Site icon Eyeview Sri Lanka

பதின்பருவ பாவனையாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் Family Pairing அதிகரிக்க புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் TikTok

Share with your friend

உலகின் மிகவும் பிரபலமான குறுகிய வடிவ மொபைல் வீடியோ பகிர்வு சமூக ஊடக தளமான TikTok, இளைஞர்கள், குடும்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. TikTok அதன் Screen Time கருவியை அதிக பாவனையாளர் நட்பு விருப்பங்களுடன் புதுப்பித்துள்ளது மற்றும் இளைய பாவனையாளர் கணக்குகளுக்கு புதிய Default Settingsகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகளின் கணக்குகளில் பெற்றோருக்கு அதிகக் கட்டுப்பாட்டை வழங்கும் வகையில் இந்த அம்சம் விரிவுபடுத்தப்படுகிறது.

எதிர்வரும் வாரங்களில், 18 வயதுக்குட்பட்ட பாவனையாருக்குச் சொந்தமான ஒவ்வொரு கணக்கும் தினசரி 60 நிமிட Screen Time வரம்பிற்கு தானாகவே அமைக்கப்படும். பாஸ்டன் சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிடல் டிஜிட்டல் வெல்னஸ் ஆய்வகத்தின் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, தற்போதைய கல்வி ஆராய்ச்சியின் பரிசீலனைக்குப் பிறகு இந்த வரம்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. 60 நிமிட வரம்பை அடைந்தால், இளம் பாவனையாளர்கள் தொடர்ந்து வீடியோக்களைப் பார்க்க Passcodeஐ உள்ளிடும்படி கேட்கப்படுவார்கள் மேலும் நேரத்தை நீட்டிக்க தெளிவான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியிருக்கும்.

குடும்பங்களை மேம்படுத்துதல் மற்றும் பாவனையாளர் பாதுகாப்பை உறுதிசெய்வதன் ஒரு பகுதியாக, Tiktokஇனால் Family Pairingஇற்காக மூன்று புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது:

TikTokஇனால் Sleep reminder அம்சத்தையும் அறிமுகப்படுத்துகிறது, இதனால் பாவனையாளர்கள் இரவில் Offlineல் செல்ல நன்கு திட்டமிட முடியும். இந்த Appலிருந்து Log off செய்யுமாறு பாவனையாளர்களுக்கு நினைவூட்டும் ஒரு Pop-up தோன்றும். இந்தப் புதிய அம்சங்களைப் பற்றி பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்குக் அறிவுறுத்த, TikTok ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் மற்றும் துறையில் உள்ள நிபுணர்களுடன் இணைந்துள்ளது. Family pairing மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அம்சங்களைப் பற்றி பாவனையாளர்களுக்குக் கற்பிப்பதில் in-app இல் உள்ள ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend
Exit mobile version