Site icon Eyeview Sri Lanka

வாடிக்கையாளர் சேவைச் சிறப்பில் தனது 1ஆம் ஸ்தானத்தை செலான் வங்கி மீள உறுதி செய்தது

Share with your friend

தொடர்ச்சியான 3ஆவது வருடமாகவும் புகழ்பெற்ற LMD சஞ்சிகையின் நுகர்வோர் கருத்துக் கணிப்பின் பிரகாரம் தரப்படுத்தப்பட்டுள்ளது

அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, தொடர்ச்சியான மூன்றாவது வருடமாகவும் இலங்கையின் வங்கியியல் மற்றும் நிதியியல் துறையில் சிறந்த வாடிக்கையாளர் சேவைச் சிறப்பு என்பதில் முதலாம் ஸ்தானத்தை உறுதி செய்துள்ளது.

ஆரம்பம் முதல், செலான் வங்கி தனது வியாபார மாதிரியில் முக்கிய மற்றும் மிகவும் பெறுமதி வாய்ந்த அங்கமாக வாடிக்கையாளர்களைக் கருதுகின்றது. கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில் கடந்த இரண்டு வருட காலப் பகுதியில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, மிகவும் சவால்கள் நிறைந்த காலப்பகுதிக்கு முகங்கொடுத்திருந்த போதிலும், சேவை மேம்படுத்தல்கள் மற்றும் மெருகேற்றங்களினூடாக வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான மற்றும் பாதுகாப்பான சேவைகளை வழங்குவதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளது. வாடிக்கையாளர்கள் மீது செலான் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு மேலும் எடுத்துக்காட்டாக இந்த கௌரவிப்பு அமைந்துள்ளது.

செலான் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக இலங்கையில் காணப்படும் சிறந்த வாடிக்கையாளர் சேவைச் சிறப்புக்கான முதல்தர வங்கி எனும் ஸ்தானத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமை எமக்கு மிகவும் பெருமையளிக்கின்றது. ஒவ்வொரு துறையிலும் வாடிக்கையாளர் சேவைச் சிறப்பு என்பது அத்தியாவசியமானதாக அமைந்திருப்பதுடன், எந்தவொரு நிறுவனத்தினதும் பிரதான குணவியல்பாக அமைந்துள்ளது. தொற்றுப் பரவலுடனான காலப்பகுதியில், நடமாடுவதில் கட்டுப்பாடுகள் மற்றும் நேரடித் தொடர்புகளை பேணுவதில் கட்டுப்பாடுகள் போன்றன காணப்பட்ட நிலையில், சேவை மட்டங்களில் சிறப்பை உறுதி செய்வது என்பது மிகவும் சவால்கள் நிறைந்த காரியமாகும். எவ்வாறாயினும், வாடிக்கையாளர்களை மையப்படுத்தி வியாபாரச் செயற்பாடுகளை செலான் வங்கி முன்னெடுத்திருந்ததுடன், எமது வலையமைப்பைச் சேர்ந்த ஊழியர்களும் தமது வழமையான செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று, எமது சகல வாடிக்கையாளர்களினதும் தேவைகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தியிருந்தனர்.” என்றார்.

செலான் வங்கியின் செயற்பாடுகளில் சேவைச் சிறப்பு என்பதற்கு ஆரம்பம் முதல் முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் செயன்முறைகளில் வங்கி முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர் அனுபவ முகாமைத்துவ அணியினால் உரிய காலப்பகுதியில் வாடிக்கையாளர் திருப்திகரம் தொடர்பான கருத்துக் கணிப்புகள் முன்னெடுக்கப்பட்டு, சந்தையில் வங்கி தொடர்பில் நிலவும் கண்ணோட்டம் பற்றிய புரிந்துணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. வருடம் முழுவதிலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுமாற்றாக இரகசியத்தன்மை வாய்ந்த வகையில் கருத்துக் கணிப்புகள் முன்னெடுக்கப்பட்டு, சேவை வழங்கல்களின் வெற்றிகரமான நிலை தொடர்பில் அறிந்து கொள்கின்றது. வங்கிச் செயற்பாடுகளில் சேவைச் சிறப்பு என்பது ஒப்பற்ற வகையில் டிஜிட்டல் முறையிலும் நேரடியாகவும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் உதவியாக அமைந்துள்ளன.

வாடிக்கையாளர் சேவைச் சிறப்புகள் தரப்படுத்தல்கள் என்பது 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் LMD இனால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஒன்லைன் கருத்துக் கணிப்பின் பிரகாரம் வழங்கப்பட்டிருந்தன. வாடிக்கையாளர் தன்னிறைவு மற்றும் சேவைத் தரம் தொடர்பில் திருப்தி போன்ற பதினெட்டு பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த சேவை வர்த்தக நாமங்களுக்கு வாடிக்கையாளர்கள் வாக்களித்திருந்தனர். அதன் பிரகாரம், நாட்டிலுள்ள பத்தொன்பது அரச மற்றும் தனியார் துறை வங்கிகளிலிருந்து செலான் வங்கியை சிறந்த வாடிக்கையாளர் சிறப்புக்காக வாடிக்கையாளர்கள் வாக்களித்திருந்தனர்.

ஆரியரட்ன தொடர்ந்து குறிப்பிடுகையில், “எமது இலக்குகளில் செலான் வங்கியைச் சேர்ந்த அனைவரும் காண்பிக்கும் அர்ப்பணிப்புக்காகவும், இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியிலும் தமது வங்கிச் சேவைகளை முன்னெடுப்பதற்காக செலான் வங்கியின் மீது நம்பிக்கை கொண்டிருந்த சகல வாடிக்கையாளர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். வாடிக்கையாளர்களை அன்புடன் அரவணைக்கும் வகையில் செயலாற்றுவதற்கு செலான் வங்கி தொடர்ந்தும் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், எதிர்காலத்திலும் அவ்வாறு செயலாற்றும்.” என்றார்.

2020 ஆம் ஆண்டில் நாடு தொற்றுப் பரவலுக்கு முகங்கொடுத்திருந்த காலப்பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான நடமாடும் ATM சேவைகள் மற்றும் ஒன்லைன் கொடுப்பனவு வசதிகளை இலகுவாக மேற்கொள்ளக்கூடிய வகையில் தனது சேவை வழங்கல்களை டிஜிட்டல் மயமாக்கம் செய்து விரிவாக்கம் செய்திருந்ததில் செலான் வங்கி முன்னிலையில் திகழ்ந்தது. பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான திறன் மற்றும் அறிவூட்டல்களை மேற்கொள்ளும் வகையில் மெய்நிகர் பயிற்சிப்பட்டறைகளை முன்னெடுத்து, சவால்களுக்கு முகங்கொடுப்பது பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்தது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில், சுகாதாரத் துறைக்கு பல்வேறு பங்களிப்புகளை வழங்கியிருந்ததுடன், தனது வியாபாரச் செயற்பாடுகளைச் சேர்ந்த சகல பங்காளர்களினதும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு முக்கியத்துவம் வழங்கிச் செயலாற்றியிருந்தது.

அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, அதிநவீன தொழில்நுட்பம், புதுமையான கணக்குகள் மற்றும் வகுப்பில் சிறந்த சேவைகள் மூலம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உன்னத வங்கி அனுபவத்தை வழங்குவதற்கான தொலைநோக்குடன் செயல்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர, சில்லறை மற்றும் நிறுவனங்கள் என வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வங்கி, நாடு முழுவதிலும் 540 க்கும் அதிகமான வாடிக்கையாளர் தொடர்பு கொள்ளும் அலகுகளைக் கொண்டுள்ளது. பிற்ச் மதிப்பீடுகளால் செலான் வங்கி, தேசிய நீண்டகால மதிப்பீடு ‘A(LKA)’ ஆக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதனூடாக செயல்திறன் சிறப்பைக் கொண்ட நிதி ரீதியாக நிலையான அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைகள் செலான் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதற்கான உறுதியான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

படம் – கபில ஆரியரட்ன, செலான் வங்கியின் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி


Share with your friend
Exit mobile version