பயன்படுத்தப்படாத ‘Data Rollover’ஐ அடுத்த பில் கட்டணத்திற்கு எடுத்துச் சென்று Postpaid வாடிக்கையாளர்களுக்கு வசதிகளை வழங்கும் Airtel

Share with your friend

எயார்டெல் லங்காவின் புரட்சிகர 4G சேவை மற்றும் Freedom Packs அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நிறுவனம் தனது முதல் Freedom Postpaid திட்டங்களுக்கான தனித்துவமான ‘Data Rollover’ அம்சத்தை முதன்முறையாக இலங்கைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அறிமுகத்தின் மூலம், வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படாத அனைத்து டேட்டாவையும் அடுத்த பில் செலுத்தும் வரை பயன்படுத்த வாய்ப்பளித்துள்ளது.

தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் Postpaid வாடிக்கையாளர்களிடம் தவணை கட்டணம் அறவிடுவது தற்போது ஒவ்வொரு கட்டண காலத்தின் முடிவிலும் ஒரு புதிய டேட்டா ஞரழவய ஒதுக்கீட்டை செய்து மற்றும் கடந்த கட்டண காலத்தின் போது பயன்படுத்தப்படாத அனைத்து டேட்டாவையும் ரத்து செய்கிறது. இப்போது வரை, Postpaid வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்திய இந்த கடந்த கால டேட்டாவை பயன்படுத்தி கொள்ள வேறு வழியில்லை மற்றும் ‘Data Rollover’ வசதிகள் இப்போது அந்த வாய்ப்பை வழங்குகிறது. அதுபோல, ‘Data Rollover’ வசதி, எயார்டெல் நிறுவனத்தை எளிமையான மற்றும் சிறந்த மதிப்பு கூட்டப்பட்ட வலையமைப்பு அனுபவமாக மாற்றுவது மட்டுமல்லாமல், முழுத் துறையிலும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன் வாடிக்கையாளருக்கு அதிகாரம் அளிப்பதற்காக இலங்கையில் தொலைபேசி தொலைத் தொடர்புக்கான ஒரு புத்தாக்கம் கொண்ட அணுகுமுறையையும் உருவாக்கும் முதலாவது நிகழ்வு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Postpaid வாடிக்கையாளர்கள் அடுத்த மாதம் தங்கள் மீதமுள்ள டேட்டா 200 GB வரை கொண்டு சென்று புதிய மாத நன்மையாகப் பயன்படுத்தலாம். இந்த புதிய அம்சம் Postpaid வாடிக்கையாளர்கள் டேட்டா காலாவதி மற்றும் அவர்கள் ஏற்கனவே பணம் செலுத்திய டேட்டா வீணாவதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்பதை உறுதி செய்கிறது. இந்த ‘Rollover’ அம்சமான புதிய Freedom Postpaid திட்டங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற வசதிகளுடன் இயல்பாக கிடைக்கும்.

“எங்கள் உலகத்தரம் வாய்ந்த 4G சேவைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுதந்திரம் கொடுக்க விரும்புகிறோம். எங்கள் சேவைகள் அனைத்தும் இப்போது தற்போதைய தரத்திலிருந்து சற்று விலகி, எளிமையான மற்றும் தடையற்ற தொலைபேசி தொடர்பை நோக்கி நகர்வதில் கவனம் செலுத்துகின்றன. தொழில்துறையில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட இரண்டு சேவைகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், மேலும் எயார்டெல் 4G உடன் உண்மையான வலையமைப்பு அனுபவத்தை அனுபவிக்க உங்களை அழைக்க விரும்புகிறோம்.” என எயார்டெல் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஆஷிஷ் சந்திரா தெரிவித்தார்.

இந்த அம்சம் மாதந்தோறும் பயன்படுத்தப்படாத டேட்டா இழப்பதைத் தடுக்கிறது, இதனால் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படாத டேட்டாக்களுக்கு பணம் செலவழிக்க வேண்டியதில்லை. குறிப்பாக ஒவ்வொரு மாதமும் மாறுபடும் டேட்டா தேவைகள் உள்ளவர்களுக்கு, இந்த Data Rollover வசதி மிகவும் நன்மை பயக்கும்.

எயார்டெல் லங்`கா தற்போது Freedom பிரிவின் கீழ் தொழில்துறையில் மிகவும் கவர்ச்சிகரமான இரண்டு Postpaid திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Freedom 900 கட்டணத் திட்டம் 40GB 4G டேட்டாவுடன்  ஏனைய வலையமைப்புகளுக்கு 500 நிமிட இலவச அழைப்பையும்,  Freedom 1800 கட்டணத் திட்டம் 100GB Any  time 4G டேட்டாவையும் ஏனைய வலையமைப்புகளுக்கு 500 நிமிட இலவச அழைப்பையும் வழங்குகிறது. இரண்டு தொகுப்புகளும் செல்லுபடியாகும் காலம் முழுவதும் எல்லையற்ற எயார்டெல் அழைப்புக்களை வழங்குவதுடன் டேட்டா Rollover Postpaid வசதிகளையும் உள்ளடக்கியது.

இந்த ‘Freedom Packs/Plans’ஆனது 2009இல் எயார்டெல் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து செய்த மிகப்பெரிய ஒற்றை முதலீடு ஆகும். எயார்டெல்லின் நோக்கம் – கட்டமைக்கப்பட்ட 4G சேவை பாவணையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதில் 99% இடையூறு இல்லாத வீடியோ பார்க்கவும் மற்றும் 4G சிக்னல்களுடன் மேம்படுத்தப்பட்ட உள்ளக Coverage வசதிகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாரதி எயார்டெல் லங்கா நிறுவனம் தொடர்பாக:

2009 ஜனவரி 12ஆம் திகதி இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும். தமது வணிக செயற்பாடுகளை ஆரம்பித்த 2009ஆம் ஆண்டிலிருந்து 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் எயார்டெல் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.airtel.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.


Share with your friend