லின்க் நெசுரல் நிறுவனம் Race The Pearl சைக்கிள் ஓட்டபோட்டி வீரர்களை ஊக்குவிப்பதற்கு அனுசரனை வழங்கியது

Home » லின்க் நெசுரல் நிறுவனம் Race The Pearl சைக்கிள் ஓட்டபோட்டி வீரர்களை ஊக்குவிப்பதற்கு அனுசரனை வழங்கியது
Share with your friend

இலங்கையின் பருத்தித் துறையில் இருந்து தேவேந்திர முனை வரையிலான 600km உள்ளடங்கியதாகும். இச்சைக்கிள் ஓட்டப் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. 

இச்சைக்கிள் ஓட்டப் போட்டியில் தனி நபர் பிரிவில் கலந்து கொண்ட ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த வீரர் டோபிரிட் 23 மணித்தியாலம் 06 நிமிடத்திலும்  இச்சைக்கிள் ஓட்டத்தை முடித்து வெற்றிக் கிண்ணத்தை தனது ஆக்கிக் கொண்டார். அதேபோல் அஞ்சல் ஓட்ட முறையில் போட்டியில் ஈடுபட்ட வீரர்கள் 18 மணியளங்களில் 10 நிமிடங்களில் இச்சைக்கிள் ஓட்டப் போட்டியை முடித்து keleni cycling வீரர்கள் வெற்றி அடைந்தார்கள். 

உள்நாட்டு மற்றும் சர்வதேசத்தை வென்றெடுத்த லின்க் நெசூரல் லின்க் சமஹன் மற்றும் லின்க் சுவஸ்த அமுர்த்தம் ஆகியவை இந்த தீவை சர்வதேசத்திற்கு உயர்த்துகிறது. அங்கீகரிக்கப்பட்ட இலங்கை மற்றும் சர்வதேச சைக்கிள் ஓட்டப் போட்டி வீரர்களின்  உடல் அழுத்தம், தாகம், கலப்பு போன்றவற்றை நீக்கி அவர்களை ஊக்குவிக்கும் முகமாக லின்க் சமஹன், அதேபோல் அமுர்த்தம் பானம் வழங்கப்பட்டது. 

இவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் தாகத்தையும் மேம்படுத்த லின்க் நெச்சுரல் நிறுவனத்தின் குழுவினர் பருத்தித் துறை, வவுனியா, தம்புள்ள, வெள்ளவாய மற்றும் தேவேந்திர முனை ஆகிய இடங்களில் உள்ள ஒவ்வொரு ஓய்வு இடங்களிலும் பணியமர்த்தப்பட்டனர். அங்கு அவர்கள் சைக்கிள் ஓட்ட வீரர்களின் தங்கள் கடினமான களைப்புமிக்க சைக்கிள் ஓட்டத்திலிருந்து மீட்டெடுக்க அயராது பாடுபட்டனர். குளிர்ச்சி மிக்க அமுர்த்தம் பானமானது குருதி சுற்றோட்டத்தை மேம்படுத்தி உடல் அழுத்தத்தை குறைப்பதற்கு வழங்கப்பட்டது. 

அதேபோல் சைக்கிள் ஓட்ட வீரர்களின் மனநிலையை மேம்படுத்தவும், உடல், உள சக்தியை உயர்த்தவும் மற்றும் மழையுடன் காலநிலையை கருத்தில் கொண்டு கோபியுடன் சமஹன் வழங்கப்பட்டது. இதனை சைக்கிள் ஓட்டவீரர்களும், அவர்களின் உதவி குழுவினரும் புகழ்ந்து பாராட்டினர்கள். 

சைக்கிள் ஓட்ட வீரர்களின் உடல் மற்றும் உள ரீதியான மேம்பாட்டையும் அவர்களின் ஆற்றலையும், திறமையையும் வெளிப்படுத்த சிறந்த ஒரு பானமாக அமைந்திருந்தது என்பது அவர்கள் அனைவரினதும் கருத்தாகும்.


Share with your friend

Leave a Reply

%d