நிறுவன ரீதியான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக ஆனந்த கல்லூரி பழைய மாணவர் சங்கத்துடன் கைகோர்க்கும் நாவலோக்க மருத்துவமனைகுழுமம்

Home » நிறுவன ரீதியான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக ஆனந்த கல்லூரி பழைய மாணவர் சங்கத்துடன் கைகோர்க்கும் நாவலோக்க மருத்துவமனைகுழுமம்
Share with your friend

இலங்கையின் முன்னணி தனியார் மருத்துவமனை சேவை வழங்குநரான நவலோக்க மருத்துவமனைகள் குழுமம், இலங்கையின் பிரபல்யமான கல்லூரியான கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் நவலோகா மருத்துவமனைகள் குழுமத்தினால் தனித்துவமான மற்றும் உயர்தர பல்வகை சுகாதார வசதிகளை அணுகுவதற்கு ஒரு தனித்துவமான நிறுவன சுகாதாரப் பாதுகாப்பு தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தனித்துவமான திட்டம் சுகாதார அமைச்சினால் விதிக்கப்பட்ட கடுமையான சுகாதார விதிமுறைகளின்படி 2021 அக்டோபர் 14 அன்று கொழும்பின் நவலோக மருத்துவமனை வளாகத்தில் இரு தரப்பு பிரதிநிதிகள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

“ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கல்வி உறுப்பினர்கள், உலகத்தரம் வாய்ந்த சுகாதார வசதிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த, உயர் தகுதி வாய்ந்த மருத்துவ ஆலோசகர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரை நவலோக்க மருத்துவமனைகள் குழுமம் அன்புடன் வரவேற்கிறது. இலங்கை முழுவதும் ஆசிரியர்களும் கல்வி ஊழியர்களும் அயராது உழைத்து நமது வருங்கால சிறார்களை வழிநடத்தி, வலுவான, திறமையான இளைஞர் தலைமுறையை உருவாக்க, அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களுக்குத் தேவையான சுகாதாரப் பராமரிப்பை எளிதாக வழங்குவது அவசியம். ஆனந்தா கல்லூரியால் நாவலோக மருத்துவமனைகள் குழுமத்தின் சேவைகளை ஒரு முன்னணி சுகாதார வழங்குநராகப் இணைத்துக் கொள்ளுமாறு கோரியது, எங்கள் மருத்துவமனை குழுமத்தின் அழியாத நற்பெயருக்கும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வேகமாக வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனுக்கும் இதுவொரு தெளிவான சான்றாகும்.” என நவலோக்க மருத்வமனைக் குழுமத்தின் தலைவர் ஜயந்த தர்மதாஸ தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ், பழைய மாணவர்கள் மற்றும் கல்வி உறுப்பினர்கள் அனைவரும் கொழும்பு, நீர்கொழும்பு, கம்பஹா மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள நவாலோக்க மருத்துவமனை கிளைகளால் வழங்கப்படும் சிறப்பு சலுகைகளின் கீழ் இலவசமாக பலவிதமான பிரத்யேக சேவைகளைப் பெற முடியும். அறுவைசிகிச்சை, அறை முன்பதிவு, நர்சிங் சேவைகள், நோயறிதல், வெளிநோயாளர் பரிசோதனைகள், ஆய்வக சோதனைகள், பல் சேவைகள் மற்றும் சுகாதார சோதனைப் பெக்கேஜ்கள் மற்றும் இலவச ஆம்புலன்ஸ் பராமரிப்பு ஆகியவற்றில் 25% வரை தள்ளுபடிகள். மேலும், மருத்துவமனையின் பிரத்தியேக வழக்கமான உறுப்பினர் திட்டத்திற்கு உறுப்பினர்களுக்கு இலவசமாக அணுக முடியும்.

“கொவிட்-19 தொற்றுநோய் அனைத்து வயதினருக்கும் நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எனவே, இந்த வழியில் நாங்கள் இலங்கையின் முன்னணி தனியார் சுகாதார வழங்குநர்களில் ஒருவரான நவலோக மருத்துவமனை குழுமத்துடன் கூட்டுசேர்ந்தோம். நமது பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களும், எங்கள் கல்வி ஊழியர்களும் தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்க நாவலோக்க மருத்துவமனை குழுமத்தின் ஆதரவைப் பெற முடியும், மேலும் இது குறிப்பாக ஆசிரியர்களுக்கு மற்றும் இளைய தலைமுறைக்கு வழிகாட்ட. ஆரோக்கியமான மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை உருவாக்குவதற்கான அவர்களின் முயற்சிகளை வலுப்படுத்தும்.” என ஆனந்தாக் கல்லூரியின் நிறைவேற்றுத் தலைவர் பிமல் ஜெயசிங்க தெரிவித்தார்.

நவலோக்க மருத்துவமனைகள் குழுமம் 1985ஆம் ஆண்டில் அரச சுகாதாரத் துறையில் நுழைந்தது, இலங்கையில் முதல் தனியார் மருத்துவமனையாக மூன்றாம் நிலை சேவைகளை வழங்கியது. அப்போதிருந்து, கலாநிதி ஜயந்த தர்மதாசாவின் தொலைநோக்குத் சிந்தனையின் கீழ், இந்த மருத்துவமனை குறிப்பிடத்தக்க உள்ளூர் மற்றும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று, நாட்டின் மருத்துவ வளர்ச்சியில் முன்னோடியாக இருந்து வருகிறது. 2020ஆம் ஆண்டில், நவலோக்க மருத்துவமனைகள் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுகாதாரப் பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்க மதிப்புமிக்க Joint Commission International’s (JCI) தங்க முத்திரையைப் பெற்றுள்ளது.

நவலோக்க மருத்துவமனைகளில் 24 மணிநேர வெளிநோயாளர் பிரிவு சேவைகள், அதிநவீன ETU வசதிகள், விமான மருத்துவ சேவைகள் உள்ளிட்ட நடமாடும் தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் வீட்டுக்கு சென்று மருத்துவ பராமரிப்பு வழங்கும் நர்சிங் பிரிவு ஆகியவை உள்ளன. சிறந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் உற்சாகமான மற்றும் தொழில்முறை சேவை குழுவின் தலைமையில், நவலோக்க மருத்துவமனைகள் ஆரோக்கியமான மற்றும் வலுவான இலங்கையை நவீன தொழில்நுட்பம் மற்றும் மலிவு விலையில் சுகாதார தீர்வுகளுடன் கட்டியெழுப்பும் நோக்கில் முழுமையாக உறுதிபூண்டுள்ளது.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: