Ritzbury, இலங்கையின் அபிமானம் பெற்ற சொக்லட் வர்த்தக வர்த்தக நாமமான ரிட்ஸ்பரி, இலங்கையின் 13 தேசிய மெய்வல்லுநர்களுக்கு ரிட்ஸ்பரி “தாய்நாட்டுக்கு வீரர்” எனும் திட்டத்தின் கீழ் அனுசரணை வழங்கியிருந்தது. இந்த அணி, 25ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பல்வேறு சாதனை மிகுந்த திறமைகளை வெளிப்படுத்தியிருந்தது. இந்தப் போட்டிகள் தாய்லாந்தின், பங்கொக் நகரில் 2023 ஜுலை 12 முதல் 16 வரை நடைபெற்றன.
ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில், தற்போதைய ஆசிய கனிஷ்ட சம்பியனான 18 வயது நிரம்பிய தருஷி கருணாரட்ன, 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்ததுடன், ஓட்ட தூரத்தை 2:00:66 நிமிடங்களில் பூர்த்தி செய்திருந்தார். இவர் மேலும் சில சாதனைகளையும் பதிவு செய்திருந்தார். இதில் புதிய ஆசிய சம்பியன்ஷிப் சாதனை, கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் ஆசிய தலைவர், தெற்காசிய கனிஷ்ட சாதனை, இலங்கையின் சாதனை மற்றும் இலங்கை கனிஷ்ட சாதனை போன்றன இதில் அடங்குகின்றன. இலங்கையின் கனிஷ்ட மெய்வல்லுநர் ஒருவரினால் பதிவு செய்யப்பட்ட மிகச் சிறந்த சாதனையாக இது அமைந்துள்ளது. இந்நிகழ்வில், கயந்திகா அபேரட்ன வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆண்கள் 4x400m அஞ்சல் ஓட்ட அணியில், அருண தர்ஷன, ரஜித ராஜகருண, பபாசர நிகு மற்றும் காலிங்க குமாரகே ஆகியோர் அடங்கியிருந்தனர். இவர்கள் புதிய ஆசிய சம்பியன்ஷிப் சாதனையையும், இலங்கை சாதனையையும் பதிவு செய்து தங்கப்பதக்கம் வென்றிருந்தனர். இவர்களின் வினைத்திறனான செயற்பாட்டினால், உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் தகைமை பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. அதேவேளை, பெண்கள் 4x400m அஞ்சல் ஓட்ட அணியில் நதீஷா ராமநாயக்க, சயுரி மெண்டிஸ், நிஷேந்திர பெர்னான்டோ மற்றும் தருஷி கருணாரட்ன ஆகியோர் அடங்கியிருந்ததுடன், இவர்கள் இலங்கையின் புதிய சாதனை நேரத்தை பதிவு செய்து, இலங்கையின் பெண்கள் 4x400m அஞ்சல் ஓட்ட வரலாற்றில் உயர் பதக்க நிலையை பதிவு செய்திருந்தனர்.
குறிப்பாக, இலங்கை மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருந்ததுடன், ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கல விருதுகளையும் சுவீகரித்திருந்தது.
2011 ஆம் ஆண்டு முதல், ரிட்ஸ்பரி, சேர் ஜோன் டாபர்ட் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு ஏக அனுசரணை வழங்குவதனூடாக, இளம் மெய்வல்லுநர்களின் திறமைகளை இனங்கண்டு ஊக்குவித்த வண்ணமுள்ளது. இந்த அனுசரணையினூடாக, வருடாந்தம் 15,000க்கும் அதிகமான மெய்வல்லுநர்களுக்கு அனுகூலம் கிடைக்கின்றது. இந்த அனுசரணையின் நீடிப்பாக, இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் 15 திறன் படைத்த மெய்வல்லுநர்களுக்கு மேலும் நிதி அனுசரணையை ரிட்ஸ்பரி வழங்கி, தேசிய மட்டத்தில் தெரிவாவதற்கு ஆதரவளிக்கின்றது. ரிட்ஸ்பரி “தாய்நாட்டுக்கு வீரர்” எனும் புலமைப்பரிசில் திட்டம் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், பாடசாலை மட்ட மெய்வல்லுநர்களை தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்லும் ஆதரவளிப்புத் திட்டமாக அமைந்துள்ளது. தேசத்தில் மெய்வல்லுநர் சாதனைகள் படைக்கப்பட்ட அந்த காலத்தின் திறமைகளை மீள உருவாக்கும் நோக்குடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த ஆதரவுத்திட்டத்தினூடாக நாட்டின் மெய்வல்லுநர்களின் வளர்ச்சிக்கு பெருமளவு பங்களிப்பு வழங்கப்படுவதுடன், தேசத்தில் விளையாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்களிப்பு வழங்குநராகவும் கருதப்படுகின்றது.
ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை சிறந்த சாதனையை வெளிப்படுத்தியிருந்ததுடன், ஒட்டுமொத்த பதக்கங்கள் வரிசையில் நான்காம் இடத்தையும் பிடித்தது. இரண்டு ஆசிய சம்பியன்ஷிப் சாதனைகளை பதிவு செய்திருந்ததுடன், ஐந்து இலங்கை சாதனைகளையும் பதிவு செய்திருந்தது. மேலும், தெற்காசிய கனிஷ்ட சாதனை மற்றும் ஒரு தேசிய கனிஷ்ட சாதனையும் புரிந்திருந்தது. பங்கேற்றிருந்த 13 அங்கத்தவர்களில் 11 பேர் பதக்கங்களை வென்றிருந்தனர். இலங்கையில் மெய்வல்லுநர்களை கட்டியெழுப்பும் ரிட்ஸ்பரியின் முயற்சி கைகூடியுள்ளது என்பது இந்த சாதனைகள் சான்றாக அமைந்துள்ளன.