பிரமாண்ட திரையில் அதீத துல்லியம்: Samsung’s Neo QLED 8Kஎவ்வாறு கண்கவர் காட்சிகளை வழங்குகிறது?

Share with your friend

பெரிய தொலைக்காட்சித் திரையானது பொதுவாக ஒரு நல்ல விடயமாகும். காலப்போக்கில், பெரிய தொலைக்காட்சிகள் அதிகம் விரும்பப்படுகின்றதாக மாறியது மட்டுமல்லாமல், நுகர்வோர் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டன. திரைப்படத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், இப்போது நமக்குப் பிடித்த கதைகளை மிகவும் யதார்த்தமான முறையில் திரையில் உயிர்ப்பிக்கின்றதால், அவை பார்வையாளர்களை அவர்கள் பார்க்கும் உள்ளடக்கத்தில் முழுமையாக மூழ்கவைக்கின்றன.

Samsung’s Neo QLED 8K தொலைக்காட்சியானது மிகப் பெரிய திரையை கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், அதிநவீன தொழில்நுட்பங்களின் மூலம் மிகையான உணர்வியல் பார்வை அனுபவத்தையும் வழங்குகிறது. குறிப்பாக, மிகப் பெரிய தொலைக்காட்சிகள் தற்போது சந்தையில் அதிகளவில் காணப்பட்டாலும், பெரிய திரை அனுபவத்தை வழங்குவதில் வியக்க வைக்கும் மூன்று முக்கிய அம்சங்களுடன் Samsung முன்னணியில் உள்ளது.

8K தெளிவுத்திறன் கொண்ட பெரிய தொலைக்காட்சிகளின் முழு திறனையும் திறக்கிறது

தொலைக்காட்சி திரைகள் அளவில் பெரிதாகும்போது, காட்சியின் தரத்தைப் பராமரிப்பது சவாலான விடயமாகும். ஆனால் Samsung’s Neo QLED 8K தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும்போது நான்கு மடங்கு அதிக Pixels வழங்குவதன் மூலம் இதை நிவர்த்தி செய்கிறது. இதனால் மிக நெருக்கமாக அமைக்கப்பட்ட Mini LEDs மற்றும் மேம்படுத்தப்பட்ட செயலாக்கத்துடன் உயர்தர காட்சித்தரம் கிடைக்கின்றது. இதனால் மிகப்பெரிய திரைகளிலும் கூர்மையான, உயிரோட்டமான காட்சிகளை வழங்குவது உறுதிசெய்யப்படுகின்றது. 

புதியதொரு செயல்திறனை வழங்குவதற்கான Samsung இன் அர்ப்பணிப்பை Neo QLED 8K இன் படத் தரத்தின் பின்னால் உள்ள இயக்கக் காரணிகளில் (driving forces) தெளிவாகக் காணலாம். இதில் Neural Quantum Processor 8K மற்றும் Quantum Matrix Technology Pro ஆகிய தொழில்நுட்பங்கள் துல்லியத்தினை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்து செயல்படுகின்றன, அதன் அற்புதமான யதார்த்தத்துடன் உள்ளடக்கத்தை உயிரோடு கொண்டு வருகின்றன.

Neural Quantum Processor 8K: தெளிவுத்திறன், நிறம் மற்றும் ஆழத்தை மேம்படுத்துதல்

Samsung இன் Neo QLED 8K தொலைக்காட்சியின் இதயமாக Neural Quantum Processor 8K உள்ளது. இந்த செயலி 64 வெவ்வேறு Neural வலையமைப்புகளைப் பயன்படுத்தி, உண்மையான நேரத்தில் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்து மேம்படுத்துகின்றது, அத்துடன், குறைந்த தெளிவுத்திறன் கொண்ட உள்ளடக்கத்தை பிரமிக்க வைக்கும் 8K தெளிவுத்திறனுக்கு உயர்த்துகின்றது. இது நீங்கள் பார்ப்பது சாதாரண வரையறை, உயர் வரையறை, அல்லது முழு உயர் வரையறை உள்ளடக்கம் என்றாலும், அது இதுவரை இல்லாத அளவிற்கு ஆழமான படமாக மாறும் என்பதைக் குறிக்கிறது.

Samsung இன் இந்த செயலியானது தானாக இயங்கும் HDR மறுபரிசீலனை வசதியையும் கொண்டுள்ளது. இது திரையின் பரந்த நிற வரம்பு மற்றும் நம்பமுடியாத அதிகபட்ச பிரகாசத்தை முழுமையாகப் பயன்படுத்துகிறது. AI தொழில்நுட்பம் ஒவ்வொரு காட்சியையும் மேம்படுத்தி, பிரகாசமான மற்றும் இருண்ட பகுதிகளில் உள்ள விபரங்களை மெருகூட்டுகிறது.

High Dynamic Range (HDR) வீடியோ Standard Dynamic Range (SDR) உள்ளடக்கத்துடன் ஒப்பிடுகையில், பிரகாசமான வெளிச்சத்துடன் பரந்த அளவிலான நிற வரம்பைக் காட்டுகின்றன. அத்துடன், Quantum Dot தொழில்நுட்பத்தால் இயங்கும் அசாதாரண மாறுபாடு மற்றும் தெளிவான நிறங்களுடன் நீங்கள் பார்க்கும் அனைத்து காட்சிகளும் மேலும் ஈர்க்கக்கூடியவையாக இருப்பதை இது உறுதி செய்கிறது.

Neural Quantum செயலி மூலம் இயக்கப்படும் மற்றொரு புதுமையான அம்சமாக Real Depth Enhancer Pro விளங்குகிறது. AI ஆழமான கற்றலைப் பயன்படுத்தி பார்வையாளர் திரையில் எங்கு கவனம் செலுத்துகிறார் என்பதைக் கண்டறிந்து அந்தப் பொருளை முன்புறத்திற்குக் கொண்டுவரும். இது அசாதாரணமான ஆழம் மற்றும் விபரங்களுடன் மூன்று அளவிலான தோற்றத்தை உருவாக்கி, ஒட்டுமொத்த பார்வை அனுபவத்தை மேம்படுத்துகிறது.

Quantum Matrix Technology Pro: Quantum Mini LEDக்களுடன் சிறந்த துல்லியம்

Quantum Matrix Technology Pro என்பது Samsung இன் Neo QLED 8K தொலைக்காட்சியின் முக்கியமான பகுதியாகும். கருப்பு நிலைகளை மேம்படுத்தவும், துல்லியமான பின்னணி ஒளி கட்டுப்பாட்டுடன் மாறுபாட்டை அதிகரிக்கவும் Quantum mini LEDக்கள் பயன்படுத்தப்படுகின்றது. இந்த mini LEDக்கள் வழக்கமான LEDக்களைப் போல் 1/40 அளவிற்கு குறைவாகும். மேலும், இது திரையை அதிக அடர்த்தியானதாக மாற்றி, படத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு, தெளிவான நிறங்கள் மற்றும் பிரகாசமான வெளிச்சங்களுடன் கூடிய தெளிவான பாணியை பராமரிக்க உதவுகிறது.

14-bit HDR செயலாக்கத்துடன், Samsung இன் Neo QLED 8K தொலைக்காட்சி, படத்தின் மிக வெளிச்சமான மற்றும் மிகவும் இருண்ட பகுதிகளில் கற்பனை செய்ய முடியாsத அளவிலான துல்லியத்தினை வெளிப்படுத்த முடியும். இது மாறுபாட்டை அதிகரிக்க உதவுவதோடு மாத்திரமல்லாமல், ஒவ்வொரு காட்சியிலும் மிகவும் நுட்பமான விபரங்களும் தெளிவாகக் காணப்படும் என்பதையும் உறுதி செய்கிறது.

Quantum Matrix Technology மூலம் இயக்கப்படும் Shape Adaptive Light Control, திரையில் உள்ள தகவலுக்கு ஏற்ப பின்புற ஒளியை துல்லியமாகச் சரிசெய்கிறது. தெளிவை அதிகரிக்கிறது மற்றும் பிளவு ஏற்படுவதை தடுக்கும். இதன் பொருள், வெளிச்சமான ஒளிர்வுகள் வெளிச்சமாகவே இருக்கும். மேலும், இருண்ட காட்சிகள் முன்பை விட அதிக விபரங்களுடன் பார்வைக்கு இருண்டதாக இருக்கும்.

திரை தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் Samsung, தொடர்ந்து எல்லைகளைத் தள்ளி, வீட்டு பொழுதுபோக்கில் என்ன சாத்தியம் என்பதை மறுவரையறை செய்கிறது. Neo QLED 8K TV இந்த அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும், இது பார்வையாளர்களுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் தங்களுக்கு பிடித்த உள்ளடக்கத்தை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

Samsung இன் வாடிக்கையாளர் திருப்திக்கான அர்ப்பணிப்பு Neo QLED 8K தொலைக்காட்சியின் ஒவ்வொரு அம்சத்திலும் தெளிவாகத் தெரிகிறது. அதன் புதுமையான அம்சங்கள் முதல் சிறந்த படத் தரம் வரை, இந்த தொலைக்காட்சியானது இணையற்ற பார்வை அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

நுகர்வோர் மின்சார சாதனங்களில் முன்னணி கண்டுபிடிப்பாளராக Samsung Electronics வலம் வந்து கொண்டிருக்கின்றது. உலகளாவிய நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு புதுமையான தீர்வுகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. தொழில் வல்லுநர்கள் குழு மற்றும் சிறந்ததை வழங்குவதற்கான உறுதியுடன் எல்லைகளைத் தள்ளி தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தனது பயணத்தை Samsung தொடர்ந்து முன்னெடுக்கும்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply