பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் கோழி இறைச்சி விநியோகத்தை மீள உறுதி செய்யும் New Anthoney’s Farms

Home » பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் கோழி இறைச்சி விநியோகத்தை மீள உறுதி செய்யும் New Anthoney’s Farms
Share with your friend

நுகர்வோர் தொடர்ச்சியாக தமக்கு பிடித்த கோழி இறைச்சி வர்த்தக நாமத் தயாரிப்புகளை நுகர்வதை உறுதி செய்யும் வகையில், New Anthoney’s Farms (பிரைவட்) லிமிடெட், போதியளவு மற்றும் தடங்கலில்லாத கோழி இறைச்சி விநியோகத்தை மேற்கொள்வதை உறுதி செய்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், கோழிகளுக்கு அவசியமான தீன்களைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் தட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தமது இறைச்சித் தெரிவுகளை தொடர்ந்தும் விநியோகிப்பதற்கு தன்னை அர்ப்பணித்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

போதியளவு டொலர்கள் கையிருப்பிலில்லாமை காரணமாக தீனிக்களுக்கு அவசியமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் காணப்படும் நெருக்கடி நிலை மற்றும் அவற்றின் விலைகள் சர்வதேச சந்தையில் பெருமளவில் அதிகரித்துச் செல்கின்றமையினால், தரமான, சிறந்த மற்றும் போஷாக்கான தீன்களைப் பெற்றுக் கொள்வது கோழி இறைச்சித் துறைக்கு சவால்கள் நிறைந்த விடயமாக அமைந்துள்ளது. இதனால் நடப்பு ஆண்டில் கோழி இறைச்சி உற்பத்தி ஐந்தில் ஒரு பங்காக வீழ்ச்சியடையலாம் என அனுமானித்துள்ளது.

New Anthoney’s Farms இன் தவிசாளரும் இணை ஸ்தாபகருமான எமில் ஸ்டான்லி கருத்துத் தெரிவிக்கையில், “தற்போதைய சூழ்நிலை தொடர்பில் நாம் கூர்மையாக அவதானித்து வருவதுடன், எழும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய முன்னாயத்தமான நடவடிக்கைகளை உரிய காலத்தில் மேற்கொள்வதற்காக பிரதான பங்காளர்களுடன் நாம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். கோழி இறைச்சித் துறையை மீண்டும் உரிய நிலைக்கு கொண்டு வருவதற்கும் அதன் சூழல் கட்டமைப்பு மற்றும் பெறுமதி சங்கிலியை வலுவூட்டுவதற்கும் கைகோர்த்து செயலாற்றுவதற்கு இது உகந்த காலமாக அமைந்துள்ளது.

New Anthoney’s Farms இன் Haritha Hari என்பது, முற்றிலும் இயற்கையான செயன்முறையாக அமைந்திருப்பதுடன், போஷாக்கு நிறைந்த மற்றும் எந்தவொரு அன்ரிபயோடிக் அல்லது ஹோர்மோன் திரிபு அற்ற முறையில் பேணப்பட்டு, முற்றிலும் இயற்கையான தீனிக்களை வழங்கி தயாரிக்கப்படுகின்றது. அதிகளவு இடவசதி மற்றும் அழுத்தமில்லாத சூழலில், ஆரோக்கியமான கோழி வளர்ப்பில் ஈடுபடுவது என்பது New Anthoney’s Farms க்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. விலங்கு நலன், பாதுகாப்பு மற்றும் சுகாதார நியமங்கள் போன்றன தொடர்பான பொறுப்புகள் உற்பத்தியாளரின் கலாசாரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அம்சங்களாக காணப்படுவதுடன், அமெரிக்காவின் தேசிய கோழி இறைச்சி சம்மேளனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது.

கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் நிலவிய கொவிட் தொற்றுப் பரவலுடனான நெருக்கடியான சூழலில், New Anthoney’s Farms இனால் சர்வதேச ரீதியில் தனது பிரசன்னத்தை நிறுவும் வகையிலான முக்கியமான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. Anthoney’s மற்றும் NoBiotic கோழி இறைச்சி வர்த்தக நாமங்களுக்கு பிரதான சர்வதேச சந்தைகளிலிருந்து கிடைக்கும் ஓடர்களினூடாக, 2021/22 ஆண்டில் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏற்றுமதி வருமானத்தை பெற்றுக் கொள்ள முடிந்தது. இந்த நடவடிக்கையினூடாக, நாட்டுக்கு தேவைப்படும் மிகவும் அவசியமான அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொடுக்கவும் முடிந்துள்ளது.

பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் சுரவீர கருத்துத் தெரிவிக்கையில், “அண்மை வருடக் காலப்பகுதியில் எமது நவீன உற்பத்தி வசதிகளை விரிவாக்கம் செய்துள்ளதுடன், அதனூடாக அதிகரித்துச் செல்லும் உள்நாட்டு மற்றும் சர்வதேச கேள்விகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் செயலாற்றுகின்றோம். உலகத் தரம் வாய்ந்த சூழலுக்கு நட்பான நியமங்கள் மற்றும் நிலைபேறான செயற்பாடுகளை பின்பற்றுவதனூடாக முன்னணி இறைச்சி ஏற்றுமதியாளராக திகழ்வதற்கான ஏற்றுமதி தந்திரோபாயத்தை நாம் பின்பற்றிய வண்ணமுள்ளோம்.” என்றார்.
உலகளாவிய ரீதியில் பரந்தளவு நுகரப்படும் இறைச்சி வகையாக கோழி இறைச்சி அமைந்துள்ளதுடன், இலங்கையிலும் இல்லங்களில் தினசரி நுகரப்படும் இறைச்சி வகையாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. அதில் முக்கிய அங்கம் வகிப்பதையிட்டு New Anthoney’s Farms மிகவும் பெருமை கொள்கின்றது. நிறுவனத்துக்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் GMP, HACCP மற்றும் ISO 22000 சான்றுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஹலால் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு ஒன்றியத்திடமிருந்து Greenhouse Gas (GHG) உறுதிப்படுத்தல் சான்றிதழைப் பெற்றுக் கொண்டுள்ள இலங்கையின் ஒரே கோழி இறைச்சி உற்பத்தியாளராக அமைந்துள்ளது. ISO 14064-1:2018 சான்றிதழுக்கமைய உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிறுவனமுமாக அமைந்துள்ளது.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: