Eyeview Sri Lanka

புத்தாக்க முறையிலான, அனைத்தும் ஒரே இட த்தில் அமைந்த கட்டணத் தீர்வுடன் இலங்கையில் புரட்சிகரமான மாற்றத்தை Pay&Go ஏற்படுத்துகிறது

Share with your friend

கட்டணம் செலுத்தல்களில் சௌகரியத்தையும் வினைத்திறனையும் மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட முன்னோடியான முயற்சியாக, முன்னணியில் திகழ்கிறதும் புத்தாக்கம் மிக்கதுமான கட்டணத் தீர்வான Pay&Go தன்னை இலங்கையில் ஒரு ஆட்டத்தையே மாற்றியமைப்பவராக நிலைநிறுத்திக் கொள்கிறது. நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட சுய-சேவைக் கூடாரங்கள், 750+ POS முறைமைகள், மனதை ஈர்க்கக்கூடிய 100,000+ செயலிப் பதிவிறக்கங்கள் ஆகியவற்றுடன் Pay&Go எந்நேரமும் கிடைக்கக்கூடிய விதத்தில் தொடர்ச்சியான, இடையூறற்ற பரிவர்த்தனைகளுக்கு விருப்பமான தளமாக விளங்குகிறது. 

கையடக்கத்தொலைபேசி மூலமான கட்டணம் செலுத்தல்கள், பயன்பாடுகள், தொலைக்காட்சி, நிலையான இணைப்பு, இணையத்தளம் போன்ற அன்றாடப் பரிவர்த்தனைகள் முதல் காப்புறுதியும் நிதியும் போன்ற சிக்கல் மிகுந்த பரிவர்த்தனைகள் வரை துரிதமான, பாதுகாப்பான, நம்பகமான கட்டணம் செலுத்தல் அனுபவத்தை Pay&Go உறுதி செய்கிறது. தொழிற்துறையில் Pay&Go ஐ வேறுபடுத்திக் காட்டுவது யாதெனில் அதன் விரிவான, பாதுகாப்பான, நம்பகமான சுற்றுச்சூழல் அமைப்பாகும், இது பயனர்களை POS முனையங்கள், சுய-சேவைக் கூடாரங்கள், தடையற்ற தீர்வுகளை ஆதரிக்கும் பயனர் நட்பான கையடக்கத்தொலைபேசிச் செயலிகள் ஆகியவற்றின் மூலம் பரிவர்த்தனைகளைச் சிரமமின்றி மேற்கொள்ள அனுமதிக்கிறது.

அதன் தூரநோக்குப் பிரச்சாரத் திட்டமான ‘வாழ்க்கை எளிதானது (Life is Easy)’ என்பதை வெளிக்காட்டும் Pay&Go, எந்தவொரு கட்டணம் செலுத்தலையும் ஒரே கூரையின் கீழ் வழங்குவதற்கான செயலியின் அர்ப்பணிப்பைப் பறை சாற்றுகிறது. Pay&Go, வரிசைகளுக்கான தேவையை நீக்கி POS, சுய சேவைக் கூடாரம், அதன் பயனர் நட்பான கையடக்கத்தொலைபேசிச் செயலி ஆகியவற்றினூடாகக் கட்டணம் செலுத்துவதை மையப்படுத்துகிறது. கட்டணம் செலுத்தலுக்கான நினைவூட்டல்கள், செலவுத் திறன் மிக்க தீர்வுகள்,  நேரத்தை மீதப்படுத்தும் செயன்முறைகள் என்பனவும் காணப்படுகின்றன. Pay&Go வின் தொந்தரவற்ற கட்டணம் செலுத்தல் தீர்வுகளுடன், வாழ்க்கையின் சவால்களை நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்ல வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதை இந்தப் பிரச்சாரம் இலக்காகக் கொண்டிருக்கிறது.

‘வாழ்க்கை எளிதானது’ என்ற பிரச்சாரத்தின் திடமான அத்திவாரத்தில், ஒவ்வொரு தயாரிப்பு வகையிலும் எதிரொலிக்கின்ற கவர்ச்சிகரமான ஹேஷ்டேக்குகளை Pay&G அறிமுகப்படுத்துகிறது. தண்ணீர் விலைப்பட்டியலுக்கு அதன் #LifeIsRefreshing என்ற ஹேஷ்டேக் இருக்கிறது . மின்சார விலைப்பட்டியல் #LifeIsBright என்பதைத் தேர்ந்தெடுக்கிறது. காப்புறுதிக்காக #LifeIsSafe என்ற ஹேஷ்டேக் பயனர்களுக்கு அவர்களின் பரிவர்த்தனைகளில் பாதுகாப்பை உறுதி செய்கிறது. கையடக்கத் தொலைபேசியின் பணம் மீள் நிரப்பல்கள் #LifeIsCommunication ஆக மாறுகிறது. தொலைக்காட்சிக்கான கட்டணம் செலுத்தல்கள் #LifeIsEntertainment ஆக மாறுகிறது. நிதிசார் கட்டணம் செலுத்தல்கள் #LifeIsPlanning என்பதைத் தேர்ந்தெடுக்கின்றன. இறுதியாக, நிலையான இணைப்புகளுக்கும் அகல-அலைவரிசைத் தொடுப்புக்கும் (Broadband) #LifeIsConnected என்ற ஹேஷ்டேக், Pay&Go உங்கள் விரல் நுனியில் கொண்டு வரும் தொடுப்புடைமையை வலியுறுத்துகிறது.

ஒவ்வொரு ஹேஷ்டேக்கும் ஒரு முகப்படையாளம் மாத்திரமல்ல; இது ஒரு வாழ்க்கை முறை வாக்குறுதியாகும், இது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் Pay&G கொண்டு வருகிற தொல்லையின்மையையும் மகிழ்ச்சியையும் முன்னிலைப்படுத்துகிறது.

Pay&Go என்பது வெறும் கட்டணம் செலுத்தல் தீர்வாக இருப்பதைத் தாண்டியது; இது அதன் பயனர்களின் சௌகரியத்தை மறுவரையறை செய்யும் விளைவுமிக்க ஒத்துழைப்புகளுக்கான ஒரு ஊக்கியாக விளங்குகிறது. தேசிய நீர் வழங்கல், வடிகால் சபை மற்றும் கண்டி மாநகர சபை போன்ற அரசாங்க அதிகாரசபைகளுடன் கூட்டுச்சேர்வதன் மூலம், Pay&Go ஆனது வெறுமனே ஒரு கட்டணம் செலுத்தல் தீர்வு என்பதையும் தாண்டி அரச துறையில் டிஜிட்டல் தீர்வுகளைத் தழுவுவதற்கு ஒரு உந்து சக்தியாக மாறியிருக்கிறது. இந்த ஒத்துழைப்புகளின் ஊடாக,  இலங்கை அரசின் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றகரமானதும் வினைத்திறன் மிக்கதுமான நிர்வாகச் சூழல் அமைப்புக்கான தூரநோக்குப்பார்வைக்கு இணங்க, அத்தியாவசிய சேவைகளின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு Pay&G பங்களிப்புச் செய்திருக்கிறது. 

Pay&Go என்பது செளகரியத்தை மேம்படுத்தித் தொழில்நுட்பத்தை அரவணைப்பது மாத்திரமல்ல; இது ஒரு எளிய கட்டணம் செலுத்தல் தளமாக இருப்பதை விட விசாலமான வீச்சுக்கு நகர்கிறது. இது ‘வாழ்க்கை எளிதானது’ என்பதை அனைவருக்கும் நனவாக்கி ஒரு வாழ்க்கை முறைத் தெரிவாக மாறுகிறது.. 

Pay&Go இன் தொல்லையின்மையை அனுபவியுங்கள் – அங்கு பணம் செலுத்துதல்கள் எளிமைப்படுத்தப்படுகின்றன.


Share with your friend
Exit mobile version