உங்களுக்கு தெரியுமா? விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்துறைகளை (STEM) பாடசாலையில் தெரிவுசெய்யும் மாணவர்களின் எண்ணிக்கையில் ஆண்களைப் பின்தள்ளி பெண்கள் பெரும்பான்மை வகிக்கின்றனர். அதேசமயம் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்துறைகளில் (STEM) பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை கால்ப்பங்கு அல்லது அதற்கும் குறைவாக உள்ளது. தகவல் தொழில்நுட்பம், பொறியியல் போன்ற வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்ற அதிக வருமானமீட்டக்கூடிய துறைகளில் பால்நிலை வேறுபாடு மிக அதிகமாக காணப்படுகிறது.
இலங்கையில் பால்நிலை அடிப்படையில் குறைந்தளவான பிரதிநிதித்துவம் எவ்வளவு பாரதூரமாக இருக்கின்றது என்பதை விரிவாக பார்ப்போமேயானால் 2017 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையின்படி, கிட்டத்தட்ட 49 வீதமான பெண்கள் இளநிலை பட்டப்படிப்புகளுக்காக STEM துறைகளில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர். ஆனாலும் வேலைத்தளங்களை பொறுத்தவரையில் ஒருசில பெண்கள் மட்டுமே STEM துறைகளில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர் அல்லது முன்னிலை வகிக்கின்றனர். STEM துறைகளில் ஆண்களுக்கு சார்பான துறைகளாக கருதப்படும் கணிதம், பொறியியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மிகக்குறைந்த அளவு பெண் பிரதிநிதித்துவம் காணப்படுவதோடு சுகாதாரம், உயிரியல் போன்ற பராமரிப்பு சார்ந்த துறைகளையே பெண்கள் அதிகம் நாடுகின்றனர். ஆகவே STEM துறைகளில் மிகப்பெரிய அளவிலான பால்நிலை வேறுபாடு காணப்படுகிறது.
STEM துறைகளில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன?
STEM துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவமானது தீங்கேற்படுத்தும் ஒரே மாதிரியான பால்நிலை சார் ஒரேமாதிரியான உளஎண்ணங்கள், விழுமியங்கள் மற்றும் வகிபாகங்களால் வடிவமைக்கப்படுகின்றன. பெண்கள் பொதுவாக வீட்டை பராமரிப்பவர்களாகவும் ஆண்களே தொழில் புரிபவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கைகள் பெண்கள் அதிகம் படிக்க தேவையில்லை என்ற மனநிலையை உருவாக்குகிறது. அதனால் பெண்களின் கல்விக்கு முதலீடு செய்ய யாரும் முன் வருவதில்லை. அதேநேரம் STEM துறையானது ஆண்களுக்கு மட்டும் உகந்தது என்றும் பெண்களால் ஆண்களுக்கு இணையாக அந்த துறைகளில் வெற்றிபெற முடியாது என்ற எண்ணமும்; உள்ளது. இந்தப் பாகுபாடு உண்மையில் இந்த துறைகளில் உள்ள ஆண்களையும் பெண்களையும் பாதிக்கிறது. பெண்கள் பொதுவாக தங்களது கல்வியையும் பணியையும் சமுதாயத்தின் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவுசெய்கின்றனர். ஆண் குடும்ப உறுப்பினர்களும் கல்வியிலாளர்களும் தொழில்வழங்குனர்களும் அந்த விழுமியங்களை ஏற்றுக்கொண்டு பெண்களை வழிநடத்துகின்றனர். இவை STEM துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கான பிரதானமான சவால்களாக காணப்படுகிறன.
இலங்கையில், பல்லடுக்கு நெருக்கடியானது STEM துறைகளில் பால்நிலை இடைவெளியை அதிகரிக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தீங்கு விளைவிக்கும் பால்நிலை விழுமியங்கள் மற்றும் பாரபட்சங்களை கட்டியெழுப்புதல், பொருளாதார கஷ்டங்கள் ஆகியன பெண்களின் கல்விக்கான அணுகலை பாதித்துள்ளதுடன், குடும்பங்களில் அதிகரித்து வரும் செலீனங்கள் மற்றும் வறுமையை சமாளிக்க மகள்களுக்கு பதிலாக தங்கள் மகன்களுக்கு கல்வி கற்பிக்கின்றனர்.
ஏன் STEM துறையில் அதிகமான பெண்கள் அவசியமாகவுள்ளனர்?
இலங்கை தற்போது எதிர்நோக்கி கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலைமையில் STEM துறைகளில் பால்நிலை இடைவெளியை பற்றி கவனம் எடுப்பது முன்னெப்போதையும் விட மிக முக்கியமான விடயமாக காணப்படுகிறது. பெரும்பான்மையான பணிகள் டிஜிட்டல் மயமாகக்கப்பட்டுவரும் இந்த வேளையில் பெண்கள் இதிலிருந்து பின்வாங்காது மாற்றங்களை ஏற்றுக்கொண்டு நிலையான எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை வழங்குவது மிக அவசியமான ஒன்றாகும். இலங்கை தொழில்துறையில் பெரும்பாலான பெண்கள் திறன் குறைந்த, முறைசாரா பணியாளர்களாகவே காணப்படுவதோடு உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் அதிக வருமானமீட்டக்கூடிய தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பெண்கள் மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகின்றனர். இந்த பால்நிலை இடைவெளியை நிவர்த்தி செய்வதன் மூலம் பெண்களுக்கு சிறந்த அதிக திறனுடைய பணி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதோடு, தொழில்நுட்பத்தாலும் புத்தாக்கங்களாலும்; வழிநடாத்தப்படும்; பொருளாதார வளர்ச்சியில் அர்த்தமுள்ள வகையில் இணைத்துக்கொள்ளவும் முடியும்.
அதே நேரத்தில், இந்தத் துறைகள் வளர்ச்சியடையும் மற்றும் விரிவடையும் போது, இன்றைய சிக்கலான சமூக சவால்களுக்கு புத்தாக்கமான மற்றும் உள்ளடங்கலான மற்றும் வினைத்திறனான தீர்வுகளைக் கொண்டுவருவதற்கும், பொருளாதார மற்றும் அபிவிருத்தி குறிகாட்டிகளில்; நமது கூட்டு செயற்திறனை வலுப்படுத்துவதற்கும் பெண்களின் திறன்கள் மற்றும் முன்னோக்குகள் கொண்டு வரப்படுவது அதிகரித்த முறையில் அவசியமாகின்றது. உதாரணமாக, ஊழுஏஐனு-19 பெருந்தொற்றின் போது, மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பெண்களே தடுப்பூசிகளின் வளர்ச்சிக்கு தலைமை தாங்கிய அதே நேரத்தில் பெரும்பாலும் விஞ்ஞான ஆய்வில் இருந்து விலக்கப்பட்ட நுணுக்கமான விடயமான பெண்களின் உடலில் ஊழுஏஐனு-19 இனுடைய பால்நிலை தாக்கங்கள் தொடர்பில் ஆய்வினையும் மேற்கொண்டார்கள்.
இணைய வழி வன்முறைகள் அதிகரித்து வரும் காலப்பகுதியில் பெண் பாவணையாளர்களுக்கு தேவையான விழிப்புணர்வை வழங்குபவர்களாகவும் அவர்களை பாதுகாப்பதற்கான முறைமைகளை உருவாக்குபவர்களாகவும் தொழில்நுட்பத்துறையில் இருக்கும் பெண்களே இருக்கின்றனர். செயற்கை நுண்ணறிவின் (யுஐ) வளர்ச்சியில் பெண்களின் தொழில்நுட்ப பங்களிப்பும் மேற்பார்வையும்; செயற்கை நுண்ணறிவின் செயன்முறைகளில் ஏற்படும் பால்நிலைச் சார்புகளுக்கெதிராக போராட இன்றியமையாததாக காணப்படுகிறது.
அனைத்து சமுதாயங்களையும். பால்நிலைகளையும். நுகர்வோர் குழுக்களையும் சென்றடையக்கூடிய தயாரிப்புகளையோ அல்லது புத்தாக்கங்களையோ பெண்களின் சமமான பங்களிப்பு இல்லாமல் உருவாக்குவது கடினமான ஒன்றாகும்.
இலங்கையின் STEM துறையில் பால்நிலை இடைவெளியை இல்லாதொழிக்க என்ன செய்ய வேண்டும்?
இலங்கையின் STEM துறைகளில் பால்நிலை இடைவெளியை இல்லாதொழிப்பதற்கு சமுதாயத்திலும், நிறுவனங்களிலும், STEM துறைசார் கட்டமைப்புகளிலும் சரியான இலக்குடன் கூடிய தொடர்ச்சியான முயற்சி அவசியமானதாகும்.
உலக நாடுகளைப் போல நாமும் சமூகத்தில் காணப்படும் தீங்குவிளைவிக்க கூடிய பால்நிலை ஒரேமாதிரியான உளஎண்ணங்களை உடைத்து, பெண்;களின் பங்களிப்பையும் திறமையையும் STEM துறைகளை விரிவுபடுத்த பயன்படுத்தவேண்டும். ஆனால் இதனுடைய அர்த்தம் என்ன?
இது ஒவ்வொரு பால்நிலை தொடர்பான நமது தனிப்பட்ட அனுமானங்கள் மற்றும் சார்புகளை அங்கீகரித்து, அவற்றை நமது அன்றாட வாழ்வில் நிவர்த்தி செய்வதற்கான முழுமையான முயற்சிகளை குறிக்கிறது.
எங்களுடைய கல்விக்கட்டமைப்பு மற்றும் அணுகுமுறைகளை மாற்றியமைக்கவேண்டும். பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் எந்தவித பால்நிலை வேறுபாடும் இல்லாமல் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த விடயங்களை தடையின்றி செய்வதற்கு அனுமதி அளிப்பதுடன் ஊக்குவிக்கவும் வேண்டும். தற்போதைய அணுகு முறையை விட்டு வெளியே வந்து அனைவரும் அவர்கள் விரும்பும் துறையில் ஊக்குவிக்கப்பட வேண்டும். உதாரணமாக ஆண்களை வீட்டு திறன்களிலும் கலைகளிலும் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். பெண்களை இயந்திரவியல் போன்ற துறைகளிலும் ஆண்களால் மட்டும் முடியும் என்று கருதப்படும் விளையாட்டு துறைகளிலும் ஊக்குவிக்கவேண்டும்.
நமது தற்போதைய கல்விக்கட்டமைப்புகளானது பால்நிலை எல்லைகளை தாண்டியவர்களை ஏற்றுக்கொள்வதோடு கண்டுபிடிப்பாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் என ஆகுவதற்கு வழியமைத்துக் கொடுக்கவேண்டும். அனைத்து நிலை பாடத்திட்டங்களும் சமூக அவலங்களை புரிந்துகொள்ளக்கூடியதாகவும் பாகுபாடுகளைப் புரிந்து கொண்டு தீர்மானங்களை எடுக்கத்தக்க அறிவை வழங்குபவையாகவும் மறுசீரமைக்கப்பட வேண்டும். கல்வியியலாளர்கள் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறைகளில் இருக்கும் பிரச்சினைகளை ஆராயும் போது வேறுபட்ட பால்நிலையை சேர்ந்தவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை மனதிற் கொள்ள வேண்டும்.
அதாவது பக்கச்சார்பான பால்நிலை கட்டுப்பாடுகளை திணிப்பதற்கு பதிலாக ஊடகங்களினதும் கலைகளினதும் அணுகுமுறையில் தனிப்பட்ட இயலுமை, குணாதிசயங்கள் மற்றும் திறமையை அங்கீகரிக்கும் நிலையை கொண்டுவர வேண்டும். இதிலிருந்து பாரபட்சமான பால்நிலைகள் சார் பார்வையையும் வெறுப்பை வெளிப்படுத்தும் கருத்துக்களையும் ஒழிக்க முடியும்.
பெண்களை STEM துறைகளில் இருந்து ஒதுக்குவதை தவிர்த்து அவர்கள் STEM துறை வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான தடைகளை உடைத்து இந்த துறையில் முன்னணி வகிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். STEM துறைகளில் பாலின இடைவெளியை பூரணமாக இல்லாது ஒழிக்க இப்போது இருக்கும் நடைமுறைகளிலிருந்து விடுபட்டு, பாகுபாடற்ற நிலைக்கு செல்லவேண்டும். சம அளவான வேலைக்கு சம அளவு ஊதியம், சம அளவு விடுமுறைகள், குழந்தை பராமரிப்பு வசதிகள் நெகிழ்வான வேலைச்சூழல் போன்றவற்றை உருவாக்க வேண்டும். நிறுவனங்கள் இப்படியான மாற்றங்களை கொண்டு வருவது பால்நிலை இடைவெளியை ஒழிப்பதற்கும் திறமையான தொழிலாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்கும் உதவும். இது உலகளாவிய மற்றும் பிராந்திய ரீதியில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. STEM இல் பெண்களை உள்ளீர்க்கும், தக்கவைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்தத் துறைகளில் உள்ள முன்னணி தரப்பினர் அதிகளவில் அங்கீகரிக்கின்றனர். கூகிள், மைக்ரோசொப்ட் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழில்நுட்பத்துறையில் பெண்களை உள்வாங்குவதற்கும் அவர்களுடைய திறன்களை வளர்ப்பதற்குமான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. சில சந்தர்ப்பங்களில் சர்வதேச நிறுவனங்கள், தொழில்நுட்ப மையங்கள் மற்றும் அரசாங்கங்கள் தொழில்நுட்பத்துறையில் பெண்களை உள்வாங்குவதற்கு மிகவும் பல்வகைமைப்பட்ட மற்றும் உள்ளடங்கலான பொறிமுறைகளைக் கையாள்கின்றன.
STEM துறையின் எதிர்காலம் நம் அனைவருக்கும் சொந்தமானதாக இருக்கவேண்டும். STEM துறைகளில் பால்நிலை இடைவெளியை ஒழிப்பதன் மூலம் பெண்களை வலுவூட்டுவது மட்டுமின்றி, படைப்பாற்றல் மற்றும் புதுமைகளின் செழிப்பையும், அத்துடன் சமூகம் முழுவதும் தேவையான உள்ளடக்கம் மற்றும் முன்னேற்றத்தையும் கட்டவிழ்த்து விடுகிறோம்.
STEM துறைகளில் பெண்களின் பங்களிப்புக்கு தடையாக இருக்கும் விடயங்களை கண்டறிந்து அந்த தடைகளை உடைப்பதற்கான நேரம் இதுவாகும். இந்த வருட, விஞ்ஞானத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சர்வதேச தினத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சார்புகளை சவாலுக்குட்படுத்தி அனைவருக்குமான வளமான சுபீட்சமான மற்றும் மிகவும் சமமான விஞ்ஞான மற்றும் புத்தாக்க துறைக்கான எதிர்காலத்திற்காக புதிய பாதையை அமைப்போம்.