பிளாஸ்டிக் கழிவுகள்: பொறுப்பாக அகற்றுதல் மற்றும் நிர்வகித்தால் அது பெரும் வளமாகும்

Share with your friend

உலகில் வளரும் பல நாடுகள் முறையற்ற கழிவு நிர்வகிப்பு பிரச்சினையை எதிர்கொள்கின்றன. இலங்கையிலும் நிலைமை வேறுபட்டதல்ல. நாட்டில் ஒவ்வொரு நபரும் ஒரு நாளைக்கு சுமார் 0.64 கிலோகிராம் குப்பைகளை அப்புறப்படுத்துகிறார்கள், இது ஆண்டுதோறும் 4.8 மெட்ரிக் தொன் குப்பைகளை அவர்கள் சேர்க்கிறார்கள். இது பொறுப்பற்ற பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பிரச்சினையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

தற்போது, இலங்கையில் ஆண்டு பிளாஸ்டிக் நுகர்வு 16% அதிகரித்து 2,65,000 மெட்ரிக் தொன்களாக அதிகரித்து வருகிறது. எனவே, பிளாஸ்டிக் கழிவு பயன்பாட்டைக் குறைத்தல், மீள்பயன்பாடு மற்றும் நிலையான மீள்சுழற்சி ஆகியவற்றிற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இலங்கையை பசுமை பொருளாதாரமாக மாற்ற தேசிய கொள்கைகளுடன் செயல்படும் சேகரிப்பாளர்களையும் அமைப்புகளையும் அடையாளம் காண்பது முக்கியம்.

இரத்தினபுரி மாவட்டத்தில் நிறுவப்பட்ட ‘கோ மீள்சுழற்சி மையம்’ (Go Recycling Hub) – (GoR) என்பது சிலோன் எமரல்ட் வே நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சியாகும். வீட்டு கழிவுகளை பிரித்தல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது குறித்து அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) நடவடிக்கைகள், பிளாஸ்டிக்குகளை மீள் கொள்முதல் செய்தல் மற்றும் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களிலிருந்து அதிக அளவு பிளாஸ்டிக் ஆகியவற்றை சேகரித்தல் மற்றும் சேகரிக்கப்படும் மீள்சுழற்சிக்காக அனுப்ப நடவடிக்கை எடுக்கும்.

இது குறித்து Go Recycling Hub பணிப்பாளர் மங்கள பண்டாரா கூறுகையில், ‘வசதிகளை வழங்கும் நிறுவனமாக, பிளாஸ்டிக் கழிவுகளுக்கு புத்துயிரை அளிப்பதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம். அதனால்தான் 2020ஆம் ஆண்டில் GoR திட்டம் மற்றும் மூலப்பொருள்களை மீளப் பெற்றுக் கொள்ளும் வசதி (Material Recovery Facility – MRF) ஆகியவற்றை நாங்கள் தொடங்கினோம். PET (தண்ணீர், சோடா மற்றும் குளிர்பான போத்தல்கள் போன்றவை) மற்றும் PP (மாஜரின் கொள்கலன்கள் மற்றும் யோகட் கோப்பை), HDPE மற்றும் LDPE (உதாரணம்: கலப்பு ஷாம்பு ஃ கண்டிஷனர், தூய்மையான போத்தல்கள் மற்றும் பொலிதீன் பைகள் உட்பட) போன்ற பிளாஸ்டிக்குகளையும் நாங்கள் சேர்க்கிறோம். கொகோ-கோலா மற்றும் ஈகோ ஸ்பிண்டில்ஸ் இணைந்து அமைத்த வசதியைப் பயன்படுத்தி இந்த பொருட்கள் மீள்சுழற்சி செய்யப்படுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம். இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு குப்பைகளை சேகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.’ என அவர் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுப் பிரச்சினையை அடையாளம் கண்ட பின்னர் பணிக்குழு இந்த நடவடிக்கையைத் ஆரம்பித்தது. எனவே, நிலப்பரப்புகளில் அல்லது நீர் நிலைகளில் கொட்டப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக குப்பைத் தொட்டிகள் திட்டம், பை திட்டம், பிற விநியோக வலையமைப்பு திட்டம் மற்றும் கிராமப்புற திட்டம் ஆகிய நான்கு திட்டங்களை ‘GoR’ அறிமுகப்படுத்தியது. ‘நாங்கள் தற்போது இரத்தினபுரியில் ஏழு நகரங்களில் செயல்பட்டு வருகிறோம், 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த திட்டத்தை மேலும் ஏழு நகரங்களுக்கு கொண்டு செல்வதே எங்கள் குறிக்கோள்’ என்று மங்கள தெரிவித்தார்.

இந்த குப்பைத் தொட்டி திட்டத்தின் மூலம், கொகோ-கோலாவுடன் இணைந்து இரத்தினபுரி மாவட்டத்தில் 15 பிளாஸ்டிக் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. பை திட்டத்தின் மூலம், சிறிய மற்றும் பெரிய கடைகளுக்கு சுமார் 120 PET பாட்டில்களை (5 கிலோ) சேமிக்கக்கூடிய பெரிய பைகளை புழசுகள் வழங்கியுள்ளது. கடை உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக சேர்க்கப்படும் இந்த பிளாஸ்டிக், அவர்களிடமிருந்து ஒரு கிலோவுக்கு 20-25 ரூபா வரை வாங்கப்படுகிறது.

‘புழசு’ திட்டத்தின் ஊடாக பிரதேச சபை மற்றும் மாநகர சபைகளிடமிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அவர்களின் ‘பிற விநியோக வலையமைப்புகள்’ திட்டத்தின் மூலம் சேகரிக்கிறது. ‘நாங்கள் சிறிய அளவிலான பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பாளர்களிடமிருந்து பிளாஸ்டிக்கை சேகரித்து, ஒரு கிலோ PET பிளாஸ்டிக்கிற்கு 35 ரூபா செலுத்துகிறோம். நாங்கள் சேகரிப்பாளர்களுக்கு முறையாக பணம் செலுத்துவதால், எங்கள் சேகரிப்பாளர் வலையமைப்பு விரிவடைந்துள்ளது, மேலும் சேகரிக்க போதுமான பிளாஸ்டிக் கழிவுகள் எங்களிடம் உள்ளன. பெப்ரவரியில் நாங்கள் சுமார் 1000 கிலோ பிளாஸ்டிக்கைப் பெற்றோம், ஜூன் மாதத்தில் சுமார் 3000-4000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க முடிந்தது. இது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளை எங்கள் தேவைக்கு ஏற்ப கொண்டு வர அவர்களை ஊக்குவிக்கும்.’ என அவர் தெரிவித்தார்.

கொகோ-கோலா, ஈகோ ஸ்பிண்டில்ஸ், பிராந்திய சுகாதார மருத்துவ அலுவலகம் (MOH), பொது சுகாதார ஆய்வாளர் (PHI), கிராம சேவகர் அலுவலகம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் (CEA) இரத்தினபுரி மாகாண அலுவலகம் ஆகியவற்றின் உதவியுடன் GoR இன் புதிய கிராமப்புற திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து வீடுகள் மற்றும் பாடசாலைகளில் பொறுப்பான மீள்சுழற்சி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இங்கு, வீட்டிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வர குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக பாடசாலைகளில் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

‘மாவட்டத்தின் கிராமப்புறங்களில் பலருக்கு பல்வேறு காரணங்களால் வாழ ஒரு நிலையான வருமானம் இல்லை, மேலும் இது COVID-19 ஆல் மேலும் மோசமடைந்துள்ளது. எனவே, வேலைவாய்ப்பை அதிகரிப்பதும் இந்த புதிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.’ என மங்கள வலியுறுத்தினார்.


அவர்களின் சேவைகளை விரிவுபடுத்துவதற்காக, கொகோ-கோலா நிறுவனத்தினால் ஒரு சேகரிப்பு மத்திய நிலைய அலகு அலுவலகமாகவும் மற்றும் Bailing Machine மற்றும் அனைத்து வகையான பிளாஸ்டிக்களையும் சிறு துண்டுகiளாக (flakes) உடைக்கக் கூடிய இயந்திரத்துடன் 20 அடி நவீன மயப்படுத்தப்பட்ட கொள்கலனையும் வழங்குகிறது. இது தயாரிப்புகளுக்கான மூலப்பொருளாக மீள்சுழற்சி செய்வதற்கு முன்னர் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு குறிப்பிடத்தக்க மதிப்பைச் சேர்க்கக்கூடிய ஒரு விரிவான MRF வசதியை நிறுவ அவர்களின் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை ‘GoR’ வழங்குகிறது. ஜூலை 2021க்குள், அவர்கள் தங்கள் பிளாஸ்டிக் Crusher பயன்படுத்தி PETபோத்தல்களை நெரித்து இலங்கையின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான ஈகோ ஸ்பிண்டில்ஸுக்கு விற்பனை செய்வார்கள். பிளாஸ்டிக் துண்டுகளிலிருந்து நேரடியாக நூல் தயாரிக்கும் திறன் கொண்ட உலகில் தற்போதுள்ள இரண்டு தொழிற்சாலைகளில் ஈகோ ஸ்பிண்டில்ஸ் ஒன்றாகும்.

பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்ற போதிலும், கழிவு சேகரிப்பு பணியில் உள்ள சிக்கல்களை அரச தரப்பு கவனித்து வருகிறது. ‘சாதாரண சேகரிப்பாளர்கள் வீதிகளிலுள்ள மற்றும் அவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிப்பதைத் தவிர நீர் நிலைகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அவர்கள் சேகரிப்பதில்லை. குப்பை சேகரிப்பாளர்கள் சரியான நேரத்தில் வீடுகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்காதபோது, மக்கள் அதை எரிக்க முயற்சிக்கின்றனர்.’ என மங்கள சுட்டிக்காட்டினார். தினசரி குப்பை சேகரிப்புக்கு மேலதிகமாக, ‘GoR’ திட்டம் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒரு பெருநிறுவன சமூகப் பொறுப்பாக, ஆறுகள் மற்றும் பொது இடங்களிலிருந்து பிளாஸ்டிக் சேகரிப்பு திட்டங்களை மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply