ப்ரீமா இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்து இலங்கையில் இளம் கிரிக்கெட் திறமையாளர்களை மேம்படுத்துகிறது

Home » ப்ரீமா இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்து இலங்கையில் இளம் கிரிக்கெட் திறமையாளர்களை மேம்படுத்துகிறது
Share with your friend

இளம் வயதிலேயே கிரிக்கெட் திறன்களை கொண்டுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணும் இலக்குடன் இலங்கை கிரிக்கெட் தேசிய வழிகாட்டல் திட்டமிடலானது 15 வயதுக்குட்பட்ட மாவட்டங்களுக்கு-இடையிலான மற்றும் மாகாணங்களுக்கு-இடையிலான இலங்கை யூத் லீக்கிற்கு (SLYL) ஏக அனுசரணை வழங்க ப்ரீமா நிறுவனம் முன்வந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் SLC மற்றும் Prima Group Sri Lanka இன் சிரேஷ்ட முகாமைத்துவத்தின் பங்குபற்றுதலுடன் 2022 நவம்பர் 21 ஆம் திகதி சிங்கள விளையாட்டுக் கழகத்தில் (SSC) ஊடக மாநாடு நடைபெற்றது.

Prima U15 SLYL 2022 போட்டித் தொடரின் மாகாண மட்ட 50 ஓவர் போட்டித் தொடர், மாவட்ட மட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட இளம் கிரிக்கெட் வீரர்களின் பங்குபற்றுதலுடன் நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், மேர்கண்டைல் கிரிக்கெட் சங்க மைதானம் மற்றும் நெஷனலைஸ்ட் சேவிஸ் மைதானம், இரத்மலானை ஆகிய இடங்களில் இடம்பெறும் இப்போட்டிகளில் காலி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கண்டி மற்றும் தம்புள்ளை ஆகிய ஐந்து அணிகள் பத்துப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. Prima U15 SLYL 2022 போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 29 ஆம் திகதி அன்று நடைபெற உள்ளது. ஜூனியர் தேசிய தேர்வுக் குழுவின் மேற்பார்வையின் கீழ், SLC மாவட்ட மற்றும் மாகாண பயிற்சியாளர்களால் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Prima Group Sri Lanka கடந்த 12 வருடங்களில் Prima Champions Cup என அழைக்கப்பட்ட Prima U15 SLYL போட்டிக்கு உத்தியோகபூர்வ அனுசரணை வழங்கியுள்ளது. தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கடந்த கால மற்றும் தற்போதைய பல திறமையான துடுப்பாட்ட வீரர்கள் இப் போட்டிகளில் இருந்தே தங்கள் ஆரம்பத்தை பெற்றுள்ளனர்.

கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை அக்ரோ இன்டஸ்ட்ரீஸின் பிரதிப் பொது முகாமையாளர் திரு. சஜித் குணரத்ன, ப்ரீமா – குழுமம் இலங்கை, “ப்ரீமா மீண்டும் 15 வயதுக்குட்பட்ட இலங்கை யூத் லீக் 2022 இற்காக இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்த்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். லங்கா யூத் லீக் 2022, இலங்கையில் கிரிக்கெட்டுக்கான ஆளும் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஜூனியர் கிரிக்கெட் போட்டியாகும்.” எனக் குறிப்பிட்டார்.

 “இரண்டு வருடங்களின் பின்னர், நாட்டிலுள்ள அடுத்த தலைமுறை இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில், இந்தப் போட்டியின் புத்துயிர் பெற்ற பதிப்பைத் தொடர, இலங்கை கிரிக்கெட்டுடன் மீண்டும் இணைந்திருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம். இளம் விளையாட்டுத் திறமையாளர்களை ஊக்குவிப்பதும் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்குமான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுப்பது எங்களின் பொறுப்பாகும் என்று ப்ரீமா நாங்கள் நம்புகிறோம். Prima U15 Sri Lanka Youth League ஆனது ஆர்வமுள்ள இளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை தேசிய மற்றும் சர்வதேச தரத்திற்கு மேலும் மேம்படுத்துவதற்கான ஒரு உந்துச்சக்தியாக செயல்படுகிறது”. எனவும்,

“ப்ரீமா குழுமம் இலங்கை சார்பாக, எங்களது மதிப்புமிக்க கூட்டாண்மையை தொடர இவ் வாய்ப்பை எங்களுக்கு வழங்கியமைக்காகவும், இலங்கையில் ஜூனியர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில ப்ரீமா U15 யூத் லீக்கை ஒரு வெற்றிகரமான போட்டியாக மாற்றுவதற்கு வழங்கப்பட்ட அனைத்து ஆதரவிற்காகவும் இலங்கை கிரிக்கெட்டுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன. ” என அவர் தொடர்ந்து கூறினார்.


Share with your friend

Leave a Reply

%d