பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் பண்படுத்த உதவிய DIMO மற்றும் Mahindra Tractors

Home » பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் பண்படுத்த உதவிய DIMO மற்றும் Mahindra Tractors
Share with your friend

இலங்கையில் முன்னணியிலுள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, அதன் நீண்டகால பங்காளியான Mahindra Tractors உடன் இணைந்து, இந்த கடினமான காலத்தில் விவசாய நிலத்தை பண்படுத்துவதற்கும், பெரும் போக செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கிலும், உள்ளுர் விவசாயிகளுக்கு  உதவும் நோக்கத்துடன் அவர்களின் நலனுக்காக (விவசாயத்தின் நிலைத்தலின் பொருட்டு) திட்டமொன்றை சமீபத்தில் நிறைவு செய்தது.

இந்த 3 மாத திட்டத்தின் மூலம், 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பண்படுத்தப்பட்டன. நிலம் பண்படுத்தும் தேவை கொண்ட மற்றும் இயந்திரங்களுக்கான நிதி வசதி இன்றி காணப்பட்ட இலங்கையிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 165 விவசாயிகள் இதன் மூலம் பயனடைந்தனர். இந்தத் திட்டத்தின் ஊடாக விவசாய சமூகத்தினர் வெற்றிகரமாக அதிக பணத்தை சேமிக்க முடிந்துள்ளமையானது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது.

விவசாய திணைக்களத்துடன் இணைந்து, இந்த திட்டத்திற்காக மொணராகலை, கிளிநொச்சி, தம்புள்ளை, அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் உள்ள விவசாய சமூகங்களை DIMO அணுகியது. அண்மைக் காலத்தில் நில பண்படுத்தலுக்கான செலவுகள் 3 மடங்காக அதிகரித்ததன் காரணமாக, விவசாயிகள் எதிர்கொள்ளும் அழுத்தமான கவலை நிலையை DIMO அடையாளம் கண்டுள்ளது. அத்துடன் எரிபொருள் விலையேற்றத்தால் இச்சுமை மேலும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பெரும் போகத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில், தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் உள்ள விவசாயிகளுக்கு அவர்களது சுமையை குறைக்கும் வகையில், அவர்களது நிலத்தை பண்படுத்துவதற்கு அவசியமான அனைத்து இயந்திரங்களும் இத்திட்டத்தின் மூலம் இலவசமாக வழங்கப்பட்டன.

இத்திட்டத்தில், விவசாயிகளுக்கு தேவையான Mahindra Tractors (உழவு இயந்திரங்கள்) , Rotovators, Disc Ploughs, Tine Tillers (கலப்பைகள்) போன்ற நிலத்தை பண்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் அதற்கு தேவையான எரிபொருளை DIMO மற்றும் Mahindra Tractors இணைந்து விவசாயிகளுக்கு வழங்கியது. இத்திட்டத்தின் மூலம் தம்புள்ளை, அநுராதபுரம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலுள்ள நெல் விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்ட அதேவேளை, மொணராகலையில் உள்ள சோள விவசாயிகளுக்கும் பெரும் போகத்திற்கான நிலத்தை தயார்படுத்துவதில் உதவிகள் வழங்கப்பட்டன.

சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட DIMO நிறுவனத்தின் தலைவரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே, “வளர்ச்சியின் சரியான பங்காளியான DIMO நிறுவனம் எப்போதும் உள்ளூர் விவசாய சமூகத்தின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வலுவூட்டி வருவதுடன், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D), விவசாய உள்ளீடுகள், விவசாய செயற்பாடுகள், விவசாய மதிப்பு சங்கிலியில் செயலாக்கம் / உற்பத்தி, சில்லறை விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றின் மூலம் அவர்களுக்கு உதவி வருகின்றது. தேசத்தின் அடுத்த தலைமுறை விவசாயத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுக்கும் அதே வேளையில், விவசாய பெறுமதிச் சங்கிலியின் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்துகின்ற, இலங்கையில் உள்ள குறிப்பிடத்தக்க சில நிறுவனங்களில் ஒன்று எனும் வகையில், நாம் பெருமை கொள்கிறோம். எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்திலும், குறிப்பாக சவாலான காலகட்டங்களில் விவசாயிகள் வகிக்கும் ஒருங்கிணைந்த பங்களிப்பைப் புரிந்து கொண்ட DIMO, Mahindra Tractors ஆகியன இணைந்து, கூட்டாண்மைகள் மற்றும் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் மீளெழுச்சி கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்காக, தனது நிலைபேறான தன்மை நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இத்திட்டத்தை மேற்கொண்டுள்ளது.” என்றார்.

இத்திட்டம் தொடர்பில் தம்புள்ளை பெல்லன்ஓயா விவசாய சங்கத்தின் தலைவர் சேரசிங்க பண்டார தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட போது, “தற்போதைய பொருளாதார சவால்களால் விவசாய சமூகம் இன்று பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளது. இவ்வாறான சவால்களுக்கு மத்தியில், சமூக சேவையின் அடிப்படையில், நிலத்தை பண்படுத்துவதில் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க Mahindra Tractors உடன் DIMO முன்வந்துள்ளது. இந்த பொருளாதார சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு இத்திட்டமானது, விவசாய சமூகத்திற்கு மகத்தான வகையில் அதிகாரமளிக்குமென நாம் நம்புகிறோம்.” என்றார்.

பெரும் போகத்தில் ஏற்பட்ட சாதகமற்ற காலநிலை உள்ளிட்ட பல்வேறு சவால்கள் மற்றும் தடைகளை சமாளித்து, இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, தங்களுக்கு உதவியமைக்காக DIMO மற்றும் Mahindra Tractors நிறுவனங்களுக்கு, பல்வேறு விவசாய சமூகத்தினரும் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.

END


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: