புதிய chatbot, stickers, AR Lenses மற்றும் ஏனைய அம்சங்களின் ஊடாக உலகளாவிய ரீதியில் உள்ள உதைபந்தாட்ட ரசிகர்களைக் கொண்டாடிய Rakuten Viber

Home » புதிய chatbot, stickers, AR Lenses மற்றும் ஏனைய அம்சங்களின் ஊடாக உலகளாவிய ரீதியில் உள்ள உதைபந்தாட்ட ரசிகர்களைக் கொண்டாடிய Rakuten Viber
Share with your friend

போட்டிகளின் கணிப்பு மற்றும் லீடர்போர்ட், chatbot, stickers, AR Lenses உள்ளிட்ட  வேடிக்கையான மற்றும் ஊடாடும் அம்சங்களுடன் அதன் பயனர்களை போட்டி மனப்பான்மைக்கு கொண்டு வருவதன் மூலம் Viber கால்பந்தைக் கொண்டாடுகிறது.

தனிப்பட்ட மற்றும் பாதுகாப்பான குறுஞ்செய்தி மற்றும் குரலை அடிப்படையாகக் கொண்ட தொடர்பாடலில் உலகின் முன்னோடியான Rakuten Viber, சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு ஊடக அலைவரிசைகளில் உதைபந்தாட்டம் தொடர்பான செய்திகளைத் தொடர்வதற்காக ஊடாட்டம் நிறைந்த மற்றும் விளையாட்டுக்கள் நிறைந்த chatbot, AR Lenses, sticker pack போன்ற அம்சங்களை அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிவித்துள்ளது. இந்தப் புதிய அம்சங்கள் நவம்பர் மாதம் முதல் ஆரம்பிப்பதுடன், இவை இரண்டு மாதங்களுக்குக் காணப்படும்.

உதைபந்தாட்டம் என்பது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பில்லியன் கணக்கான இரசிகர்களைக் கொண்ட உலகில் மிகவும் பிரபல்யமான விளையாட்டாகும். இந்த விளையாட்டைக் கொண்டாடும் நோக்கிலும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நாடுகளை ஒன்றாகக் கொண்டுவரும் நோக்கிலும் தனது பயனர்கள் உதைபந்தாட்டம் குறித்த செய்திகளைத் தொடர்வதற்கும், அது தொடர்பான தகவல் பரிமாற்றங்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையிலும் Viber பிரசாரமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Viber இன் 2022 உலக உதைபந்தாட்ட பிரசாரமானது தனது மில்லியன் கணக்கான செயலிப் பாவனையாளர்கள் தனிப்பட்ட அல்லது குழு சட்களில் போட்டி தொடர்பான எதிர்வுகூறல் chatbot ஊடாக முன்வைத்து இவ்விளையாட்டினைக் கொண்டாடுவதற்கு உதவுகிறது. தமக்கு விருப்பமான அணிகளைத் தொடர்வதற்கு அப்பால், போட்டி முடிவுகள் தொடர்பான கணிப்புக்களை குளோபள் லீடர்போர்ட்டில் பதிவுசெய்து பெறுமதியான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.   

மேலதிக அம்சங்களில் உள்ளடங்கியுள்ளவை: 

AR Lenses: அணிகளுக்கான புள்ளிகளுக்காக இரண்டு AR Lenses ஐ அறிமுகப்படுத்தியிருப்பதுடன், உதைபந்தாட்டம் மற்றும் ஏனையவை குறித்த தொனிப்பொருளில் அவை அமைந்துள்ளன. 

Gamified Lenses : பயனர்கள் கோல் அடிப்பது அல்லது எத்தனை தடவைகள் பந்தை தலையால் அடிக்கமுடியும் என்பதைப் பார்ப்பதற்கு வழிவகுக்கும் வகையில் இரண்டு gamified Lenses அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

Stickers : இந்தப் புதிய  sticker பொதிகள் உதைபந்தாட்டத்தின் பல்வேறு அம்சங்களைப் பறைசாற்றும் வகையிலான படங்களைத் தாங்கியதாக ஆங்கிலம் மற்றும் மேலும் 18 மொழிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. 

Channels : தமக்கு விருப்பமான அணி தொடர்பான உடன் செய்திகள் மற்றும் பிந்திய செய்திகளை அவ்வப்போது அறிந்து கொண்டு இரசிகர்கள் புதிய தகவல்களுடன் இருக்கின்றார்கள் என்பதை ஒன்பது விளையாட்டு ஊடக அலைவரிசகைள் உறுதிப்படுத்துகின்றன.

உலகெங்கிலும் உள்ள பல ஆர்வமுள்ள கால்பந்து ரசிகர்களுடனும், Viber இன் உலகளாவிய பார்வையாளர்களுடனும் எமது பயனர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருப்பதை நாம் விரும்புகின்றோம். எமது பயனர்கள் ஒருவருடன் ஒருவர் இணைப்பில் இருப்பதற்குப் பல்வேறு அம்சங்களை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்” என Rakuten Viber இன் சிறந்த சந்தைகளின் வளர்ச்சிக்கான சிரேஷ்ட பணிப்பாளர் அட்னாஸ் ரெய்கோவ் தெரிவித்தார். “எங்கள் பயனர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுடன் சேர்ந்து தமக்கு விருப்பமான அணியின் வெற்றிகளைக் கொண்டாடலாம். முற்கூட்டிய கணிப்புக்கள், போட்டிகளின் விபரங்கள் அல்லது குளோபள் லீடர்போட் என்பவற்றை Viber செயலியை திறப்பதன் ஊடாக இலகுவில் பரிசீலியுங்கள்” என்றார்.

இந்தப் பிரசாரத்துக்கான விடயங்களைப் பெற்றுக் கொள்வதற்கான இணைப்புக்கள்:


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: