Eyeview Sri Lanka

யார் அதிகத் தமது நிஜத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை காண்பித்துள்ள  Viber

Share with your friend

AR Lenses பயன்பாட்டின் மூலம் ஆண்களை விட பெண்களே அதிகம் பில்டர்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதைக் கண்டறிந்துள்ள Viber, “ரெட் ஹெட்” லென்ஸ் அதிகம் பிரபலமானது

தனியார் மற்றும் பாதுகாப்பான குறுஞ்செய்தி சேவை மற்றும் குரலை அடிப்படையாகக் கொண்ட தொடர்பாடல் சேவையை வழங்கும் உலகின் முன்னணியாளரான Rakuten Viber நிறுவனம், Snap இன் கூட்டாண்மையுடன் 2021 ஜூன் Viber Lens அம்சம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை  வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் இந்த அம்சம் பாரிய சந்தையைப் பிடித்துள்ளது. இதன் முதலாவது அலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதிலிருந்து 7.3 மில்லியன் பயனர்கள் தமது படங்கள், விடியோக்கள்  அல்லது GIFஇற்கு Lenses அம்சத்தைப் பயன்படுத்தியுள்ளனர். 5.6 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்த செயலியில் 51.8 மில்லியன் தடவைகளுக்கு அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

திரட்டப்பட்ட தகவல்களுக்கு அமைய AR Lenses அம்சத்தைப் பயன்படுத்தி பெண்கள் தமது யதார்த்தத்தை அதிகப்படுத்தியிருப்பதுடன், இதனால் இன் மாதாந்த பயனர்களின் எண்ணிக்கையில் 46% பெண்களாக அமைந்திருப்பதுடன், 56% Lens அம்சத்தைப் பயன்படுத்துகின்றனர். மீடியாவைப் பயன்படுத்துவது மற்றும் அவற்றை அனுப்புவதில் ஆண்களை விட பெண்களே அதிகம் காணப்படுகின்றனர். 59% பெண்கள் Lens மீடியாவைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் 30% பேர் அதை அனுப்புவார்கள், அதே சமயம் 55% ஆண்கள் Lenses மூலம் மீடியாவைப் பிடிக்கிறார்கள், அவர்களில் 27% பேர் அதை ஏனையவர்களுக்கு அனுப்புகின்றனர்.

அதிகம் பயன்படுத்தப்பட்ட Lenses எது? திரட்டப்பட்ட தகவல்களுக்கு அமைய ‘கார்ட்டூன் முகங்கள்’ – பாரிய, கூகுளி கண்கள் மற்றும் நீண்ட நாக்கூ என்பன பிரபல்யம் பெற்ற Lens ஆகக் காணப்படுகின்றன. சிறப்பு நிறத்தைக் கொண்ட கூந்தல் 2021ஆம் ஆண்டுக்கான ட்ரென்டாகியுள்ளது என பஷன் இதழ்கள் சுட்டிக்காட்டியுள்ளன. “ரெட் ஹெட்” — ஒரு பயனருக்கு நீளமான, சிவப்பு முடியை வழங்கும் Lenses ஆகும். Viber இல் இரண்டாவது அதிகம் பிரபல்யம் பெற்ற ஆக இது அமைந்துள்ளது.  மூன்றாவது இடத்தில் “ஹாலோவீன் கூறுகள்” கொண்ட Lenses அமைந்திருப்பதுடன், இது பயனரின் முகத்தில் ஒரு மோசமான முகமூடியை வைக்கிறது. உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF) கூட்டாண்மை மூலம் உருவாக்கப்பட்ட டைகர் Lenses மிகவும் பிரபலமானது, மேலும் சில பிராந்தியங்களில், அழிந்து வரும் விலங்குகளின் லென்ஸ்கள் WWFக்கு நன்கொடையாக வழங்கின. 

குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு AR filters அம்சத்தை இளம் வயதினர் மாத்திரம் அதிகம் பயன்படுத்தவில்லையென்பதை ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. பயன்படுத்துபவர்களில் 30-40 வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகமாக (23%) இருப்பதுடன், இதற்கு அடுத்ததாக 40-60 வயதுப் பிரிவினர் (18%) காணப்படுகின்றனர்.  17 வயதுக்குக் குறைந்தவர்கள் 13% பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 

“ஒரு கடினமான ஆண்டில், தொற்றுநோய் காரணமாக பலர் தனிப்பட்ட தொடர்பை குறைந்தபட்சமாக வைத்திருக்கும் போது, Viber அவர்களின் டிஜிட்டல் தகவல்தொடர்புகளை மேலும் உயிரோட்டமுள்ளதாக்க வைத்திருந்தது” Rakuten Viber இன் பிரதான வளர்ச்சிக்கான அதிகாரி அன்னா ஸ்னமென்ஸ்காயா தெரிவித்தார். “​​புலியைப் போல தோற்றமளிக்கும் லென்ஸைப் பயன்படுத்தும் போது அல்லது அவர்கள் விரும்பும் நண்பர்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்து வாழ்த்துக்கள் அனுப்பும் போது ஒருருக்கு ஒருவர் தொடர்பில் இருப்பதற்கு வேடிக்கையான வழியை மக்கள் தேடுகின்றனர்” என்றார் அவர்.

Rakuten Viber பற்றி : 

Rakuten Viber நாங்கள் மக்களை இணைக்கிறோம். அவர்கள் யார், அல்லது அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது முக்கியமல்ல. எங்கள் உலகளாவிய பயனர் தளம் ஒருவருக்கொருவர் அரட்டைகள், வீடியோ அழைப்புகள், குழு செய்தி அனுப்புதல் மற்றும் அவர்களுக்கு பிடித்த வர்த்தகநாமங்கள் மற்றும் பிரபலங்களுடன் புதுப்பிப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற பல அம்சங்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளது. எங்கள் பயனர்களின் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான மற்றும் இலவச சூழல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். Rakuten Viber, Rakuten Inc இன் ஒரு பகுதியாகும். ஈ-வர்த்தகம் மற்றும் நிதிச் சேவையில் உலகின் முன்னணியாளராகும். இது FC Barcelona வின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சனல் என்பதுடன் Golden State Warriors அதிகாரப்பூர்வ உடனடி செய்தி மற்றும் அழைப்பு பயன்பாட்டுப் பங்காளராகும். 


Share with your friend
Exit mobile version