Eyeview Sri Lanka

முதலாவது Sri Lanka Technician Grand Prix 2024 போட்டியை இணைந்து நடாத்திய AMW மற்றும் Yamaha Motor ஜப்பான்

Share with your friend

Associated Motorways (Private) Limited (AMW) மற்றும் ஜப்பான் Yamaha Motor ஆகியன இணைந்து, நாட்டின் முதலாவது Sri Lanka Technician Grand Prix 2024 போட்டியை கடந்த 2024 நவம்பர் 30 ஆம் திகதி நடாத்தியிருந்தது. இந்த நிகழ்வானது, Yamaha மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தொழில்நுட்ப திறன்களில் சிறந்து விளங்கும் இலங்கையின் பயணத்தின் முதல் படியாக அமைந்தது. நாடு முழுவதிலும் உள்ள Yamaha தொழில்நுட்ப வல்லுநர்கள் ‘Sri Lanka’s Best Yamaha Technician’ எனும் பட்டத்திற்காக போட்டியிட்டதோடு, ​​அவர்களது திறமைகள் மற்றும் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு தளமாக இந்த Grand Prix போட்டி அமைந்தது.

Sri Lanka Technician Grand Prix ஆனது, Yamaha World Technician Grand Prix இற்கு இணையாக அதனுடன் ஒத்துப்போகிறது. அதில் உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் ‘World’s Best Yamaha Technician’ எனும் மதிப்புமிக்க பட்டத்திற்காக போட்டியிட்டு திறமைகளை வெளிப்படுத்துவார்கள். AMW மற்றும் Yamaha ஆகியன 2 வருடங்களுக்கு ஒரு முறை Sri Lanka Technician Grand Prix போட்டியை நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன் மூலம் உலக அரங்கில் இலங்கையின் இருப்பிற்கான பாதையை உருவாக்குவதே அவர்களது எதிர்பார்ப்பாகும்.

நிஜ-உலகில் ஏற்படும் நிகழ்வுகளின் போது தொழில்நுட்பத் திறமையை வெளிக்காட்டுவதற்காக தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்டுள்ள பயிற்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களை இப்போட்டி மதிப்பீடு செய்தது. மின்னிணைப்பில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து தீர்ப்பதற்காக, Yamaha Diagnostic Tool கருவியை பயன்படுத்தி குறித்த பிரச்சினையை கண்டறியும் திறன்களையும் அவர்கள் இங்கு காட்சிப்படுத்தினர். இதன் இறுதிப் பகுதியானது, வாடிக்கையாளர் உறவுகளாகும். இது அவர்களின் தொழில்முறை ரீதியான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தொடர்புகளை வெளிப்படுத்தியதோடு, திருப்தி மற்றும் நம்பிக்கையை அது உறுதி செய்தது.

இந்நிகழ்வைப் பற்றி தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட, Associated Motorways (Private) Limited குழும முகாமைத்துவப் பணிப்பாளர் Andre Bonthuys தெரிவிக்கையில், “தொழில்நுட்ப விசேடத்துவத்தை மேம்படுத்துவதற்கும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்கை கௌரவிப்பதற்கும் AMW மற்றும் Yamaha கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு Sri Lanka Technician Grand Prix நிகழ்வு ஒரு சான்றாகும். இந்த நிகழ்வு இலங்கையின் திறமையாளர்களை உலகளாவிய அரங்கில் பிரகாசிக்க வாய்ப்பளிக்கும் ஒரு தளமாக மாறும் என்பது எமது நம்பிக்கையாகும்.

ஜப்பானின் Yamaha Motor Co. Ltd. நிறுவனத்தின் OMDO பொது முகாமையாளர் Shigeo Uchiyama தெரிவிக்கையில், “Yamaha எனும் வகையில், எமது தொழில்நுட்ப வல்லுநர்கள் வெற்றி அடையத் தேவையான திறமைகள் மற்றும் அறிவைப் புகட்டுவதில் நாம் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். அவர்களுக்குத் தகுந்த அங்கீகாரத்தை வழங்க நாம் முயற்சிக்கிறோம். இதன் காரணமாகவே Sri Lanka Technician Grand Prix ஆனது, Yamaha வர்த்தகநாமத்தின் உலகளாவிய தரத்துடன் இணைவதற்கான மாபெரும் முன்னேற்றகரமான படியாக அமைகின்றது. இது எமது வாடிக்கையாளர்கள் சிறந்த சேவையைப் பெற வழிவகுக்கிறது.” என்றார்.

இலங்கையில் Yamaha மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான ஒரே விநியோகஸ்தராக திகழும் AMW நிறுவனமானது, மிகவும் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவைக் கொண்டுள்ள பாராட்டுக்குரிய ஒரு வலுவான விநியோகஸ்தர் வலையமைப்பை நிறுவ உறுதி பூண்டுள்ளது. இந்த அர்ப்பணிப்பானது, இலங்கையில் Yamaha வர்த்தகநாமத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைகின்றது. காரணம், இது வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிக்க உதவுவதோடு, நிறுவனத்தின் நற்பெயரையும் வலுப்படுத்துகின்றது.

Sri Lanka Technician Grand Prix போட்டியானது, இலங்கையில் தொழில்நுட்ப போட்டிகளுக்கான புதிய தரநிலையை நிறுவியள்ளதோடு, Yamaha தொழில்நுட்ப குழுக்களுக்கிடையே சிறந்த கலாசாரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் மூலம், AMW மற்றும் Yamaha ஆகியன தமது பணியாளர்கள் தொடர்பில் முதலீடு செய்வதோடு, உலகளாவிய அரங்கில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவர்களை தயார்படுத்துகின்றன. AMW மற்றும் Yamaha ஆகியன உலகத் தரம் வாய்ந்த நிபுணத்துவம் மற்றும் சேவையை தமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் அனைவருக்கும் வழங்குவதற்காக அவர்கள் கொண்டுள்ள தூரநோக்கை தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகின்றன.


Share with your friend
Exit mobile version