 9001: 2015, ISO 45001:2018 சான்றிதழைப் பெற்ற லங்கா SSL கம்பனி, நாட்டின் கல்வனைஸ் செய்யப்பட்ட கம்பிகள் உற்பத்திப் பிரிவில் முன்னோடியாகத் திகழ்வதுடன், மூன்று தசாப்த காலமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ச்சியாக நன்மதிப்பையும் வென்றுள்ளது. உலகின் சிறந்த வர்த்தக நாமங்களுக்கு நிகரானதாக இந்நிறுவனத்தின் உற்பத்திகள் அமைந்திருப்பதுடன், சபுகஸ்கந்த பகுதியில் அமைந்துள்ள நவீன வசதிகள் படைத்த தொழிற்சாலையினால் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

பிரவீன் மேலும் குறிப்பிடுகையில், “இலங்கையின் உருக்கு இரும்புக் கம்பிகள் துறையில் முன்னோடியாக, 25 வருட கால வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், லங்கா SSL எப்போதும், நுகர்வோருக்கு உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை பெற்றுக் கொடுப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ளது.” என்றார்.

எதிர்வரும் மாதங்களில் நிறுவனம் தனது தயாரிப்புகளை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டில் TATA Steel லிமிடெடின் சர்வதேச கம்பிகள் பிரிவுடனான பங்காண்மையை வலிமைப்படுத்தியிருந்தது. அதனூடாக நாடு முழுவதிலும் தரமான கம்பிகள் விநியோகத்தில் நீண்ட காலமாக பேணியிருந்த ஏக முகவர் மற்றும் விநியோகத்தருக்கான அந்தஸ்த்தை தொடர்ந்தும் தக்க வைத்திருந்தது. மேலும், லங்கா SSL இனால் ‘Permaweld’ வர்த்தக நாமத்திலமைந்த வெல்டிங் கம்பிகள் சகல வெல்டிங் பயன்பாட்டுக்கும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. நாடு முழுவதிலும் லக்சபான பற்றரிஸ் பிஎல்சியின் ஹார்ட்வெயார் விநியோக பிரிவினூடாக விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: