மார்க்ஸ்பென் குழுமம் GRANIFRIGOR™ தானிய குளிரூட்டும் முறைமையை உள்நாட்டுச் சந்தையில் அறிமுகப்படுத்துகிறது

Share with your friend

அறுவடைக்கு பின்னரான இழப்புகளை குறைத்து, உள்நாட்டு நெல் மற்றும் தானிய விவசாயிகளுக்கு அதிக பொருளாதார நன்மைகளை வழங்கும் புதுமையான ஜேர்மன் விவசாய தொழில்நுட்ப சாதனம்

Distinguished guests and speakers at the Granifrigor® product launch organized by Markspen Group From left to right: Mr. Gratian A. Peiris – Development Consultant and Chartered Mechanical Engineer Mr. D.D.C. Deepal – Managing Director, Tempt International (Pvt)Ltd; Dr. Clause M. Braunbeck – Agricultural Engineer and Asia Area Manager, FrigorTec GmbH; Mr. Chathuranga Abeysinghe – Deputy Minister of Industry and Entrepreneurship Development; Mr. Amil Galanga – Chairman, Markspen Group.

இலங்கையின் முன்னணி சர்வதேச நவீன விவசாய இயந்திர விநியோகஸ்தரான மார்க்ஸ்பென் குழுமம்[Markspen Group], ஜேர்மனியில் உருவாக்கப்பட்ட GRANIFRIGOR எனும் தானிய குளிரூட்டும் சாதனத்தை உள்நாட்டுச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் FrigorTec GmbH நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தநவீன குளிரூட்டும் சாதனமானது, விவசாய குளிரூட்டும் முறைமைகளில் 60 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்ட நிபுணத்துவம், துறைக் கல்வி, மற்றும் தொழில்நுட்ப திறமைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு GRANIFRIGOR™ உலகின் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு காலநிலைச் சூழல்கள் மற்றும் மின்னழுத்தத் தரங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட குறிப்பிட்ட மாதிரிகள் இதற்குள் அடங்குகின்றன.

Mr. Amil Galanga – Chairman, Markspen Group

இந்த நிகழ்வில் ஜேர்மனியின் FrigorTec GmbH நிறுவனத்தின் விவசாய பொறியாளரும் ஆசியப் பிராந்திய முகாமையாளருமான டொக்டர் கிளாஸ் எம். ப்ரௌன்பெக் (Dr. Claus M. Braunbeck), மற்றும் மார்க்ஸ்பென் குழுமத்தின் தலைவர் திரு. அமில் கலங்க ஆகியோர் கலந்து கொண்டனர். இலங்கையில் FrigorTec தயாரிப்புகளுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதி மற்றும் விநியோகப்பங்காளர் மார்க்ஸ்பென் குழுமமே ஆகும்.

இலங்கையில் நெல் மற்றும் பிற தானியங்கள் பயிர்ச்செய்கையானது நாட்டின் விவசாயத்தில் பெரும் பங்கு வகிக்கும் நிலையில் தேசிய பொருளாதாரத்திற்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் அத்தியாவசியமானதாக திகழ்கிறது. இருப்பினும், தானிய உற்பத்தியானது பல சவால்களை எதிர்கொள்கிறது. இதில் காலநிலை மாற்றம், சந்தை விலை மாறுபாடுகள், கடன் வசதியின்மை மற்றும் அறுவடைக்குப்பின்னரான இழப்புகள் போன்றவைஉள்ளடங்குகின்றன.

Mr. Chathuranga Abeysinghe – Deputy Minister of Industry and Entrepreneurship Development

இந்த அறுவடைக்குப்பின்னரான இழப்புகளில் பெரும்பாலானவை, முறையான மற்றும் போதுமான சேமிப்பு வசதிகள் இல்லாததால் சேமிப்பின் போது ஏற்படுகின்றன. இத்தகைய சேமிப்பு வசதிகள் ஈரப்பதத்தில் ஏற்ற இறக்கங்களுக்கும், கொறித்துண்ணிகள் மற்றும் பூச்சிகள் போன்றவற்றால் பூச்சித் தொல்லைகளுக்கும் வழிவகுக்கும். இந்த மோசமான சேமிப்பு நடைமுறைகள் சேமிக்கப்பட்ட அரிசி மற்றும் தானியங்களுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்துகின்றன, இதனால் 20% வரை உற்பத்திக்குப் பின்னரான இழப்பு ஏற்படுகிறது.

 இந்நிலையில் உள்நாட்டு விவசாயிகள் பலர் இந்த இழப்புகளை குறைக்கும் நோக்கில் தமது சேமித்து வைக்கப்பட்ட தானியங்களில் இரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் கிருமிநாசினிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் பொதுவாக அவர்கள், இரசாயனப் பயன்பாட்டிற்கான சரியான முறைகள் குறித்து போதிய அறிவில்லாமலும் விழிப்புணர்வின்றியும் இருக்கின்றனர். விவசாயப்பொருட்களின் தவறான பயன்பாடு விவசாய பெறுமதிச் சங்கிலி முழுவதும் பல்வேறு அபாயங்களுக்கு வழிவகுக்கும், அதாவது விவசாயிகளுக்கு அதிகப்படியான பாதிப்பு, நுகர்வோருக்கு சுகாதார அபாயங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் முறையற்ற முறையில் அப்புறப்படுத்துதல் ஆகியவற்றால் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை ஏற்படும். GRANIFRIGOR™ குளிரூட்டும் சாதனம் புதியதாக அறுவடை செய்யப்பட்ட தானியங்களைச் சேமிப்பு அறைகளுக்குள் உடனடியாகக் குளிரூட்டப் பயன்படுகிறது, இது ஈரப்பதம் மற்றும் பூஞ்சை உருவாவதைக் கட்டுப்படுத்தி, இயற்கை மற்றும் உயர்தர தானியங்களைப் பாதுகாக்க உதவுகிறது. 

Dr. Clause M. Braunbeck – Agricultural Engineer and Asia Area Manager, FrigorTec GmbH

GRANIFRIGOR™ குளிரூட்டும் சாதனம் எந்தவொரு வெளிப்புற காலநிலைச் சூழலுக்கும் சார்ந்திராமல், சேமித்து வைக்கப்பட்ட தானியங்களை உடனடியாக குளிரூட்டப் பயன்படுத்தப்படுகிறது. இந்த புதுமையான தொழில்நுட்பம் சேமிப்பு பிரிவுக்குள் ஈரப்பதம் மற்றும் பூஞ்சை உருவாகுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் புதியதாக அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் கெட்டுப்போவதை குறைக்கிறது. இதனால் நெல் மற்றும் தானியங்களை இயற்கையான, உயர்தரமான முறையில் நீண்ட காலம் பாதுகாத்து வைக்க முடிகிறது.

GRANIFRIGOR™ சாதனமானது ‘குறைந்த ஒலி செயல்பாடு’ ‘விரைவான குளிர்விப்பு’ ‘காற்றோட்ட முறை’ மற்றும் ‘சாதாரண முறை’ போன்ற பலவிதமான இயக்க முறைகளைக் கொண்டுள்ளது. இந்த முறைகளை கைமுறையாகவோ அல்லது தானியங்கு நேரக் கட்டுப்பாடுகளுடனோ அமைத்துக்கொள்ளலாம்.இது சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் ஆற்றல்-திறனுள்ள சாதனமாகும்.மேலும், இது குறைந்த கார்பன் உமிழ்வுடன் கூடிய பாதுகாப்பான குளிர்விப்பான்களைப் பயன்படுத்துகிறது. இந்த சாதனமானது வெவ்வேறு இயக்க முறைகள் மற்றும் அதிர்வெண் கட்டுப்பாடுகள் மூலம் தானாகவே கட்டுப்படுத்தப்படுவதால், தானியங்கள் குளிர்விக்கப்படும்போது மிகக் குறைந்த சக்தியே நுகரப்படும்.

“இலங்கையில் FrigorTec தயாரிப்புகளுக்கான அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக இருப்பதில், நாம் பெருமைப்படுகிறோம். தானியங்கள் கெடுதல், பூச்சி தாக்கம் மற்றும் பூஞ்சை வளர்ச்சியிலிருந்து பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முன்னோடியான தொழில்நுட்பத்தை உள்நாட்டுச் சந்தையில் அறிமுகப்படுத்துவது, அறுவடைக்குப்பின்னரான முகாமைத்துவத்தில் உயர் தரமும் நிலைத்தன்மையும் உறுதி செய்யும் ஒரு முக்கியமான படியாகும்,” என்று மார்க்ஸ்பென் குழுமத் தலைவரான திரு. அமில் கலங்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.“இந்த தயாரிப்பு அறிமுகமானது, இலங்கை விவசாயிகளையும் தொழில்முனைவோரையும் சமீபத்திய விவசாய தொழில்நுட்பத்துடன் வலுப்படுத்தும் மார்க்ஸ்பென் நிறுவனத்தின் நோக்கத்தை மேலும் உறுதிசெய்கிறது. நாம் விவசாயிகளின் உற்பத்தித் திறனையும் செயல்திறனையும் மேம்படுத்த உறுதிபூண்டுள்ளோம்; இதன் மூலம் அவர்கள் வாழ்க்கைத் தரத்தையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்துவதோடு, உள்நாட்டு விவசாயத்துறையில் குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான வளர்ச்சியையும் முன்னெடுக்க விரும்புகிறோம்FrigorTec GmbH நிறுவனத்தின் விவசாயப் பொறியாளரும் ஆசியப் பிராந்திய முகாமையாளருமான டொக்டர் கிளாஸ் எம். ப்ரௌன்பெக், தயாரிப்பு அறிமுக நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அறுவடைக்குப் பின்னரான தொழில்நுட்பத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான சர்வதேச அனுபவம் கொண்ட டொக்டர் ப்ரௌன்பெக், GRANIFRIGOR™ பற்றிய நிபுணத்துவமான பார்வைகளையும், தானிய குளிரூட்டும் முறைமைகள் மூலம் தானியங்கள் கெடுதல், பூச்சி தாக்கம் மற்றும் பூஞ்சை வளர்ச்சியிலிருந்து பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் விரிவாக விளக்கினார் — குறிப்பாக வெப்பமண்டல காலநிலைச் சூழல்களில் இதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.


Share with your friend