Eyeview Sri Lanka

அமெரிக்கா முன்வைத்த திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் கட்டமைப்பு வரி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள JAAF

Share with your friend

ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்காவின் திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் வரி கட்டமைப்பின்படி, இலங்கைக்கு விதிக்கப்பட்ட 20% வரி விகிதம் தொடர்பாக, ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வரி விகிதத்தை மாற்றுவதற்காக, அமெரிக்க வணிக பிரதிநிதிகளுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை நடத்திய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நிதி அமைச்சக செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அனைத்து அரச அதிகாரிகளுக்கும் JAAF தனது நன்றி மற்றும் பாராட்டுகளை இந்த அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

வொஷிங்டனில் உள்ள இராஜதந்திர குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மஹிந்த சமரசிங்க அவர்களின் பங்களிப்புக்கு JAAF சிறப்பு நன்றி தெரிவிக்கிறது. ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) மேலும் தெரிவித்ததாவது: “இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சமரசிங்க அவர்கள் ஏற்கனவே மேற்கொண்டு வரும் இராஜதந்திர முயற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்கள், இந்தப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடிக்க முக்கியமான பங்களிப்பாக இருந்துள்ளன. அவரது அர்ப்பணிப்புக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் வரி கட்டமைப்பின்படி, இலங்கைக்கு விதிக்கப்பட்ட 20% வரி விகிதம், பங்களாதேஷ், வியட்நாம், இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற பிற ஆடை உற்பத்தி நாடுகளின் கட்டண விகிதங்களுடன் ஏறக்குறைய ஒத்துப்போகிறது. இந்தியாவிற்கு 25% என்ற விகிதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண மாற்றம் மூலம், இலங்கை பிராந்தியத்தின் பிற நாடுகளுடன் நியாயமான வணிக போட்டியை நடத்தவும், அமெரிக்க சந்தையில் தன்னுடைய போட்டித்திறனை பராமரிக்கவும் முடியும் என ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

நெறிமுறை தொழிலாளர் நடைமுறைகள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் ஆடைத் துறையின் புத்தாக்கமான முன்னேற்றங்களுக்கான அர்ப்பணிப்புடன் அமெரிக்காவுடனான வணிக உறவை விரிவுபடுத்த JAAF எதிர்பார்க்கிறது ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களளின் மன்றம் (JAAF) தனது அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளது: “ஆடைத் துறையில் நாங்கள் கடைப்பிடிக்கும் மதிப்புகள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுடனான நமது இராஜதந்திர உறவுகள் வழியாக, இருநாட்டு வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் கூடுதல் வரி சலுகைகளைப் பெறவும் நாங்கள் வாய்ப்புள்ளதாக இருக்கிறோம் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Share with your friend
Exit mobile version