Site icon Eyeview Sri Lanka

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி மஹியங்கனை சிறுவர் பூங்காவை புதுப்பித்துள்ளது

Share with your friend
FacebookTwitterLinkedinInstagramWhatsappEmail

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, மஹியங்கனை பிரதேச சபையிடமிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் அண்மையில் மஹியங்கனையிலுள்ள சிறுவர் பூங்காவை சிறுவர்களுக்கு நட்புறவான முறையில் புனரமைத்துள்ளது. சிறுவர்களிடையே ஆக்கப்பூர்வமான மனப்பாங்கை வளர்க்கும் வகையில், பூங்காவின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் நல்ல பழக்கவழக்கங்கள் குறித்த அறிவிப்புப் பலகைகளும் புதுப்பிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளன. 

புதிதாக புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03 ஆம் திகதி, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின், மஹியங்கனை கிளையின்  முகாமையாளர் அசங்க இரோஷான், மஹியங்கனை பிரதேச சபையின் தலைவர் கே.பி.குணவர்தன மற்றும் மக்கள் வங்கியின், மஹியங்கனை கிளை முகாமையாளர் சுதீர ஜயசிங்க ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டு பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது. 

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, 2015 ஆம் ஆண்டு மஹியங்கனை நகரில் இந்த சிறுவர் பூங்காவை நிர்மாணித்தது.  மஹியங்கனையிலுள்ள சிறுவர்கள் தங்களுடைய விடுமுறை நேரத்தை திறம்பட செலவிடுவதற்கு இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு நிலையமாக அமைந்துள்ளதோடு, இந்த செயற்படானது பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ்

பிஎல்சியின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் தனது 25ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, பின்னவல யானைகள் சரணாலயத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு பலகைகளை நிறுவுவதில் பங்களிப்பு வழங்கியது. 

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும், மேலும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். 1996ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பள்ஸ் லீசிங், 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங், பங்களாதேஷில் வெளிநாட்டுச் செயற்பாடுகள் உட்பட ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்பட்ட வங்கியல்லாத நிதியியல் அதிகார மையமாக வளர்ந்துள்ளது.


Share with your friend
FacebookTwitterLinkedinInstagramWhatsappEmail
Exit mobile version