Eyeview Sri Lanka

மார்க்ஸ்பென் ஹோல்டிங்ஸ் குருநாகலில் ‘ஸ்மார்ட் ஹப்’ ஐத் திறந்து வைத்துள்ளது

Share with your friend

DOMA CTP20 தானியங்கு அரிசி ஆலையின் ஒரே இறக்குமதியாளரும் விநியோகஸ்தருமான மார்க்ஸ்பென் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட், மிக உயர்ந்த தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஒரே கூரையின் கீழ் நுகர்வோருக்கு வழங்குவதற்காக தனது புத்தம் புதிய காட்சியறையை குருநாகலில் திறந்து வைத்துள்ளது. இந்த அதிநவீன ‘ஸ்மார்ட் ஹப்’ இல.389 பமுனுவெல, குருநாகலில் அமைந்துள்ளது. புதிய ஸ்மார்ட் ஹப் ‘உங்கள் எதிர்காலத்தை நாங்கள் வடிவமைக்கிறோம்’ என்ற கருப்பொருளை உள்ளடக்கி  வாடிக்கையாளர்கள் சிறந்த தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பெறுவதை உறுதி செய்கிறது.

மார்க்ஸ்பென் குழுமத்தின் தலைவர் திரு. அமில் கலங்க தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. பணிப்பாளர்களான திரு.சுரேஷ் கலங்க மற்றும் திருமதி.தினலி கலங்க, குழுமத்தின் பொது முகாமையாளர் திரு.துலீப் குணசேகர உட்பட ஏனைய உறுப்பினர்களும் பணியாளர்களும் இத்திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

திறப்பு விழாவில் பேசிய மார்க்ஸ்பென் குழுமத்தின் தலைவர் திரு அமில் கலங்க, புதிய காட்சியறையில் வாடிக்கையாளர்கள் அணுகக்கூடிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சுருக்கமாக விளக்கினார். ‘இந்த புதிய மையமானது தானியங்கி அரிசி ஆலை, நெல் உலர்த்தும் இயந்திரங்கள், அரிசி வரிசைப்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் தேங்காய் எண்ணெய் காய்ச்சும் இயந்திரங்கள் போன்ற உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளை உள்ளடக்கியது. எங்கள் போர்ட்ஃபோலியோவில் விவசாயத் தொழிலுக்கு அவசியமான பல தயாரிப்புகளும் உள்ளன. இந்த இயந்திரங்களை மாத்திரம் உள்ளடக்கியது மட்டுமல்லாமல், எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்குப் பிந்தைய சேவைகளையும் நாங்கள் வழங்குவோம்’ என்று அவர் கூறினார்.

மார்க்ஸ்பென் ஹோல்டிங்ஸ் முதலில் மார்க்ஸ்பென் லேபல்ஸ் (பிரைவட்) லிமிட்டட் என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது. உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கும் குறிப்பாக உற்பத்தி செயல்முறையை நெறிப்படுத்தும் மற்றும் தானியங்கு செய்யும் கருவிகள் என்பவற்றுக்குப் பொறுப்பாக இருந்தது. அதன் தயாரிப்பு வரம்பில் TSC பார்கோட் பிரிண்டர்கள், பார்கோட் ஸ்கேனர்கள், பிஓஎஸ் டெர்மினல்கள், பார்கோட் லேபிள்கள், பிரிண்டிங் ரிப்பன்கள் உட்பட மேலும் பல உள்ளன.

இந்நிறுவனம் சூரிய சக்தித் துறையில் குறிப்பிடத்தக்க இருப்பை உருவாக்கியுள்ளது. க்ரோவாட் சோலார் லங்கா (பிரைவேட்) லிமிடெட் உடன் இணைந்து பணியாற்றும் அவர்கள், சோலார் பேனல்கள், க்ரோவாட் இன்வெர்ட்டர்கள், க்ரோவாட் ஈவி சார்ஜர்கள் மற்றும் துணைக்கருவிகள் என்பவற்றை விநியோகிப்பதோடு, உள்நாட்டு, வணிக மற்றும் தொழில்துறை அமைப்புகளுக்கு சோலார் சிஸ்டங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் முகாமைப்படுத்தல் என்பவற்றில் ஒருங்கிணைந்த தீர்வுகளையும் வழங்குகின்றனர். அதுமட்டுமல்லாது நாடளாவிய ரீதியில் 24/7 விற்பனைக்குப் பிந்திய சேவைகளையும் வழங்குகிறது

மேலும், மார்க்ஸ்பென் அக்ரோ நாடு முழுவதும் வியாபித்துள்ள 15 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது, அவை பாரம்பரிய அரிசி, முந்திரி மற்றும் இலங்கை மசாலாப் பொருட்கள் போன்ற சிறந்த தரமான தயாரிப்புகளை உள்ளடக்கியுள்ளது.

மேலும், மார்க்ஸ்பென் குழுமத்தின் மற்றொரு துணை நிறுவனம் மார்க்ஸ்பென் லொஜிஸ்டிக்ஸ் ஆகும், இது சுற்றுலாத் துறைக்கான போக்குவரத்து தீர்வுகளை வழங்குகிறது. அதுமட்டுமல்லாது க்ரோவாட் சோலார் லங்கா (பிரைவேட்) லிமிடெட், மார்க்ஸ்பென் லேபில்கள், மற்றும் மார்க்ஸ்பென் அக்ரோ ஆகியவற்றிலிருந்து இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகச் சேவைகளையும் வழங்குகின்றன.

இலங்கையையும் அதன் பொருளாதாரத்தையும் புத்தாக்கமான தயாரிப்புகள் மூலம் முன்னோக்கி கொண்டு செல்வதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் தகவலுக்கு, www.markspengroup.com ஐப் பார்வையிடவும் அல்லது குருநாகலிலுள்ள புதிய காட்சியறையைப் பார்வையிடவும்.

 


Share with your friend
Exit mobile version