Eyeview Sri Lanka

பிரிட்டிஷ் கவுன்சில் 2024-25 ஆம் ஆண்டிற்கான STEM புலமைப்பரிசில்களுக்காக பெண்களை அறிமுகப்படுத்துகிறது

Share with your friend

• பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் UK பல்கலைக்கழகங்கள் பெண் பட்டதாரிகளுக்கு Stem இல் உலகளாவிய நற்சான்றிதழ்களைப் பெறுவதற்கு ஆதரவளிக்க ஒத்துழைக்கின்றன.

• இந்த புலமைப்பரிசிலானது STEM கல்வியில் பாலின வேறுபாடுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், புத்தாக்கம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை வளர்ப்பதுமாகும்.

UK இன் கல்வி வாய்ப்புகள் மற்றும் கலாசார உறவுகளுக்கான சர்வதேச அமைப்பான பிரிட்டிஷ் கவுன்சில், UK பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, STEM திட்டத்தில் பெண்களுக்கான பிரிட்டிஷ் கவுன்சில் புலமைப்பரிசிலை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த மதிப்புமிக்க புலமைப்பரிசில் பெண் STEM பட்டதாரிகள் இங்கிலாந்தில் தங்கள் முதுநிலைப் படிப்பைத் தொடர வடிவமைக்கப்பட்டுள்ளது.

பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கும், பலவிதமான முன்னோக்குகளை உறுதி செய்வதற்கும், புதுமைகளை இயக்குவதற்கும் STEM துறைகளில் பெண்களின் இருப்பு அவசியமாகும். அவர்களின் இருப்பு பாலின ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், தனிப்பட்ட திறன்களைக் கொண்டு தொழிலாளர்களை வளப்படுத்துகிறது, இறுதியில் சமூகத்தின் நலனுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை அது மேம்படுத்துகிறது. உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2023 இன் படி, இந்த பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து 146 நாடுகளுக்கும் 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய பாலின இடைவெளி மதிப்பெண் 68.4% ஆக உள்ளது, இது கடந்த ஆண்டு பதிப்பை விட 0.3% முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

25 புலமைப்பரிசில்கள் இலங்கை மற்றும் பிற தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பெண் STEM புலமையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஐந்து UK உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களாவர். – லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம், ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகம், கிரீன்விச் பல்கலைக்கழகம், சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் மற்றும் கோவென்ட்ரி பல்கலைக்கழகம். இந்த புலமைப்பரிசில்கள் பயனாளிகளுக்கு STEM கல்வியில் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், இங்கிலாந்தின் மதிப்பிற்குரிய STEM துறைகளின் நிபுணத்துவத்தில் அவர்களை மேம்படுத்துவதன் மூலம், அவர்களின் சொந்த நாட்டில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை இயக்குவதற்கான அவர்களின் திறனை எளிதாக்குவதற்கும் உதவுகிறது. UK தற்போது அனைத்து UK வெளியீடுகளில் 55.2% சர்வதேச ஆராய்ச்சி ஒத்துழைப்புகளின் படி உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த புலமைப்பரிசிலானது கல்விக் கட்டணம், பயணச் செலவுகள், விசா, உடல்நலக் காப்பீட்டுக் கட்டணம் மற்றும் ஆங்கில மொழி ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கும். புலமையாளர்கள் தரவு விஞ்ஞானம்(Data Science), கணனி விஞ்ஞானம் (Computer Science), மருந்தியல் விஞ்ஞானம்(Pharmaceutical Science), மின்னணு மற்றும் மின் பொறியியல் (Electronic & Electrical Engineering) இயந்திரவியல் பொறியியல்(Mechanical Engineering), இயந்திரவியல் முகாமைத்துவம்(Mechanical Management)) பொறியியல் முகாமைத்துவம் (Engineering Management), சிவில் பொறியியல் முகாமைத்துவம் (Civil Engineering Management) அறிவுசார் சுகாதாரம் (Intelligent Healthcare), மெய்சார் விஞ்ஞானம் (Actuarial Science) போன்ற படிப்புகளை தொடரலாம்.

பிரிட்டிஷ் கவுன்சில், இலங்கையின் பணிப்பாளர் ஆர்லாண்டோ எட்வர்ட்ஸ் கருத்துத் தெரிவிக்கையில் ‘உலக சனத்தொகையில் ஏறக்குறைய பாதியளவு பெண்கள், எனவே உலகளாவிய சவால்களை திறம்பட கையாள்வதில் நாம் வெற்றிபெறுவதா இல்லையா என்பதில் பெண்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அறிவியலிலும் ஆராய்ச்சியிலும் ஆண்களும் பெண்களும் முழுமையாகப் பங்கு பெற வேண்டும். பாலின சமத்துவம் என்பது வெறும் கருத்து அல்ல, நிலையான வளர்ச்சி. இலக்குகளை அடைவது மனித முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. STEM புலமைப்பரிசில்கள் போன்ற திட்டங்களின் மூலம், இலங்கையின் பெண்களை வலுவூட்டுவதையும், அவர்கள் திறமைகளுடனும் செயலூக்கத்துடனும் பங்கேற்பதையும் உணர்ந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். STEM துறைகளில் அதிகமான இலங்கைப் பெண்கள் உலகளாவிய ரிதியில் பங்களிப்பதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினார்.

2020 முதல், இந்த திட்டம் 300 க்கும் மேற்பட்டோருக்கு புலமைப்பரிசில்களை வழங்கியுள்ளது. 2023-24 இல் உலகளாவிய ரீதியில், 92 புலமையாளர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த படிப்புகளில் பதிவு செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு, 2 இலங்கைப் பெண்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டு, இங்கிலாந்தில் முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தனர். இந்த புலமைப்பரிசில் மூலம், உலகமயமாக்கப்பட்ட உலகில் பெண்கள் வெற்றிபெறுவதற்கும் STEM துறைகளில் உலகளாவிய நற்சான்றிதழ்களைப் பெறுவதற்கும் வாய்ப்புகளை உருவாக்குவதற்கு பிரிட்டிஷ் கவுன்சில் தனது உறுதிப்பாட்டை ஸ்திரப்படுத்துகிறது..

இந்த புலமைப்பரிசில் இளம் பெண்களை தலைமைத்துவத்தை நோக்கி அவர்களின் முன்னேற்றத்தை ஆதரிப்பதற்கும், அவர்களின் பிராந்தியத்திலும் இங்கிலாந்திலும் உள்ள சகாக்களுடன் வலையமைப்பினுடாக வாய்ப்புகளை வளர்ப்பதன் மூலமும் STEM துறைகளில் அவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்புலமைப்பரிசில் இத்துறையில் சார்ந்திருக்கும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்களையும் வரவேற்கிறது. விண்ணப்ப காலக்கெடு பல்கலைக்கழகத்தைப் பொறுத்து மாறுபடும், பொதுவாக அது மார்ச் மற்றும் ஏப்ரல் 2024 க்கு இடையில் இருக்கலாம்.

தகுதி அளவுகோல்கள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அல்லது பங்கேற்கும் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களின் முழுப் பட்டியல் மற்றும் படிப்புகள்,  பல்கலைக்கழகம் சார்ந்த காலக்கெடு உள்ளிட்ட பிற தகவல்களுக்கு, தயவுசெய்து பின்வரும் இணையத்தளத்தை பார்வையிடவும்: https://www.britishcouncil.lk/study-uk/scholarships-and-funding/british-council-scholarships-women-stem 


Share with your friend
Exit mobile version