நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி American Express உடன் “இந்தப் புத்தாண்டில் ஒன்றிணைந்து வாழ்க்கையை அனுபவியுங்கள்”

Home » நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி American Express உடன் “இந்தப் புத்தாண்டில் ஒன்றிணைந்து வாழ்க்கையை அனுபவியுங்கள்”
Share with your friend

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி American Express இந்தப் புத்தாண்டில், அட்டைதாரர்களுக்கு பல அனுகூலங்கள் மற்றும் வெகுமதிகளை வழங்க முன்வந்துள்ளது. “இந்தப் புத்தாண்டில் ஒன்றிணைந்து வாழ்க்கையை அனுபவியுங்கள்” – “Experience Life Together This Avurudu” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தினூடாக புத்தாண்டைக் கொண்டாட தயாராகும் இலங்கையர்களுக்கு தமது அருகாமையிலுள்ள மற்றும் தொலைவிலுள்ள குடும்ப அங்கத்தவர்களை சந்தித்து, அன்பளிப்புகளைப் பகிர்ந்து, விடுமுறையை கொண்டாடும் வகையில் இந்த அனுகூலங்களையும் வெகுமதிகளையும் வழங்க முன்வந்துள்ளது. இதனூடாக அன்புக்குரியவர்கள் மத்தியில் பந்தங்களையும் உறவுகளை மேலும் வலிமைப்படுத்த நேஷன்ஸ் ட்ரஸ்ட் American Express தன்னை அர்ப்பணித்துள்ளது.

அட்டைதாரர்களுக்கு புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் பெருமளவு அன்பளிப்புகள் மற்றும் வெகுமதிகள் போன்றவற்றை பெற்றுக் கொடுக்கும் வகையில், ஆடைகள் மற்றும் விற்பனையகங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், களிப்பாட்ட பகுதிகள், வீட்டுப் பராமரிப்பு மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் போன்றவற்றில் இந்தச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி American Express புத்தாண்டு வெகுமதித் திட்டம் 2022 ஏப்ரல் 30ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் அட்டைகள் பிரிவின் தலைமை அதிகாரி நிலுக குணதிலக கருத்துத் தெரிவிக்கையில், “அனைத்து இலங்கையர்களின் உள்ளத்திலும் விசேட பகுதியை புத்தாண்டு காலப்பகுதி கொண்டுள்ளது. ஒன்றிணைந்திருப்பது மற்றும் குடும்ப நேரத்துக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி American Express அட்டைகளினூடாக, அட்டைதாரர்களுக்கு ஒன்றிணைந்து வாழக்கையை அனுபவிக்கக்கூடிய வகையில் பல வெகுமதிகள் வழங்கப்படுகின்றன. தமது அன்புக்குரியவர்களுடன் இணைந்து இந்தப் பண்டிகைக் காலத்தை அவர்களால் கொண்டாடி மகிழக்கூடியதாக இருக்கும். மிகச் சிறந்த வெகுமதிகளை அனுபவிக்குமாறு எமது அட்டைதாரர்களை நாம் அழைப்பதுடன், நினைவிலிருக்கும் ஏப்ரல் மாதத்தை வழங்கும் வகையில் பல பங்காளர் விற்பனை நிலையங்களுடன் நாம் கைகோர்த்துள்ளோம்.” என்றார்.

“இந்தப் புத்தாண்டில் ஒன்றிணைந்து வாழ்க்கையை அனுபவியுங்கள்” எனும் திட்ட அனைவருக்குமானதாக அமைந்துள்ளது. குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நம்பமுடியாத மலிவு விலையில் அவசியமான சகல பொருட்களையும் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. 

நேஷன்ஸ் ட்ரஸ்ட் American Express அட்டைகள் பற்றிய மேலதிக தகவல்கள் மற்றும் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் அனுகூலங்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு www.americanexpress.lk எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும். உங்கள் பண்டிகைக் கால ஷொப்பிங், உணவக மற்றும் தங்குமிட வசதிகள் போன்றவற்றை நீங்கள் அனுபவிக்கையில், அரசாங்கத் தரப்பினாலும் பங்காளர் அமைப்புகளினாலும் வெளியிடப்பட்டுள்ள சகல சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுமாறு உங்களுக்கு நாம் அறிவுறுத்துகின்றோம். 

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பற்றி

நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி பீஎல்சீ Business Today சஞ்சிகை தரவரிசையில் இலங்கையின் முதல் 15 வணிக நிறுவனங்களில் இடம் பிடித்துள்ளது. “மக்கள் மற்றும் வணிகங்களது குறிக்கோள்களையும் அபிலாஷைகளையும் ஒரு நிலையான வழியில் அடைவதற்கு நிதி சேவைகள் மற்றும் தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உதவுவது” என்ற நோக்கத்தில் பயணிக்கும் வங்கி; தனிநபர் மற்றும் நிறுவனங்கள் என பல்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கு வங்கித்துறை, நிதி தயாரிப்புகள் மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்குகிறது. அதிநவீன டிஜிட்டல் வங்கி தொழில்நுட்பங்கள் மூலம் டிஜிட்டல் வலுவூட்டலில் கவனம் செலுத்திய வங்கி, பல புதுமையான வாடிக்கையாளர் மைய வங்கி தீர்வுகளான, நீட்டிக்கப்பட்ட வங்கி நேரம், 365 நாள் வங்கி மற்றும் FriMi – இலங்கையின் முதல் டிஜிட்டல் வங்கி அனுபவம் போன்றவற்றில் முன்னோடியாக உள்ளது. உன்னத மதிப்பு, சேவை வழங்குதல் மற்றும் அட்டை பாவனையாளர்களை பலனளிக்கும் அனுபவங்கள் மற்றும் வாய்ப்புகளுடன் இணைக்கும் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி பீஎல்சீ, இலங்கையில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளுக்கான ஒரே சேவை வழங்குநராகும். நாடு முழுவதும் 96 கிளைகளை இயக்குகிற நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி 48 CDM இயந்திரங்களை உள்ளடக்கிய 127 இடங்களில் அமைந்துள்ள ATM வலையமைப்பையும், Lanka Pay வலையமைப்பின் ஊடாக 3,700 க்கும் மேற்பட்ட ATM களையும் கொண்டுள்ளது.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: