மத்திய மாகாணத்தில் விவசாய மறுமலர்ச்சித் திட்டமான Saru Ge-Watte திட்டத்திற்கு தலைமை தாங்குகிறது HNB

Home » மத்திய மாகாணத்தில் விவசாய மறுமலர்ச்சித் திட்டமான Saru Ge-Watte திட்டத்திற்கு தலைமை தாங்குகிறது HNB
Share with your friend

இந்த சவாலான காலங்களில் இலங்கையின் விவசாயத் துறையை சீர்திருத்த மற்றும் புத்துயிர் பெறுவதற்கான முயற்சிகளை ஆதரித்து, தனியார் துறை வங்கியான HNB PLC, நகர்ப்புறங்களில் வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், மத்திய மாகாணம் முழுவதும் உள்ள நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு புதிய சந்தைகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட ‘HNB Saru Ge Watte’ என்ற மேம்பாட்டு நடவடிக்கையை அறிமுகப்படுத்தியது. 

மாகாண மற்றும் மாவட்ட விவசாய அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மேம்பாட்டு நடவடிக்கை நிகழ்வு கண்டி சிட்டி சென்டரில் மாகாண விவசாய பணிப்பாளர் நாயகம் எஸ்.ஏ.டி சில்வா பிரதம அதிதியாகவும், HNB பிரதிப் பொது முகாமையாளர் – சட்டம் (சபை செயலாளர்) ஆகியோரின் தலைமையில் ஆரம்பமானது. இந்த நிகழ்விற்கு துஷாரி ரணவீர, HNB DGM/பிரதம கடன் அதிகாரி, நிரோஷ் பெரேரா, CBSL முகாமையாளர் (மாத்தளை), சதுர ரத்நாயக்க மற்றும் HNB பிராந்திய வர்த்தகத் தலைவர் (மத்திய), ஹர்ஷ விக்கிரமசிங்க, HNB கண்டி வாடிக்கையாளர் மையம், சிரேஷ்ட முகாமையாளர் துஷாரி ரணவீர, இந்திக விஜயசேன, பிரதேச செயலாளர்கள் வத்சலா மரம்பகே மற்றும் ஆர்.எம்.எஸ்.எம்.ரத்நாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

“எமது நாடு வரலாற்றில் மிக மோசமான பொருளாதார மற்றும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த கடினமான காலங்களில் அதனை எதிர்கொள்வதற்கு தேவையான அளவு உற்பத்தியை எம்மால் உறுதிப்படுத்துவதற்கு அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். எங்கள் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் இலங்கை விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து நிலங்களிலும் உணவுப் பயிரிடுவதற்கு தேவையான அறிவையும் பங்களிப்புக்களையும் வழங்குவதற்காக HNB Saru Ge-watte முயற்சியை ஆரம்பிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.” என HNBஇன் பிரதிப் பொது முகாமையாளர்- சட்ட (சபை செயலாளர்) துஷாரி ரணவீர தெரிவித்தார்.

வங்கி அல்லாத கிராமப்புற பிரிவுகளில் உள்ள விவசாயிகள் நகர்ப்புறங்களில் வாங்குபவர்களுடன் இணைப்பதில் சிரமம் இருப்பதால், நாடு முழுவதும் உள்ள கிராமப்புற விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே நேரடி உறவுகளை உருவாக்குவதன் மூலம் விவசாயத் துறையை மேம்படுத்த உதவும் அதன் தற்போதைய வாடிக்கையாளர் வலைப்பின்னல்களுடன் இணைந்து செயல்படுவதாக HNB அறிவித்தது. இரு தரப்பினருக்கும் முறையே அவர்களின் அறுவடையில் இருந்து கெளரவமான வாழ்வாதாரத்தையும், அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு நியாயமான விலையையும் வழங்கவுள்ளது.

நகர்ப்புறங்களில் உள்ள குடியிருப்புகள் மத்தியில் வீட்டுத்தோட்டத்தை மேம்படுத்துவதையும் இந்த முயற்சியின் நோக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்களுடைய தோட்டங்களில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரங்களை நிவாரண விலையில் வங்கி வழங்குகிறது. விவசாய திணைக்களம் மற்றும் பிரதேச செயலகத்துடன் இணைந்து செயற்படும் HNB, கண்டி சிட்டி சென்டரில் விவசாயிகளுக்கு நிதியறிவு மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்காக தொடர்ச்சியான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், இந்த இக்கட்டான காலங்களில் பொதுமக்களுக்கு ஆதரவாக உள்ளுர் மற்றும் மாகாண விவசாய உத்தியோகத்தர்களின் ஆதரவுடன் இந்த முன்னோடித் திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்.

விவசாயத் திணைக்களம், கால்நடைப் பொருட்கள் திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் விதைகள் மற்றும் தாவரங்கள், வர்த்தக விவசாயம், விவசாய வெளியீட்டு பிரிவு, HNB மத்திய பிராந்திய உத்தியோகத்தர்கள் மற்றும் HNB கண்டி வாடிக்கையாளர் நிலைய உத்தியோகத்தர்கள் உட்பட பல குழுக்களும் இந்நிகழ்வில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: