புத்தாக்கம் மற்றும் விஞ்ஞான பொறியியல் கற்கை, தொழில்நுட்பத் திறன்களை ஊக்குவிக்க ROBOFEST 2021 ஐ பிரகடனப்படுத்துகிறது SLIIT

Share with your friend

-போட்டிக்கான பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன-

பாடசாலை மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்குப் புதிய ரொபோட்டிக் தொழில்நுட்பங்களை வடிவமைக்க, கட்டமைக்க மற்றும் பழக்கப்படுத்திக்கொள்ள ஒரு தளத்தை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட SLIIT இன் வருடாந்த ரொபோட்டிக் போரான ‘ROBOFEST 2021’  ஒரு மோதலுக்குத் தயாராகிறது. 

SLIIT இன் பொறியியல் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ROBOFEST 2021 போட்டி தனது 11வது மைல்கல் வருடத்தை அடையவிருப்பதுடன், வழங்கப்பட்ட கட்டளைவிதிகளுக்கு அமைய சவாலான இலக்கை அடைந்து ரொபோக்களை வடிவமைப்பதில் பங்குபற்றுனர்கள் தமக்குக் காணப்படும் அனுபவ அறிவை வெளிப்படுத்த ஒரு தளமாகவும் அமைகிறது.

பதிகணினியியல் வடிவமைப்பு, பதிகணினியியல் பொறியியல் மற்றும் மைக்ரோபுரோஸசை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பு, டிஜிட்டல் மற்றும் அனலொங் மின்னியல் , கட்டுப்பாட்டுப் பொறிமுறை மற்றும் ரொபோட்டிக் மற்றும் மென்பொருள் பொறியியல் ஆகிய துறைகள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பது போன்றவற்றை இந்தப் போட்டி  ஊக்குவிக்கிறது. தற்பொழுது காணப்படும் தொற்றுநோய் சவாலைக் கருத்தில் கொண்டு இந்த வருடத்தின் போட்டி மெய்நிகர் தளங்களின் ஊடாக நடத்தப்படும். 

குழுவாகப் பணியாற்றுவதற்கு சரியான அத்திவாரத்தையும், பங்குபற்றுனகள்  மற்றும் தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கிடையில் வலுவான பிணைப்பை ஏற்படுத்தல், அனைவரும் தமது திறன்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புக்கள் என்பவற்றையும் ROBOFEST 2021  வழங்குகிறது.

பாடசாலைப் பிரிவு மற்றும் பல்கலைக்கழகப் பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளில் ROBOFEST 2021   நடத்தப்படவுள்ளது. பாடசாலைப் பிரிவானது தரங்களின் அடிப்படையில் இன்றி அனைவருக்கும் திறந்திருக்கும் என்பதுடன், ஒவ்வொரு குழுவும் 05 வரையிலான உறுப்பினர்களைக் கொண்டிருக்க முடியும் அதேநேரம், ஒரு பாடசாலையிலிருந்து எத்தனை குழுக்களும் போட்டியிட முடியும்.  இந்தப் பிரிவில் போட்டியாளர்கள் ரோபோக்களை உருவகப்படுத்தும் மென்பொருள்களைப் பயன்படுத்துவதுடன், கோடுகள் வழியே செல்லக்கூடிய ஒரு மொபைல் ரொபோவை கோர்டிங் செய்தல் மற்றும் virtual space இல் தடைகளைத் தவிர்த்து இலக்கை அடையக்கூடிய வகையில் அவற்றை வடிவமைக்க வேண்டும்.

பல்கலைக்கழகப் பிரிவானது அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகத்துக்கு சமமான பட்டத்தை வழங்கும் நிறுவனங்களில் கல்வி பயிலும் அனைத்து பட்டதாரிகளுக்கும் விண்ணப்பிக்கக் கூடியதாகும். ஒவ்வொரு குழுவும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாக இருப்பதுடன், ஒரே நிறுவனத்திலிருந்து எத்தனை குழுக்கள் வேண்டுமாயினும் போட்டியிட முடியும். இந்தப் பிரிவில் virtual space இல் கடினமான இலக்கை அடைவதற்குப் போட்டியாளர்கள் ரொபோட்டிக் கைகளை உருவாக்க மற்றும் கோர்டிங் செய்ய வேண்டும். 

ROBOFEST 2021   ற்கான பதிவுகள் ஆரம்பமாகியிருப்பதுடன், www.robofest.lkஎன்ற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பத்திற்கான விதிகளைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். பல்கலைக்கழக அணிகள் பதிவுசெய்வதற்கான இறுதித் திகதி செப்டெம்பர் 12ஆம் திகதி அத்துடன், பாடசாலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பதிவுசெய்வதற்கான திகதி செப்டெம்பர் 20ஆம் திகதியாகும். ROBOFEST 2021 இறுதி நிகழ்வு செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இரு பிரிவுகளுக்கும் மிகவும் கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்படும்.

ROBOFEST 2021 இற்கான செயலமர்வு/வெபினார்களை SLIIT ஏற்பாடு செய்துள்ளது. பங்குபற்றும் மாணவர்கள் https://forms.gle/MgEF6iATv6mhBGvr9 என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பதிவுகளை மேற்கொண்டு வெபினார்களில் இணைந்துகொள்ள முடியும். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கலாநிதி.அன்டன் ஹெட்டியாராச்சி டொன் அவர்களை 076 559 8316 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது போட்டியின் முகப்புத்தக இணைப்பான  இற்குள் நுழைந்து அல்லது என்ற இணையத்தளத்தில் நுழைவதன் ஊடாக ROBOFEST 2021 பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply