ஸ்டான்டர்ட் சார்ட்டட் உடன் தந்திரோபாய பாங்கசூரன்ஸ் பங்காண்மையில் யூனியன் அஷ்யூரன்ஸ் கைச்சாத்திட்டுள்ளது

Home » ஸ்டான்டர்ட் சார்ட்டட் உடன் தந்திரோபாய பாங்கசூரன்ஸ் பங்காண்மையில் யூனியன் அஷ்யூரன்ஸ் கைச்சாத்திட்டுள்ளது
Share with your friend

இலங்கையின் மாபெரும் பாங்கசூரன்ஸ் சேவைகளை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, உலகளாவிய ரீதியில் வங்கிச் சேவைகளை வழங்குவதில் முன்னோடியாகத் திகழும் ஸ்டான்டர்ட் சார்ட்டட் உடன் பாங்கசூரன்ஸ் பங்காண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கையில் பாங்கசூரன்ஸ் பிரசன்னத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு இந்த பங்காண்மை யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும்.

ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கியின் நுகர்வோர், பிரத்தியேக மற்றும் வியாபார வங்கியியல் பிரிவின் தலைமை அதிகாரி அரோஷன பெர்னான்டோ மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திடுகின்றனர்.

ஸ்டான்டர்ட் சார்ட்டட்டின் வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு சிறந்த காப்புறுதித் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்துவதாக இந்தப் பங்காண்மை அமைந்துள்ளது. இதில் சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் முதலீட்டு தீர்வுகள் போன்றன அடங்கியுள்ளதுடன், சிறந்த காப்புறுதி ஆலோசனைகளை வழங்குவதாகவும் அமைந்திருக்கும்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “காப்புறுதி தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை மேலும் இந்தப் பங்காண்மை உறுதி செய்வதாக அமைந்திருப்பதுடன், இலங்கையில் காணப்படும் முன்னணி பாங்கசூரன்ஸ் சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் கீர்த்தி நாமத்தை மேலும் வலிமைப்படுத்திக் கொள்ள முடியும். இலங்கையர்களின் கனவுக்கு வலுவூட்டும் மற்றுமொரு படியாக இது அமைந்துள்ளதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பெறுமதியை வழங்குவதற்கான எமது உறுதி மொழியை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இலங்கையில் பாங்கசூரன்ஸ் சேவைக்கான வாய்ப்பை மேலும் அதிகரிப்பதாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே கருத்துத் தெரிவிக்கையில், “ஸ்டான்டர்ட் சார்ட்டட் போன்ற சர்வதேச வங்கியொன்றுடன் பங்காண்மையை ஏற்படுத்த முடிந்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். எமது சென்றடைவை மேலும் விஸ்தரித்துக் கொள்வதற்கு இது உதவியாக அமைந்திருப்பதுடன், எமது புத்தாக்கமான தீர்வுகள் மற்றும் சேவைச் சிறப்பின் அனுகூலத்தை பல வாடிக்கையாளர்களுக்கு சென்றடையச் செய்வதற்கும் ஏதுவாக இருக்கும்” என்றார்.

இந்த தந்திரோபாய கைகோர்ப்பை ஸ்டான்டர்ட் சார்ட்டட்டும் வரவேற்றிருந்தது. நுகர்வோர், பிரத்தியேக மற்றும் வணிக வங்கியியல் பிரிவின் தலைமை அதிகாரி அரோஷன பெர்னான்டோ குறிப்பிடுகையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நிதித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு தம்மை தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளதுடன், ‘Here for good’ எனும் எமது வர்த்தக நாம உறுதி மொழிக்கமைய உண்மையாக செயலாற்றுகின்றோம். யூனியன் அஷ்யூரன்ஸ் உடனான இந்தப் பங்காண்மையினூடாக, எமது வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால பாதுகாப்பு திட்டத்தின் அனுகூலத்தை அனுபவிக்கக்கூடியதாக இருப்பதுடன், முதலீட்டுத் தீர்வாக அமைந்திருப்பதனூடாக பாதுகாப்பான எதிர்காலத்தையும் வழங்கும். எம் அனைவருக்கும் நிதிப் பாதுகாப்பான எதிர்காலம் என்பது முக்கியமானதாக அமைந்துள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் உடனான எமது பங்காண்மை என்பது எமது வாடிக்கையாளர்களின் சமகால தேவையை நிவர்த்தி செய்ய உதவியாக அமைந்திருக்கும் என கருதுகின்றோம்.” என்றார்.

இந்தப் பங்காண்மையினூடாக ஸ்டான்டர்ட் சார்ட்டட்டின் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான ஒரே கூரையின் கீழ் அமைந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதுடன், தமது வங்கியியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கையில் பரந்தளவு சிறந்த காப்புறுதித் தீர்வுகளையும் இலகுவாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

முன்னணி பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநர் எனும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாடு என்பதற்கு, ஒப்பற்ற வாடிக்கையாளர் சேவையுடன் புத்தாக்கமான டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதனூடாக மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆயுள் காப்புறுதித் தீர்வுகளில் பெருமளவு மக்கள் நாட்டம் காண்பிக்கும் நிலையில், இந்தப் பங்காண்மையினூடாக, நிபுணத்துவ ஆலோசனைகள், உயர் தீர்வுகள் மற்றும் சிறந்த நிதி ஆலோசனைகளை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 17.3 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 49.8 பில்லியனையும், 2021 டிசம்பர் மாதமளவில் மூலதன போதுமை விகிதமாக (CAR) 228% ஐக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், மாற்றமடைந்து வரும் ஆயுள் காப்புறுதித் துறையில் கவனம் செலுத்துகின்றது.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: