பீப்பள்ஸ் லீசிங், கிரிபத்கொடை கிளையை இடமாற்றம் செய்து, தொடர்ந்து சிறந்த சேவையை வழங்குகிறது

Home » பீப்பள்ஸ் லீசிங், கிரிபத்கொடை கிளையை இடமாற்றம் செய்து, தொடர்ந்து சிறந்த சேவையை வழங்குகிறது
Share with your friend

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் கிரிபத்கொடை கிளையானது 18 ஜூலை 2022 அன்று இல.157/2/2, மாகொல வீதி, கிரிபத்கொடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. புதிய கிளையானது, கிளைச் செயற்பாடுகளின் பிரதான முகாமையாளர்  சமில் ஹேரத்தினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

கிரிபத்கொடை பிரதேசத்தின் சில்லறை மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கிரிபத்கொடை கிளை 06/07/2016 அன்று திறக்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதி, சேவை தரம் மற்றும் அணுகல் ஆகியவற்றை உறுதியளிக்கும் வகையில் கிளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு மேலும் சிறந்த சேவையை பெற, இடமாற்றம் செய்யப்பட்ட கிளைக்கு வருகை தருமாறு கிளைக் குழு, மதிப்புமிக்க வாடிக்கையாளர்களை அழைக்கிறது. 

பிஎல்சி என்பது இலங்கையின் முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனம் என்பதோடு, இது அரசுக்கு சொந்தமான மக்கள் வங்கியின் முதன்மை துணை நிறுவனமாகும். பிஎல்சி 1996 இல் ஒரு விசேட லீசிங் நிறுவனமாக வணிக நடவடிக்கைகளை ஆரம்பித்ததோடு, 2011 இல் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. 

பிஎல்சி பல்வேறு வகையான நிதிச் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக புதுமையான டிஜிட்டல் தீர்வுகள் உட்பட, வங்கியல்லாத நிதி நிறுவனத் துறையில் ஒரு அளவுகோலை அமைக்கிறது. 

நிதித் தீர்வுகளை வழங்கும் பயணத்தின் 25ஆவது மைல்கல்லைக் குறிப்பதோடு, பங்களாதேசில் ஒரு வெளிநாட்டு முயற்சி உட்பட நிபுணத்துவத்தின் தொடர்புடைய பகுதிகளில் ஆறு துணை நிறுவனங்களுடன் வங்கி அல்லாத நிதி அதிகார மையமாகவும் பிஎல்சி பல்வகைப்படுத்தப்பட்டுள்ளது.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: