முன்னணி உலகளாவிய உணவுச் சேவை வழங்குனரின் புத்தாக்கப் பிரிவான Sysco LABS Sri Lanka அண்மையில் ‘தொழில்துறை மொபைல் மேம்பாடு – வடிவங்கள், ஆபத்து, தளங்கள்’ எனும் தலைப்பில் சுவாரஸ்யமான குழு கலந்துரையாடலொன்றை வழங்கியிருந்தது. இதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழில்துறை மொபைல் நிபுணர்கள் தொழில்துறையில் உள்ள மொபைல் தொழில்நுட்பம் குறித்த ஆர்வமுள்ள நேயர்களுடன் உள்ளடக்கங்கள் குறித்த விடயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலானது வடிவமைப்பு, பரிசோதிப்பு, உருவாக்கம் மற்றும் தொழில்துறை நிறுவனங்களால் பயன்படுத்தக்கூடிய பல்தரப்பட்ட மொபைல் செயலிகளை உருவாக்குவது குறித்து விரிவான தகவல்களை அறிந்துகொள்ள ஒரு தளமாக அமைந்தது. இந்தக் கலந்துரையாடலை இன் சிரேஷ்ட தொழில்நுட்ப முன்னணியாளர் அஷான் தனபால நெறியாள்கை செய்தார்.
தொழில்துறை சார்ந்த மொபைல் செயலிகளுக்கான தேவை அதிகரித்து வருவதால் அவ்வாறான செயலிகளை உருவாக்குவதில் பலதரப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. தொழில்துறை மொபைல் செயலி வடிவமைப்பில் காணப்படும் சாதாரண வரையறைகளுக்கு அப்பால் சென்று இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது தொடர்பில் மொபைல் பொறியியலின் பணிப்பாளர் ரொபேர்ட் ஸ்பைன்வெபர் மற்றும் Sysco LABS Austin இன் மென்பொருள் பொறியியலாளர் சார்ள்ஸ் சக் இம்பெராட்டோ ஆகியோர் தமது அனுபவங்கள், தீர்வுகள் மற்றும் துணுக்குகளைப் பகிர்ந்துகொண்டனர். மதிப்புக்குரிய இந்த இரு விசேட நிபுணர்களும் உலகளாவிய பெருநிறுவனங்களுக்கு தொழில்துரை தரத்திலான மொபைல் செயலிகளைத் தயாரிப்பதில் ஒரு தசாப்தத்துக்கு மேல் அனுபவங்களைக் கொண்டுள்ளனர்.
Sysco Shop மொபைல் செயலியை வெற்றிகரமாக வழங்குவதற்கு பொறுப்பாகச் செயற்பட்டிருந்த ரொபேர்ட், பாரிய அளவில் மொபைல் செயலிகளை உருவாக்கும்போது அவை தொடர்பில் தொழில்துறை நிறுவனங்களைக் கையாளுகையில் ஏற்படக்கூடிய சவால்கள் குறித்து விபரித்தார். அவர் குறிப்பிடுகையில், “இயங்கு தளத்தை கூறுகளாக்குவதிலேயே பிரதான சவால்கள் மற்றும் சுமைகள் காணப்படுகின்றன. இது ஒவ்வொரு தளம், உற்பத்தியாளர்களின் முடிவற்ற சேர்க்கைகள், வடிவமைக்கும் போதான காரணிகள் மற்றும் திரைகளின் அளவுகளைக் கொண்ட சாதனங்களை உருவாக்குதல் போன்றவற்றுக்கு அமைய வேறுபடுகின்றன. ஒரு நிறுவனத்தினால் எதிர்பார்க்கப்படும் செயலியின் முறைகளைப் பகுப்பாய்வு செய்து உங்கள் கவனத்தை செலுத்தவும்” என்றார்.
“செயலி உருவாக்குனர்கள் என்ற ரீதியில் எம்மால் முடிந்தளவு தகவல்களைப் பாதுகாக்க வேண்டியது கடமையாகும். இதுவே மொபைல்களில் காணப்படும் தனித்துவமான தொழில்நுட்ப வாய்ப்பாகும்” என ரொபேர்ட் மேலும் குறிப்பிட்டார்.
பல்துறைசார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும்போது அவதானமாக இருக்க வேண்டியமை குறித்தும் அவர் எச்சரித்தார். “குழுக்களுக்கிடையிலான தொடர்பாடுகளை ஊக்குவிப்பது மற்றும் வசதிகளை வழங்குவது இதில் பாரியதொரு சவாலாகும்” என்றார்.
தொழில்துறைசார் மொபைல் செயலிகளில் எவ்வாறு வடிவமைப்பு முக்கியம் பெறுகிறது என்ற கேள்விக்கு சக் பதிலளிக்கையில், வெளிப்படையான விஷயம் என்னவென்றால், நாம் திறமையாக இருக்க வேண்டும். சிறிய குழுக்களுடன் நிலையான ஒத்துழைப்பு மற்றும் தகவல்தொடர்புகளை வைத்திருப்பது மிகவும் எளிதானது. எமது செயலிகளை தொகுதிகள் அல்லது கூறுகளாக மாற்றியமைத்து உடைப்பதன் மூலம், நாம் இயல்பாகவே சில அளவிடுதலைப் பெறலாம். நாம் இயல்பாகவே சில அளவிடுதலைப் பெறலாம் மற்றும் பயிற்சி செய்வது போல் குழுக்கள் முடிந்தவரை சுதந்திரமாக வேலை செய்யவதை Syscoவில் நாம் பின்பற்றுகின்றோம்” என்றார்.
இந்த அமர்வில் கலந்துரையாடப்பட்ட கொள்கைகள், கருவிகள் மற்றும் கட்டமைப்புக்கள் குறித்து மேலும் அறிந்து கொள்ள https://youtu.be/lztwpUpAKMg என்ற இணையத்தளத்துக்குப் பிரவேசிக்கவும். எதிர்கால நிகழ்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் பற்றி அறிந்துகொள்ள www.facebook.com/syscolabssl இல் இணைந்திருங்கள்.