Site icon Eyeview Sri Lanka

ரீலோட் பொறியிலிருந்து விடுதலை

Share with your friend

இலங்கையின் மொத்த சனத் தொகையை விடவும் சில மடங்கு அதிகளவில் தொலைபேசிகள் காணப்படுவதாக அண்மைய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மொத்த சனத்தொகை 21 மில்லியன் என்ற நிலையில் தொலைபேசி இணைப்புக்களின் மொத்த எண்ணிக்கை 30.41 மில்லியனாகும். இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பத்துறை  அபரிமிதமான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது. அதிலும் மனிதனின் தொடர்பாடல் தேவைகளை பூர்த்தி செய்யும தொலைபேசிகள் தற்பொழுது மனித வாழ்க்கையின் இன்றியமையா அங்கமாகவே மாற்றம்பெற்றுள்ளது. இலங்கையில் தொலைபேசிகளில் வொய்ஸ் கோல்ஸ் மற்றும் இணைய சேவைகளை வழங்கும் பல தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் காணப்படுகின்றன.

நாட்டின் தொலைபேசி வாடிக்கையாளர்களில் பிற்கொடுப்பனவு (PostPaid) எண்ணிக்கையை காட்டிலும் முற்கொடுப்பனவு (Prepaid) வாடிக்கையாளர் எண்ணிக்கை மிகவும் அதிகமானதாகும். இன்று வரையில் பெரும் எண்ணிக்கையிலான தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் ரீலோட் திட்டங்களை பல வழிகளில் அறிமுகம் செய்துள்ளன. அவை ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்தால் அவற்றில் பெரும்பான்மையானவை வாடிக்கையாளரின் ஏதேனும் ஓர் தனிப்பட்ட அல்லது சில தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யக்கூடிய கடும் நிபந்தனைகளுடனான கட்டண அறவீட்டு பொறிமுறையை அடிப்படையாகக் கொண்ட பெக்கேஜ்களாகவே நிச்சயம் இருக்கும். 

இளைஞர் யுவதிகள், பணிகளில் ஈடுபடுவோர், வீட்டில் இருக்கும் பெற்றோர், வர்த்தகர் என அனைத்து தரப்பினருக்கும் தாங்கள் செலுத்தும் தொகைக்கு திருப்தியான சேவையை பெற்றுக் கொள்வதனை காட்டிலும் நிறுவனங்களினால் வடிவமைக்கப்பட்டுள்ள ஓர் ரீலோட் திட்டத்தை தெரிவு செய்து அதில் பயன்பெற வேண்டிய நிர்பந்தமே இதுநாள் வரையில் காணப்பட்டது, இதனையே நாம் ரீலோட் பொறி என அடையாளப்படுத்த முடியும்.

எனினும், தற்போது உலகின் முதனிலை தொலைதொடர்பு சேவை வழங்குனர்களில் ஒன்றான எயார்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவைகளை நன்கு ஆராய்ந்து. அறிந்து அவர்களின் அனைத்து வகையான தேவைகளுக்கும் பொருந்தக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முதல் முறையாக இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. முற்கொடுப்பனவு கட்டண முறையில் புது முயற்சியாக இதனை அடையாளப்படுத்த முடியும்.

எயார்டெல் நிறுவனம், இலங்கை வாடிக்கையாளர்கள் சிக்கித் தவிக்கும் ரீலோட் பொறியிலிருந்து அவர்களை விடுதலை செய்யும் யுக்தியொன்றை முதல் முறையாக  அறிமுகம் செய்துள்ளது.

எயார்டெல் நிறுவனம் இலங்கையில் தனது 4G சேவையை அறிமுகம் செய்வதுடன் நாட்டின் தொலைதொடர்பு கட்டமைப்பில் புரட்சிகரமான ஓர் புதிய Freedom Packs என்னும் கட்டண முறைமையை அறிமுகம் செய்கின்றது. இதன் மூலம் ஒரு மாதத்திற்கு ஒரு தடவை மட்டும் ரீலோட் செய்வது போதுமானதாகின்றது. எயார்டெல் நிறுவனத்தின் Freedom Packs 4G டேட்டா சேவையை இலங்கை வாடிக்கையாளர்களும் இனி பெற்றுக்கொள்ள முடியும். 

வெளிப்படையானதும், நிபந்தனைகள் குறைந்ததுமான இந்த Freedom Packs திட்டத்தின் கீழ் அடிக்கடி ரீலோட் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு ரீலோட் மூலம் வொய்ஸ் மற்றும் டேட்டா ஆகிய இரண்டு வகை சேவைகளையும் பயனர்கள் தடையின்றி பெற்றுக்கொள்ள முடியும்.

கோவிட் பெருந்தொற்று நெருக்கடியினால் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு நாட்டில் தற்பொழுது இணையத்தின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர் உள்ளீடுகளைக் கொண்டு எயார்டெல் நிறுவனம் பயனர்களுக்கு எளிமையான முறையில் சேவையை பெற்றுக்கொள்ளக்கூடிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக தற்பொழுது இணையப்பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தொலைதொடர்பு பயனர்கள் எளிமையானதும் பெறுமதி வாய்ந்ததுமான சேவையை வழங்கும் நோக்கில் எயார்டெல் நிறுவனம் இந்த Freedom Pack திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எவ்வித கட்டுபாடுகளும் இல்லாத எயார்டெல் சேவைக்கு மாறுவதற்கு இதுவே சிறந்த தருணம் என்கின்றார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷீஸ் சந்திரா.

இலங்கையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக மூன்று மில்லியன் ரீலோட் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் சந்தையில் ரீலோட் அட்டைகள் எந்தளவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது என்பதனை நாம் புரிந்து கொள்ள முடியும். 

அழைப்புக்களுக்கும், டேட்டா பயன்பாட்டுக்கும் தனித்தனியாக விசேடமாக வடிவமைக்கப்பட்ட திட்டங்களை தொலைதொடர்பு நிறுவனங்கள் வழங்குகின்றன. மேலும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பாக பயன்படுத்தும் நேரம், தரம், தெளிவு என இந்தப் பட்டியல் நீள்கின்றது. சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு ஒரு தனி பெக்கேஜ், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு ஒரு தனிப் பெக்கேஜ் என ஒவ்வொன்றுக்கும் நிபந்தனைகளுடனான பல்வேறு தனி பெக்கேஜ்களை சந்தையில் காண முடிகின்றது. 

இதன் மூலம் வாடிக்கையாளர் தாங்கள் செலுத்தும் பணத்திற்கு தாங்களுக்கு விருப்பமான ஓர் தெரிவினை அல்லது சேவையை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர். அதாவது ஏதாவது ஓர் ரீலோட் பெக்கேஜை பெற்றுக் கொண்டால் இன்னும் பல விடயங்களை இழக்க நேரிடுகின்றது அல்லது அதற்காக தனித் தனியாக ரீலோட் செய்ய நேரிடுகின்றது. இதனையே நாம் ரீலோட் பொறி எனக் குறிப்பிடுகின்றோம். 

எயார்டெல் Freedom Pack மூலம் இந்த மரபு ரீதியான ரீலோட் பொறிக்குள் இருந்து மீள ஒர் அரிய சந்தர்ப்பம் உதயமாகியுள்ளது. ஒரு மாத காலத்திற்கே உரிய இந்த திட்டத்தில் ஒரு தடவை நீங்கள் ரீலோட் செய்தால் போதுமானது. உங்களது தொலைபேசியின் வொய்ஸ் கோல் மற்றும் டேட்டா பயன்பாடு குறித்த அனைத்துவிதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த எயார்டெல் Freedom Pack தொழிற்படுகின்றது. குறிப்பாக பாவனை தொடர்பில் எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது. வழமையாக இலங்கையில் முற்கொடுப்பனவு முறையில் ரீலோட் செய்து பயன்படுத்தும் வாடிக்கையாளர் ஒருவர் சராசரியாக ஒரு மாதம் பயன்படுத்தும் பெறுமதியிலும் ஐந்து மடங்கு பெறுமதியான சேவைகளை இந்த ஒரே பெக்கேஜ் வழங்குகின்றது. எயார்டெல் நிறுவனத்தின் 4G தொழில்நுட்ப சேவையானது 99 வீதம் ஸ்ட்ரீமிங் அனுபவத்தைப் பயனர்களுக்கு வழங்குகின்றது. கட்டடங்களின் உள்ளக பகுதிகளிலும் தெளிவான 4G சமிக்ஞை காணப்படுகின்றது. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொலைபேசி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பும் அவர்களிடம் நடாத்திய நேர்காணல்களின் போது அவர்கள் எமக்கு வழங்கிய கருத்துக்களை சுருக்கமாக பார்க்கலாம்.

ஆர். முரளிதரன் – ஹட்டன் (ஆசிரியர்)

“எனது பெயர் முரளி, நான் ஹட்டனில் வசிக்கின்றேன், நான் ஓர் ஆசிரியர், சமூக செயற்பாட்டாளர். பெருந்தொற்று காலப் பகுதியில் இணைய வழியாகவே நான் எனது மாணவர்களைத் தொடர்பு கொண்டு கற்பிக்கின்றேன், பல்வேறு சமூக செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றேன், இதுவரை காலமும் நான் குறிப்பிட்ட ஓர் நிறுவனத்தின் ரீலோட் திட்டத்தையே பயன்படுத்தி வந்தேன், அடிக்கடி நான் ரீலோட் செய்ய நேரிடுவதுடன் போதியளவு கவரேஜ் இல்லாத காரணத்தினால் எனக்கு எனது பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை உருவாகியது. நான் செலவிடும் பணத்திற்கு திருப்தியான சேவை கிடைக்காத காரணத்தினால் விரக்தியடைந்திருந்த நான் அநேக சந்தர்ப்பங்களில் சமூக ஊடகங்களிலும் அந்த நிறுவனத்தை விமர்சனம் செய்து வந்தேன். எனினும் தற்பொழுது எயார்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரீலோட் திட்டம் மிகவும் வெளிப்படைத்தன்மையுடையதாக காணப்படுகின்றது. இது என்னைபோன்றே இளைஞர் சமூகத்திற்கு ஓர் நல்ல வாய்ப்பாக கருத வேண்டும். ஏனெனில் குறைந்த செலவில் நிறைந்த பயனை அடைய முடிவதுடன், தரமான இடையூறு இல்லாத சேவையை பெற்றுக்கொள்ள முடிகின்றது. நான் மாறிவிட்டேன்.”

கேதீஸ்வரன் மயூரதி – யாழ்ப்பாணம் (MoJo ஊடகவியலாளர்) 

“நான் MoJo என்கிற சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வருகின்றேன், வடக்கிலிருந்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றேன். வீட்டில் நிலையான தொலைபேசி கட்டமைப்பும் இணைய இணைப்பும் இருக்கிறது. எனினும் இரவு நேரத்தில் அதிகளவு டேட்டாவை நான் பயன்படுத்துவதில்லை. ஆனால் அதற்கான கட்டண சலுகை எதுவும் வழங்கப்படுவதில்லை, காணொளிகளை தரவிறக்குவது தரவேற்றம் செய்வது போன்றவற்றை அதிகளவில் செய்யும் போது எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள டேட்டா கட்டணங்கள் பெருமளவில் மாற்றமடைகின்றது. எனது தொலைபேசியில் ஏனைய நெட்வேர்களுக்கு எடுக்கும் அழைப்புக்களுக்கு அதிகளவு கட்டணம் செலுத்த நேரிடுவதுடன் உள்ளக அழைப்புக்கள் மட்டுமே இலவசமாகும். எனவே ரீலோட் கட்டணங்களை செலுத்தினாலும் நான் எதிர்பார்க்கும் பயனை அடைய முடியாதிருக்கின்றது. எனவே நான் எயார்டெல் நிறுவனத்தின் புதிய ப்ரீடம் பெக்பேகஜிற்கு மாறியுள்ளேன். இப்பொழுது யூடியூப், பேஸ்புக், போன்ற சமூக ஊடகங்களில் சுதந்திரமாகவும் அதிவேகமாகவும் உலவித் திரிந்து தகவல்களை திரட்டவும் காணொளிகளை தரவிறக்கி காணொளிகளை தரவேற்றவும் சுலபமாக முடிகின்றது.

சுரேஸ்குமார் அனோஜன்கொழும்பு 

“நான் அரசாங்க பல்கலைக்கழகமொன்றில் வணிக முகாமைத்துவ கற்கைநெறியை பயின்றுவருவதுடன், யூடியூப் சனல் ஒன்றையும் வைத்திருக்கின்றேன். கோவிட் பெருந்தொற்று காலத்தில் எனது கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எனது கலைத்துறை கனவை மெய்ப்பித்துக் கொள்வதற்கும் இணையம் பேருதவியாக காணப்படுகின்றது. எனது நண்பர் வட்டாரம் பெரியது, ஒவ்வொரு நண்பரும் வெவ்வேறு நெட்வேர்க்கின் சிம்களை பயன்படுத்துகின்றனர் அவர்களுடன் அரட்டை அடிப்பதற்கும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கும் நான் இரண்டு வெவ்வேறு சேவை வழங்குனர்களின் சிம்களை பயன்படுத்தினேன் எனினும் அடிக்கடி ரீலோட் செய்ய நேரிட்டது, சில சந்தர்ப்பங்களில் நாள் தோறும் ரீலோட் செய்ய நேரிடும், அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை ரீலோட் செய்ய நேரிடும் அதிலும் சில நண்பர்களுடன் வொய்ஸ் கோல்ஸ் எடுத்து அரட்டையடிக்க முடியாது, டேட்டாவும் மிக வேகமாக தீர்ந்து விடுகின்றது, பம்பலப்பிட்டியில் நான் இருக்கும் பகுதியில் ஊரடங்கு காலத்தில் அடிக்கடி ரீலோட் செய்ய முடியாத நிலை ஏற்படுகின்றது. அண்மையில் நான் எயார்டெல்லின் ப்ரீடம் பெக்கிற்கு மாறினேன், அது எனது 90 வீதமான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலானதாக காணப்படுகின்றது. ஒரே ரீலோட்டின் மூலம் ஒரு மாதம் வரையில் வொய்ஸ் மற்றும் டேட்டா தேவைகளை பூர்த்தி செய்ய முடிகின்றது.

வொய்ஸ் கோல் அல்லது டேட்டா தேவைக்காக நாம் ஓர் பெக்கேஜை தெரிவு செய்யும் போது ஏனைய நெட்வர்களுக்கான கட்டணங்கள், டேட்டா பயன்பாட்டுத் திட்டம், பகல் நேர ஒதுக்கீட்டு அளவு, இரவு நேர ஒதுக்கீட்டு அளவு என பல்வேறு கேள்விகள் எம்முன் எழும். எனினும், அநேகமான சந்தர்ப்பங்களில் பல தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் பல்வேறு நிபந்தனைகள், மறைமுகமான அறவீட்டுத் திட்டங்களுடன் சேவைகயை வழங்குகின்றன. 

எயார்டெல் நிறுவனம் மிகவும் தெளிவானதும் வெளிப்படைத்தன்மையானதுமான ரீலோட் கட்டண முறையை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

பாரதி எயார்டெல் லங்கா நிறுவனம் 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் திகதி இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டது. மிக வேகமாக ஒரு மில்லியன் வாடிக்கையாளர்கள் சேவையை பெற்றுக்கொண்ட நிறுவனமாக எயார்டெல் நிறுவனம் திகழ்கின்றது. நாட்டின் முன்னணி தொலைதொடர்பு சேவை வழங்குனர் நிறுவனங்களில் ஒன்றாக எயார்டெல் நிறுவனம் தடம்பதித்து வீறுநடை போட்டு வருகின்றது என்றால் மிகைப்படாது.

அனைத்து Freedom pack தெரிவுகளிலும் 1000 A2A SMS சேவைகளைப் பெற முடியும்.


Share with your friend
Exit mobile version