இலங்கையின் புரட்சிகரமான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் லைஃவ்ஸ்டைல் போனஸ் 2022 திட்டத்தை முன்னெடுத்து, வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியான அன்பளிப்புகளை வழங்கியிருந்தது.
2022 ஜனவரி 1ஆம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் ஆயுள் காப்புறுதியைக் கொள்வனவு செய்திருந்த தகைமை வாய்ந்த வாடிக்கையாளர்களிலிருந்து 2022 ஜுன் மாதம் இடம்பெற்ற அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் தெரிவினூடாக 50 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். முதலாமிட வெற்றியாளராக, சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யு.ஐ.டி.வாஸ் தெரிவு செய்யப்பட்டு, iPhone 13 Pro Max – 512GB ஐ பரிசாக பெற்றுக் கொண்டார். இரண்டாமிடத்தை, அவிசாவளையைச் சேர்ந்த எஸ்.பி.வீரசிங்கவுக்கு, iPad Air 2021 – 64GB (cellular & wi-fi), an Apple Pencil 2nd Gen and a Magic Keyboard வழங்கப்பட்டன. மூன்றாமிடத்துக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பி.புஷ்பலதா தெரிவு செய்யப்பட்டு, 55-அங்குல Samsung ஸ்மார்ட் தொலைக்காட்சி ஒன்றைப் பெற்றுக் கொண்டார்.
ஏனைய வெகுமதிகளில் மடிக்கணனிகள், சினமன் ஹோட்டலிலிருந்து வவுச்சர்கள், 43-அங்குல ஸ்மார்ட் தொலைக்காட்சிகள், Samsung A-series ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் உடனான UV Sterilizers போன்றன அடங்கியிருந்தன. இவற்றை இலகுவாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில், வெற்றியீட்டியவர்களின் அருகாமையிலுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக சிறந்த பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பது யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த எமக்கு முன்னுரிமையானதாக அமைந்திருப்பதுடன், இந்த ஆண்டின் லைஃவ்ஸ்டைல் போனஸ் திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதையிட்டு பெருமை கொள்கின்றோம். இந்தத் திட்டம் மூன்றாண்டு காலமாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றதுடன், வாடிக்கையாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் வாழ்க்கைமுறை வெகுமதிகளை வழங்குகின்றது. இலங்கையர்களுக்கு தமது கனவுகளை எய்துவதற்காக வலுவூட்டுவது எனும் எமது நோக்கத்துக்கமைய, லைஃவ்ஸ்டைல் போனஸ் ஊடாக, வாடிக்கையாளர்கள் நிதியளவில் பாதுகாக்கப்பட்டிருப்பதை ஊக்குவிப்பதற்கும், தமக்கு ஏற்ற வகையில் வாழ்க்கையை நிம்மதியாக அனுபவிப்பதற்கும் ஏதுவாக அமைந்துள்ளது.” என்றார்.
பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி மஹேன் குணரட்ன தெரிவிக்கையில், “இந்த சந்தர்ப்பத்தில் வாடிக்கையாளர்களுக்கு லைஃவ்ஸ்டைல் போனஸ் உடன் வெகுமதிகளை வழங்க முடிந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த அனுபவங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நிறுவனம் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், இவற்றில் லைஃவ்ஸ்டைல் போனஸ் ஒரு அங்கமாக காணப்படுகின்றது. இந்த வெகுமதித் திட்டத்தைப் போன்று, நிறுவனத்துடன் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான, உயர் தரம் வாய்ந்த புத்தாக்கமான அம்சங்களை தொடர்ந்தும் வழங்குவோம்.” என்றார்.
வாடிக்கையாளர்களுக்கு லைஃவ்ஸ்டைல் போனஸ் ஊடாக, பெறுமதி வாய்ந்த வாழ்க்கைமுறை வெகுமதிகளை வழங்கி, அதனூடாக அவர்களையும், அவர்களின் குடும்பத்தாரையும் வாழ்க்கையில் எதிர்பாராத அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை யூனியன் அஷ்யூரன்ஸ் மேற்கொண்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் WP/GT/5609 எனும் பதவிலக்கத்தின் கீழ் யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னைப் பதிவு செய்துள்ளதுடன், லைஃவ் ஸ்டைல் போனஸ் திட்டத்தை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சகல தேவைப்பாடுகளையும் நிவர்த்தி செய்துள்ளது. அதன் பிரகாரம், அதிர்ஷ்டசாலி தெரிவை நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்களும், சுயாதீன வெளியக நபர்களும் முன்னெடுத்திருந்ததுடன், அதனூடாக, இந்தச் செயன்முறையின் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்த்தித் தன்மை உறுதி செய்யப்பட்டிருந்தது.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 15.7 பில்லியனைக் கொண்டுள்ளது. 2022 ஜுன் மாதமளவில் ஆயுள் நிதியமாக ரூ. 51.5 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.