மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகளுக்கான அணுகலை உறுதி செய்யும் SLIIT தொழில் வழிகாட்டல் பிரிவு

Home » மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகளுக்கான அணுகலை உறுதி செய்யும் SLIIT தொழில் வழிகாட்டல் பிரிவு
Share with your friend

பட்டதாரிகள் தங்கள் பட்டப்படிப்பை முடிக்கும்போது எதிர்காலத்தில் அவர்களுக்கு முக்கியமாக அமையப்போகும் முன்னணி தொழில்தருணர்களுடன் தொடர்புகொள்ளும் திறன் மற்றும் தொழிலுக்கான பாதையைத் திட்டமிடுவது அவசியமானதாகும். பொருத்தமான வாய்ப்புக்களுடன் அவர்களின் கனவுத் தொழிலை அடைவதை பலப்படுத்தும் நோக்கில் SLIIT தொழில் வழிகாட்டல் பிரிவு சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்ககேற்புடனான தொடர் நிகழ்வுகளை வெற்றிகரமாக முன்னெடுத்தது.

SLIIT தொழில் வழிகாட்டல் பிரிவு மற்றும் SLIIT ரொட்டறிக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் ‘Career Expo’ முயற்சி பிரதான மண்டபத்தில் மார்ச் 11-12 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது.  மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு பல சாத்தியமான நிறுவனங்களில் இருந்து ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 500ற்கும் அதிகமான SLIIT பட்டதாரிகள் மற்றும் பட்டக்கல்வி மாணவர்கள் தொழில்தருணர்களைச் சந்தித்து, நேர்முகப் பரீட்சைகளுக்கு முகங்கொடுத்ததுடன், பயிற்சிக்கான வாய்ப்பையும் பெற்றதன் ஊடாக இந்நிகழ்வு ஆக்கவளம் கொண்டதாக அமைந்தது.

மாணவர்களின் எல்லைகளை விரிவுபடுத்தும் நோக்கில் SLIIT பட்டதாரிகள் தமது திறன்களை வெளிப்படுத்துவதற்கும், வலையமைப்புகளை உருவாக்குவதற்கும் மற்றும் தொழில்களை ஆராய்வதற்கும் ஒரு தளத்தை வழங்க பல முன்னணி வணிக நிறுவனங்களுடன் பங்குதாரர்களாக உள்ளது. மாணவர்கள் தொழில்களைப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் நோக்கில் Sysco LABS, Virtusa, IFS மற்றும் HCL போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் SLIIT தொழில் வழிகாட்டல் பிரிவானது பல்வேறு தொழில்வாய்ப்பு தினங்களை நடத்தியது. 

பட்டதாரிகள் மற்றும் பட்டதாரி மாணவர்கள் 300 பேருக்கும் அதிகமானவர்களின் பங்களிப்புடன் 2022 பெப்ரவரி 26ஆம் திகதி Sysco LABS Exclusive Day வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. தொழில் வாய்ப்பு தினத்தில் Sysco LABS மென்பொருள் பொறியியல் மற்றும் தர உறுதிப்படுத்தல் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புக்களை வழங்கியது.

Virtusa இன் பல்கலைக்கழக தொழில் வாய்ப்பு தினம் 2022 பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெற்றதுடன், இதில் 300ற்கும் அதிகமான பட்டதாரிகள் மற்றும் பட்டக்கல்வி மாணவர்கள் கலந்துகொண்டனர். Virtusa நிறுவனமானது 27ற்கும் அதிகமான மென்பொருள் பொறியியல் மற்றும் தர உறுதிப்படுத்தல் துறைகளில் நிரந்த வேலைவாய்ப்புக்களை வழங்கியதுடன், இதுவரை 2022 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 120ற்கும் அதிகமானவர்கள் நிரந்தர பணியாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

IFS  இன் பல்கலைக்கழக தொழில் வாய்ப்பு தினம் 2022 பெப்ரவரி 15ஆம் திகதி 600ற்கும் அதிகமான பட்டதாரிகள் மற்றும் பட்டக்கல்வி மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் 40ற்கும் அதிகமான மென்பொருள் பொறியியல் மற்றும் தர உறுதிப்படுத்தல் துறைகளில் நிரந்தர வேலைவாய்ப்புக்களை IFS வழங்கியது. 

HCL தொழில்வாய்ப்பு தினத்தை SLIIT தொழில் வழிகாட்டல் பிரிவு கடந்த டிசம்பரில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் 200ற்கும் அதிகமான SLIIT பட்டதாரிகள் மற்றும் பட்டதாரி மாணவர்கள் கலந்துகொண்டனர். இதன் ஊடாக HCL Technologies Lanka நிறுவனத்தில் காணப்படும் பல வெற்றிடங்கள் மற்றும் மதிப்பிற்குரிய தகவல் தொழில்நுட்ப நிபுணராக மாறுவதில் காணப்படும் நுணுக்கங்கள் பற்றியும் மாணவர்கள் புரிந்துகொள்ள முடிந்தது. பட்டதாரிகள் மற்றும் பட்டக் கல்வி மாணவர்கள் தங்கள் தொழில் பாதையை மேம்படுத்துவதற்காக ஒருவருக்கு ஒருவர் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பட்டதாரிகளை எதிர்காலப் பணியாளர்களுடன் இணைப்பதற்கான செயற்பாட்டுக்கு உதவி செய்வதுடன், SLIIT தொழில் வழிகாட்டல் பிரிவு வருடாந்த தொழில்வாய்ப்பு வாரத்தை செப்டெம்பர் மாதம் ஏற்பாடு செய்து வருகிறது. SLIIT இன் வணிக, கணினி, பொறியியல், மனித நேய மற்றும் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்களை தொழில்தருணர்கள் சந்திப்பதற்கு இது அணுகலை வழங்குகிறது.  மேலதிகமாக, 2022 மே மாதம் இறுதி வருடத்தின் இறுதி தவணைக்கான பரீட்சையை எழுதும் மாணவர்கள் மற்றும் 2022 செப்டெம்பர் பட்டம்பெறும் மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.


Share with your friend

Leave a Reply

%d