வர்த்தக மகளிர் Tag Rugby Sevens போட்டியில் CDB அணி வெற்றி

Home » வர்த்தக மகளிர் Tag Rugby Sevens போட்டியில் CDB அணி வெற்றி
Share with your friend

சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சியின் (CDB) மகளிர் ரக்பி அணி, அண்மையில் இடம்பெற்ற வர்த்தக மகளிர் Tag Rugby Sevens போட்டித் தொடரின் சம்பியன்களாக வெற்றி வாகை சூடியிருந்தனர்.

இந்த வெற்றியைப் பெறுவதற்கு, CDB அணி, MAS மற்றும் சம்பத் வங்கி அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி, முறையே 5-0 மற்றும் 20-0 எனும் புள்ளி அடிப்படையில் வெற்றியீட்டியது. இந்தப் போட்டித் தொடரின் சிறந்த வீராங்கனையாக CDB இன் இமல்கா பொன்சேகா தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக ரக்பி மற்றும் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் (MRFA) வர்த்தக Rugby Sevens முன்னெடுக்கப்படுவதுடன், இரண்டு ஆண்டுகளின் பின்னர் இம்முறை இந்தப் போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு CR & FC மைதானத்தில் இந்தப் போட்டிகள் இடம்பெற்றன. இந்த ஆண்டின் Sevens போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்திருந்தன. 50 ஆவது தடவையாக இந்தப் போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், ஆண்கள் சம்பியன்ஷிப் போட்டிகளுடன், மகளிர் Tag Rugby Sevens போட்டிகளும் இடம்பெற்றன. 2018 ஆம் ஆண்டில் CDB அணி இந்தப் போட்டித் தொடரை வெற்றியீட்டியிருந்ததுடன், 2019 ஆம் ஆண்டில் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

C:\Users\ravindu.sandeepa\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.Word\IMG-20220924-WA0123.jpg

CDB இன் இமல்கா பெர்னான்டோ சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெற்றுக் கொள்கின்றார்.

C:\Users\ravindu.sandeepa\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.Word\IMG-20220924-WA0111.jpg

வெற்றியீட்டிய CDB மகளிர் ரக்பி அணி 


Share with your friend

Leave a Reply

%d