தொழில்முனைவோர் அமைப்பு (EO), இலங்கைப் பிரிவு 2022-2023 க்கான உலகளாவிய மாணவர் தொழில்முனைவர் விருதுகளில் (GSEA) பங்குபற்றுவதற்கு மாணவர்களை அழைக்கின்றது

Home » தொழில்முனைவோர் அமைப்பு (EO), இலங்கைப் பிரிவு 2022-2023 க்கான உலகளாவிய மாணவர் தொழில்முனைவர் விருதுகளில் (GSEA) பங்குபற்றுவதற்கு மாணவர்களை அழைக்கின்றது
Share with your friend

சமவுரிமைகளைக் கொண்ட உலகின் மிகப் பெரிய தொழில்முனைவோர் வலையமைப்பான தொழில்முனைவோர் அமைப்பின் (EO) இலங்கைப் பிரிவு, உலகளாவிய மாணவர் தொழில்முனைவர் விருதுகள் (GSEA) 2022-2023 போட்டிப் பருவத்தில் நுழைவதன் மூலம் இலங்கையின் இளம் தொழில்முனைவோருக்குத் தங்களின் அறிவை விருத்தி செய்து கொள்வதற்கும், தங்களின் வணிக முயற்சிகளை மேம்படுத்திக் கொள்வதற்குமான வாய்ப்பைப் பற்றிக் கொள்வதற்கு அழைப்பு விடுக்கின்றது.

உலகளாவிய மாணவர் தொழில்முனைவர் விருதுகள் (GSEA) என்பது கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் தமது கற்கை நெறியை மேற்கொள்ளும் அதேவேளை, தமக்கே உரிய வணிகமொன்றைச் சொந்தமாக நடத்தும் மாணவர்களுக்கான முன்னணியில் திகழ்கின்ற உலகளாவிய போட்டி நிகழ்ச்சியாகும். வளர்ந்து வரும் தொழில்முனைவோர் தங்கள் தொழில் முனைவோர் பயணங்களை ஆரம்பிக்கும் போதும் அவர்களின் துணிகரமான முயற்சிகளை உருவாக்கும் போதும் அவர்களின் முழுத் திறனையும் திறப்பதற்கு இந்தப் போட்டி நிகழ்ச்சி உதவுகிறது. போட்டியாளர்கள் உலகளாவிய இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் எதிர்பார்ப்புடன், உலகெங்கிலும் உள்ள தங்கள் சகாக்களுடன் உள்ளூர் மற்றும் தேசியப் போட்டித் தொடர்களில் போட்டியிடுகின்றனர்.

நிகழ்வின் போது, ​​அவர்களால் தமது வாழ்வையே மாற்றக்கூடிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், சகா-சகா கற்றலில் ஈடுபடவும் இயலுமாகின்றது. அனைத்து வேட்பாளர்களும் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியொன்றில் அல்லது பல்கலைக்கழகமொன்றில் இளங்கலைப் பட்டப் படிப்பொன்றில் சேர்ந்திருக்க வேண்டும், குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தொடர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற வணிகமொன்றைச் சொந்தமாக வைத்திருக்க வேண்டும், மேலும் விண்ணப்பத்தின் போது நிறுவனத்தின் செயற்பாட்டிற்கு முதன்மையான பொறுப்புதாரியாக இருக்க வேண்டும்.

GSEA பற்றிய தனது பார்வையை வெளிப்படுத்திய GSEA இன் தலைவர் ஷஞ்ஜீவ் ஸ்ரீஸ்கந்தராஜா, “GSEA Sri Lanka ஆனது அடுத்த தலைமுறைத்  தொழில்முனைவோருக்கு அவர்களின் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு மாத்திரமல்லாது, உலகளாவிய ரீதியில் கொண்டு செல்வதற்கு வழிகாட்டலையும் ஒரு தளத்தையும் வழங்குவதன் மூலம் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு EO Sri Lanka இற்கான ஒரு அரிய வழியாகும். போட்டிகளின் போது, ​​அவர்கள் உலகம் முழுவதிலுமிருந்துள்ள தங்களின் சகாக்களுடன் இணையும் வாய்ப்பைப் பெறுகிறார்கள், மேலும் அவர்களின் காலடியில் இருக்கும் தொழில்முனைவோரிடமிருந்தும் கற்றுக்கொள்கிறார்கள். உலகின் சிறந்த மாணவர் தொழில்முனைவோருக்கு எதிராக நேருக்கு நேர்  மோதி வெற்றி பெறும் நோக்குடன் அவர்களுக்கு உள்நாட்டு, தேசிய அளவிலான போட்டிகள் மூலம் போட்டியிட முடியும். GSEA Global Finals இல், உலகின் சிறந்த மாணவர் தொழில்முனைவோருக்கு எதிராகப் போட்டியிடும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிட்டும்.”  

தொழில்முனைவோர் அமைப்பு (EO) என்பது 61 நாடுகளில் உள்ள 14,000+ ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட தலைவர்களின் உயர்தர ஆதரவு வலையமைப்பாகும். வாழ்க்கையை மேம்படுத்தும் தொடர்புகள், பகிரப்பட்ட அனுபவங்கள் மற்றும் கூட்டுக் கற்றல் ஆகியவற்றின் மூலம் தொழில்முனைவோருக்குத்  தங்களின் முழுத் திறனையும் அடைந்து கொள்வதற்கு EO உதவுகின்றது. 2017 இல் நிறுவப்பட்ட  EO Sri Lanka, தெற்காசியப் பிராந்தியத்தின் 20வது பிரிவாகவும் உலகளவில்169வது பிரிவாகவும் காணப்படுகின்றது. EO Sri Lanka ஆனது மருந்தகம், உற்பத்தி, F&B, IT, வாகனம், கல்வி, பயிற்சி மற்றும் ரியல் எஸ்டேட் உட்பட பல துறைகளைச் சேர்ந்த பலமான தொழில்முனைவோரை வலையமைப்பிற்குக் கொண்டு வருகின்றது. பல முனைகளில் வேகமாக வளர்ந்து வரும் திறன் கொண்ட நாடாக இலங்கை சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், EO Sri Lanka, தொழில் முனைவோர் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், தனிநபர்களையும் வணிக முயற்சிகளையும் போஷிப்பதற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதற்கும் உருவாக்கப்பட்டது..

உலகளாவிய மாணவர் தொழில்முனைவர் விருதுகள் (GSEA) 2022-2023 பற்றிய கூடுதல் தகவலுக்கு, http://www.gsea.org ஐப் பார்வையிடவும்.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: