Site icon Eyeview Sri Lanka

அபான்ஸ் சுற்றுச்சூழல் சேவையுடன் இணைந்து TRI-ZEN குடியிருப்புக்களுக்குத் தனித்துவமான வீட்டுப் பராமரிப்பு சேவைகள் 

Share with your friend

இலங்கையின் முன்னணி ஆதன கட்டுமான நிறுவனமான John Keells Properties, மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தனது TRI-ZEN தொடர்மாடி குடியிருப்புக்கு பெறுமதி சேர் சேவையை வழங்கும் நோக்கில் தனித்துவமான வீட்டுப் பராமரிப்பு சேவை வழங்குனராக அபான்ஸ் சுற்றுச்சூழல் சேவை (பிரைவேட்) லிமிடட் நிறுவனத்தை நியமித்துள்ளது. TRI-ZEN குடியிருப்பாளர்களுக்கு இணையற்ற வசதிகளை வழங்குவது என்ற பரந்த நோக்குடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று John Keells Properties நிறுவனத்துக்கும் அபான்ஸ் சுற்றுச்சூழல் சேவைகள் நிறுவனத்துக்கும் இடையில் 2024 பெப்ரவரி 15ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த John Keells Properties நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான தலைவரும் John Keells Group இன் பிரதித் தலைவருமான நதீம் ஷம்ஸ் குறிப்பிடுகையில், “தொடர்மாடிக் குடியிருப்பு முடியும் தறுவாயில் இருப்பதுடன், குடியிருப்பாளர்கள் இங்கு வருவதற்கு முன்னர் அவர்களுக்கு பெறுமதி சேர் சேவைகளை வலுப்படுத்த நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.  குடியிருப்பாளர்களுக்கு சௌகரியமான வாழ்க்கைத் தரத்தை வழங்குவோம் என்ற எமது உறுதிமொழியின் ஒரு பகுதியாக முழுமையான மற்றும் சுத்தமான வீட்டுப் பராமரிப்பு சேவையை வழங்குவதற்கு அபான்ஸ் சுற்றுச்சூழல் சேவைகள் (பிரைவேட்) லிமிடட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். நம்பகமான வீட்டு உதவியைப் பெறுவதில் மக்கள் இன்று சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், இது குடியிருப்பாளர்களுக்கு ஒரு தொந்தரவில்லாத தீர்வாக அமையும் என்று நாம் கருதுகின்றோம். குடிமனைகளைக் கொள்வனவு செய்பவர்களுக்கு சௌகரியான பெறுமதி சேர் சேவைகளை வழங்குவதன் ஊடாக John Keells Properties நிறுவனம் தரமான வீடுகளை வழங்குவதில் உறுதியாக இருப்பதுடன், இதன் காரணமாக பெருநகர தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதிகளில் நாம் வேறுபட்டு நிற்கின்றோம். TRI-ZEN குடியிருப்பாளர்களுக்கு வழங்கும் இந்த விரிவான வீட்டுப் பராமரிப்புச் சேவையானது இலங்கையில் இந்த வகையில் குடியிருப்புக்களுக்கு சேவை வழங்கும் முதலாவது சந்தர்ப்பமாகும்” என்றார்.

அபான்ஸ் சுற்றுச்சூழல் சேவைகள் (பிரைவேட்) லிமிடட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பெஃய்ரோஸ் பஸ்செஞ்சய் குறிப்பிடுகையில், “குடியிருப்புத் தொகுதிகள், வர்த்தகக் கட்டடங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் முன்னணியான சுத்திகரிப்பு சேவை வழங்குனர் என்ற ரீதியில் கொழும்பு நகரின் இதயப் பகுதியில் உள்ள John Keells Properties நிறுவனத்தின் TRI-ZEN தொடர்மாடி குடியிருப்புடன் கூட்டாண்மை ஏற்படுத்தி பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். TRI-ZEN வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் தனித்துவமான தன்மையை நாம் புரிந்துகொண்டிருப்பதுடன், John Keells Properties நிறுவனத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளை சிறந்த முறையில் பூர்த்தி செய்வதை உறுதி செய்வோம்” என்றார். 

1985 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அபான்ஸ் சுற்றுச்சூழல் சேவைகள் (பிரைவேட்) லிமிடட் நிறுவனம், இலங்கையில் 1994 ஆம் ஆண்டு முதல், சுத்திகரிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளில் முன்னணியாளராகத் திகழ்ந்து வருகிறது. இது தற்போது பாரிய தொழில்நுட்பங்களைக் கொண்ட வீட்டுப் பராமரிப்பு நிறுவனமாகவும், இலங்கையின் ISO 9001: 2015 தரநிலைச் சான்றிதழைப் பெற்ற நிறுவனமாகவும் காணப்படுகிறது.

TRI-ZEN இன் கட்டுமானப் பணிகள் பூர்த்தியடைந்ததும் மூன்று குடியிருப்புக் கோபுரங்களும், 891 வீடுகளும் கொண்டதாக இருக்கும். இவை ஒவ்வொன்றும் 1,2,3 படுக்கை அறைகளைக் கொண்ட அலகுகளாகக் காணப்படும். இதன் ஒவ்வொரு அலகும் உலகத் தரத்திலான ஸ்மார்ட் வீட்டுத் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு அம்சங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருப்பதுடன், இது கொழும்பின் வணிக மற்றும் பொழுதுபோக்கு மாவட்டத்தின் மையத்தில் குடியிருப்பாளர்களுக்கு வசதியான மற்றும் சமகால வாழ்க்கை முறையை அனுபவிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். நகரப் பகுதியில் அமையப்பெறும் TRI-ZEN குடியிருப்புத் தொடர்மாடித் தொகுதியானது எண்ணற்ற குடியிருப்பு வசதிகள், பசுமையான இடங்கள், நடைபாதை, நீச்சல் தடாகங்கள், சிறந்த வசதிகளைக் கொண்ட உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய கூடம், விளையாட்டு அறைகள் போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. கொழும்பின் முக்கிய பொதுப் போக்குவரத்து வசதிகள், வணிக நிலையங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், பூங்காங்கள், மத வழிபாட்டு ஸ்தலங்கள், உணவகங்கள் மற்றும் எண்ணற்ற இடங்களை ஒரு சில படிகள் தூரத்தில் அடையக் கூடியதாக அமைந்துள்ளது.

TRI-ZEN தொடர்மாடி தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள +94 702 294 294 என்ற இலக்கத்துக்கு அழைக்கவும் அல்லது www.trizen.lk என்ற இணையத்தளத்துக்கு விஜயம் செய்யவும். 


Share with your friend
Exit mobile version