மஹாராஜா பூட்ஸ் தனது புத்தாக்கமான சேவையின் 30 வருட சிறப்பைக் கொண்டாடுகிறது

Share with your friend

உணவுத் துறையில் முன்னணிப் பெயரான மஹாராஜா பூட்ஸ்; புராடக்ட்ஸ், மூன்று தசாப்தங்களாக அதன் சமையல் பொருட்களுக்கான சிறப்பையும் புத்தாக்கத்தையும் கொண்டாடுகிறது. யாழ்ப்பாணத்தில் வேரூன்றிய அதன் தொடக்க காலத்திலிருந்து, உணவு ஏற்றுமதியில் உலகளாவிய ரீதியில் அதன் தற்போதைய நிலை வரை, மஹாராஜா பூட்ஸ்; அதன் வாடிக்கையாளர்களுக்கு தரம் மற்றும் அர்ப்பணிப்பு மிக்க சேவையை வழங்கி வருகிறது.

1958 இல் லங்கா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் திரு. சிவசரணம் அவர்களால்  நிறுவப்பட்டு, தொலைநோக்கு பார்வையுள்ள ஒரு சாதாரண முயற்சியாக ஆரம்பித்தது, பின்னர் அது மஹாராஜா பூட்ஸ்;; பிரைவேட் லிமிடெட் ஆக உருவானது.  நியாயமான விலையில் உயர்தர தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் சந்தையில் முன்னோடியாக விளங்கியது. 1979 ஆம் ஆண்டில், லியோரிஸ் அன்ட் சன்ஸ் உடனான கூட்டிணைவின் பின், காலத்தின் சவால்களை கடந்து வெற்றியின் சகாப்தத்தை ஆரம்பித்தது.

குகநாதன் குடும்பத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை, விஜயா எண்டர்பிரைஸ் தொடங்குவதற்கு வழிவகுத்தது. நிறுவனம் தனது முதல் ஏற்றுமதியை விஜயா எண்டர்பிரைசஸின் கீழ் தொடங்கியது. இது நம் நாட்டின் தயாரிப்புகளை விரும்பும் வெளிநாட்டில் வாழ்வோரின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தது.

1995 ஆம் ஆண்டில் மஹாராஜா பூட்ஸ்;;;, வெள்ளவத்தையில் தற்போதைய தலைமை அலுவலகம் உள்ள வளாகத்தில் பிறந்தது. முதலில் கையால் வறுக்கப்பட்ட அரிசி மாவு, வத்தளையிலும் பின்னர் மாபோலவிலும் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தி திறன்களை விரிவுபடுத்த வழிவகுத்தது.

2016 இல்  திரு.குகநாதன் அவர்கள் காலமானதைத் தொடர்ந்து, திருமதி.தவமலர் குகநாதன் மஹாராஜா பூட்ஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றார், அவரது வழிகாட்டுதலின் கீழ், நிறுவனம் மேலும் வளர்ச்சியடைந்து, உணவு உற்பத்தித் துறையில் புதிய அத்தியாயத்தை எட்டியது.

பணிப்பாளர்களான இம்ரான் ஃபுர்கான் மற்றும் மெலங்க தூல்வாலா ஆகியோரின் சமீபத்திய நியமனங்கள் நிறுவனத்தின் தலைமைத்துவத்திற்கு மேலும் வலுச் சேர்க்கிறது. இம்ரான் ஃபுர்கானின் தலைமை, மூலோபாயம் மற்றும் இடர் மேலாண்மை என்பன, நிதி நிர்வாகத்தில் மெலங்க தூல்வாலாவின் விரிவான அனுபவத்துடன் இணைந்து, மகாராஜா பூட்ஸின் எதிர்கால வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது. மேலும், நிறுவனத்தின் தலைவர் விஜயானந்த் குகநாதன் மற்றும் நிர்வாகப் பணிப்பாளர் வித்யானந்த் குகநாதன் ஆகியோர், உற்பத்தி, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான உத்திகளை வகுப்பதில் தங்களின் விரிவான அனுபவங்களுடன் நிறுவனத்தின் வளர்ச்சியை முன்னெடுத்து வருகின்றனர்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply