முச்சக்கர வண்டி சாரதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பீப்பள்ஸ் லீசிங் வெள்ளவத்தை கிளை நடவடிக்கை

Home » முச்சக்கர வண்டி சாரதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பீப்பள்ஸ் லீசிங் வெள்ளவத்தை கிளை நடவடிக்கை
Share with your friend

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் வெள்ளவத்தை கிளை (பீப்பள்ஸ் லீசிங்) வெள்ளவத்தையில் பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. வெள்ளவத்தை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் மற்றும் வெள்ளவத்தை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் வெள்ளவத்தை பீப்பள்ஸ் லீசிங் கிளையின் முன்னோடி செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

முச்சக்கர வண்டி என்பது நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் போக்குவரத்து முறையாகும். வெள்ளவத்தை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொரு முச்சக்கர வண்டி நடத்துனருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றங்களைத் தடுப்பதற்கும், முச்சக்கர வண்டிகளை செலுத்துபவர்களுக்கும் நிபுணத்துவத்தை உருவாக்குவதற்கும் உதவுவதே இந்த முயற்சியின் நோக்கங்களாகும்.

இந்த நிகழ்வின் போது முச்சக்கர வண்டி சாரதிகள் மத்தியில் ” QR குறியீடு” முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு, இது டிஜிட்டல் மயமாக்கலை அடையும் போது அவர்களின் தொழிலை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பீப்பள்ஸ் லீசிங் செயற்பாடுகளின் பிரதம முகாமையாளர் பிரியங்க விமல்சேன முன்னிலையில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. பீப்பள்ஸ் லீசிங் வெள்ளவத்தை கிளையின் முகாமையாளர் கே. சந்திரசேகரன், வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொறுப்பதிகாரி, தலைமை நிர்வாக பரிசோதகர்  எல்.ஏ.யு. நாதுன்னா மற்றும் பொறுப்பதிகாரி, போக்குவரத்து உதவி பரிசோதகர்  டபிள்யூ.பி. பிரசாந்த ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். “தொழில்முறை முச்சக்கர வண்டிகள் சங்கத் தலைமையின் உண்மையான குரல் அமைப்பு” என்ற அமைப்பின் ஏற்பாட்டாளர் எல்.ரோஹன பெரேரா மற்றும் வெள்ளவத்தை முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஜே.பி.ஸ்வர்ணசிறி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி என்பது இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும். மேலும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான பீப்பள்ஸ் வங்கியின் துணை நிறுவனமாகும். 1996ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பள்ஸ் லீசிங் 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங், பங்களாதேஷில் வெளிநாட்டு முயற்சி உட்பட நிபுணத்துவம் வாய்ந்த ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்பட்ட வங்கி அல்லாத நிதி சக்தியாக வளர்ந்துள்ளது.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: