மகளிர் தொழிலதிபர்களின் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி இலங்கைக்கான அமெரிக்க தூதர் பங்கேற்பு

Home » மகளிர் தொழிலதிபர்களின் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி இலங்கைக்கான அமெரிக்க தூதர் பங்கேற்பு
Share with your friend

தொழில்கள் நடைபெற ஏற்ற சூழல் உருவாக்குவதன் அவசியத்தை விகனெக்ட் சர்வதேச கூட்டமைப்பு வலியுறுத்தல்

வீ கனெக்ட் சர்வதேச கூட்டமைப்பு முதலீட்டுக்கு தயார் சூழல் மற்றும் வணிகம் தொடர்வதற்கான பயிற்சி மற்றும் பொருள் விநியோகம் மற்றும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வட்ட மேசை – தொழில் நிறுவனங்களை இணைக்கும் 100-க்கும் மேலான இலங்கை பெண் தொழிலதிபர்களை இணைக்கும் நிகழ்வை நடத்தியுள்ளது. இந்த சிறப்பு நிகழ்வானது மகளிரை பொருளாதார ரீதியில் சுதந்திரமானவர்களாக மேம்படுத்தும் திட்டமாகும். இத்திட்டமானது அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய  விவகார பிரிவு வழங்கிய நிதி மூலம் செயல்படுத்தப்படுகிறது. இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங், இந்நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்தினார். இதில் பெண் தொழிலதிபர்கள் மற்றும் உள்ளூர் மற்றும் பன்னாட்டு நிறுவன பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

பொருளாதார ரீதியில் மகளிர் மேம்பாடு மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்த கருத்தரங்கில் உரை நிகழ்த்திய இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றோர்

“இலங்கையில் வீ கனெக்ட் சர்வதேச அமைப்பு மேற்கொள்ளும் திட்டப் பணிகளுக்கு அமெரிக்க அரசு மிகவும் தாரளமாக மனம் உவந்து நிதி அளிக்கிறது,’’ என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் சுங் குறிப்பிட்டார். “ஆண்கள் தொழில் தொடங்கி செயல்படுவதைப் போன்றே பெண்களும் தொழிலதிபர்களாக மாறவேண்டும் என்று இந்த கூட்டமைப்பின் இலக்கு நிர்ணயித்து அதற்குரிய சூழல் மற்றும் ஸ்திரமான வளர்ச்சி வாய்ப்புகளை பெண் சமூகம் மத்தியில் இந்நாட்டில் உருவாக்கி செயல்படுத்துவது கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது,’’ என்று அவர் குறிப்பிட்டார்.

(இடமிருந்து) லூயிஸ் ஜி. சலாஸ், இலங்கை தூதரக பொருளாதார விவகாரப் பிரிவு அதிகாரி, இலங்கை. தூதர் ஜூலி சுங், இலங்கைக்கான அமெரிக்க தூதர், எரோஷன் அலகரத்தினம், மண்டல இயக்குநர், தெற்காசிய பிராந்தியம், வீ கனெக்ட் இன்டர்நேஷனல், திருமிகு விரய் ரேமாண்ட், பொது மேலாளர் மற்றும் தலைமைச் செயலக தலைவர்  – ஏஎம்சிஹெச்ஏஎம்.

தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களால் மகளிர் நடத்தும் தொழில்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிக்கும் விதமாகவும், அவர்களுக்கு உதவும் நோக்கிலும் இந்த நிகழ்வு அவசர கதியில் நடத்தப்படுகிறது. மகளிரின் திறன் மேம்பாடு பயிற்சியில், பொருள் விலை நிர்ணய உத்தி மூலம் தொடர்ந்து தொழிலில் நிலைத்து நிற்பது மற்றும் நிதி நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கச் செய்வது, டிஜிட்டல் சந்தை வாய்ப்பு மூலம் உள்ளூர் மற்றும் பிராந்திய வர்த்தகத்துக்கு வழி ஏற்படுத்தவது ஆகியவற்றுடன் வீ கனெக்ட் சர்வதேச கூட்டமைப்பின் தொடர்பு மூலம் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள மகளிர் தொழிலதிபர்களுடன் இணைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்டவை அடங்கும்.

இந்நிகழ்வில் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் பெண் தொழிலதிபர்கள் குறிப்பாக சேவைத்துறை, உற்பத்தித் துறை, தகவல் தொழில்நுட்பம், வேளாண் துறையைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.  இவர்கள் அனைவரும் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து அவர்களது தொழிலுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். கலந்துரையாடல் மூலம் தங்களது தயாரிப்புகளுக்கான சந்தை வாய்ப்புகளை அறிவதோடு, தயாரிப்புகளை வாங்கும் நிறுவனங்களை கண்டறியவும் இந்நிகழ்வு ஒருவாய்ப்பாக அமைந்தது. பெண் தொழிலதிபர்களும் இணைந்து கூட்டாக ஒருங்கிணைப்பை உருவாக்கி அதன் மூலம் புதிய தொழில்வாய்ப்புகளைக் கண்டறியவும் இது வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது.

பொருள் விநியோகம் மற்றும் அனைவருக்குமான ஒருங்கிணைப்பு வட்டமேசை நிகழ்வில் 30-க்கும் மேற்பட்ட நிறுவன பிரதிநிதிகள் பாலின பேதமின்றி பெண் தொழிலதிபர்களிடமிருந்து பொருள்களை வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்நிகழ்வில் பெண் தொழில் அதிபர்கள் குறிப்பாக ஐட்கென் ஸ்பென்சஸ், ஹார்லேஸ், சிலோன் பிஸ்கெட்ஸ் லிமிடெட், கமர்ஷியல் வங்கி, ஹெச்என்பி மற்றும் மலிபான் உள்ளிட்ட நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

“இலங்கையில் உள்ள பெண் தொழில் அதிபர்கள் ஏற்கெனவே கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து இப்போதுதான் மீளத் தொடங்கியுள்ளதாக,’’ வீ கனெக்ட் சர்வதேச கூட்டமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான எலிசபெத் ஏ வாஸ்குவெஸ் குறிப்பிட்டார். “இத்தகைய சூழலில் இங்குள்ள பெண்களுக்குத் தேவையான உதவிகளை அளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். பெண்கள் தொழில்களை நடத்துவதன் மூலம் அதில் பணி புரிபவர்களுக்குத் தொடர்ந்து வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்றும், இன்றைய நிகழ்வானது தொழில்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காக அளிக்கப்படும் பயிற்சியின் முதல் கட்டமாகும்,’’ என்று அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பங்கேற்ற நிறுவனங்களுக்கும் இதன் மூலம் அவர்கள் அடையும் சாதக அம்சங்கள் குறித்தும் மிகவும் மகிழ்ச்சியடைவதோடு அவர்களுக்கு நன்றி செலுத்தவும் கடமைப்பட்டுள்ளோம். இதன் மூலம் வளர்ச்சி வாய்ப்பு மற்றும் மகளிர் தொழில்கள் மேம்பாடு அடைவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மகளிர் தொழில் முனைவுக்கான மேம்பாட்டுத் திட்டமானது அமெரிக்க நிதி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையில் பொருளாதார ரீதியில் பெண்களையும் இணைப்பதற்காக மேற்கொள்ளப்படும் திட்டமாகும் இது. இத்தகைய திட்டம் இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளிலும் செயல்படுத்தப்படுகிறது. பெண்களை தொழிலதிபர்களாக மாற்றும் பணியில் நீண்ட கால அடிப்படையில் செயல்படுத்தக்கூடிய திட்டமாகும். மகளிர் உருவாக்கும் பொருள்களை அதிக அளவில் கொள்முதல் செய்யும் பெரிய நிறுவனங்களை அடையாளம் காண்பது, இதில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை இணைப்பது மற்றும் அரசு நிறுவனங்கள் மற்றும் லாப நோக்கற்ற நிறுவனங்களை இணைத்து செயல்படுத்துவது இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இன்றைய தேதியில் 615 மகளிர் தொழிலதிபர்கள் இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்றனர். இவர்களை நிறுவனங்களுடன் இணைப்பதற்கான பணியில் 12-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் பங்கேற்றன. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் மகளிர் நடத்தும் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்களை வாங்குவதாக உறுதி அளித்துள்ளன.பொருளாதார மேம்பாடு மற்றும் ஸ்திரத்தன்மையை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியாக இலங்கையில் அமெரிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சி இதுவாகும். இரு நாடுகளிடையிலான கூட்டுறவை வெளிப்படுத்தும் நோக்கில் ஏற்கெனவே மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளான மகளிர் மேம்பாடு. பொருளாதார ஒருங்கிணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அரசு இந்த ஆண்டு இலங்கைக்கு 179 மில்லியன் அமெரிக்க டாலரை உதவியாக வழங்கியுள்ளது. இதில் 32 மில்லியன் டாலர் நிதி உதவியானது புதிதாக மனிதாபிமான மற்றும் தொழில்நுட்ப உதவிக்காக கடந்த ஜூன் மாதம் மட்டும் வழங்கப்பட்ட நிதியாகும்.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: