Site icon Eyeview Sri Lanka

ஆறு LEED சான்றுகளுடன் நிலைபேறாண்மையான செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஸ்டார் காமென்ட்ஸ் குரூப்

Share with your friend

முன்னணி ஆடை உற்பத்தியாளரான ஸ்டார் காமென்ட்ஸ் குரூப் (ஸ்டார்), நிலைபேறாண்மையான செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், அதனூடாக நேர்த்தியான சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிறுவனத்தின் மூன்று உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அமெரிக்காவின் கிறீன் பில்டிங் கவுன்சிலின் (USGBC), Leadership in Energy and Environmental Design (LEED) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

புத்தலவில் அமைந்துள்ள ஸ்டார் காமென்ட்ஸ் தொழிற்சாலைக்கு LEED Gold மற்றும் கடுவளை மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஸ்டார் ஃபஷன் குளோதிங் ஆகியவற்றுக்கு LEED Silver ஆகிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், ஸ்டார் காமென்ட்ஸ் குழுமம் பெற்றுக் கொண்டுள்ள மொத்த LEED சான்றுகளின் எண்ணிக்கை ஆறு ஆகும். இந்த மூன்று சான்றுகளுடன் குழுமம் தற்போது 2 LEED Platinum, 2 LEED Gold மற்றும் 2 LEED Silver சான்றிதழ்களை தனது தொழிற்சாலை வலையமைப்பில் கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டளவில் குழுமம் சகல 14 உற்பத்தி ஆலைப் பகுதிகளுக்கும் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் செயலாற்றி வருகின்றது.

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள ஸ்டார் இனோவேஷன் சென்ரர் LEED version 4 என்பதற்கமைவாக இலங்கையில் சான்றிதழைப் பெற்றுக் கொண்ட முதலாவது LEED Platinum கட்டடமாக அமைந்திருப்பதுடன், தெற்காசிய பிராந்தியத்தில் முதலாவது ‘Passive House Design’ ஆகவும் அமைந்துள்ளது. பாரம்பரிய கட்டடங்களுடன் ஒப்பிடுகையில் 70 சதவீதத்துக்கு அதிகமான ஒட்டுமொத்த வலுக்குறைப்பைக் கொண்ட, அல்ட்ரா சிக்கனமான, உயர் வினைத்திறனைக் கொண்ட கட்டடத்தைக் கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளது. நிலைபேறாண்மை பிரிவில் 2020 AIA New York (AIANY) Merit விருதையும் பெற்றிருந்தது.

வலு வினைத்திறன், நீர் வினைத்திறன், வெளியேற்றக் குறைப்புகள், மேம்படுத்தப்பட்ட உள்ளக வளித் தரம் மற்றும் வளங்கள் முகாமைத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களுக்கு LEED சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

USGBC இன் LEED சான்றளிப்பு என்பது ஆழமான விவரங்களை உள்ளடக்கிய நியமங்கள் மற்றும் வழிகாட்டல்களைக் கொண்டிருப்பதுடன், புள்ளி வழங்கல் பிரிவின் அடிப்படையில் நிலைபேறான பகுதிகள், நீர் வினைத்திறன், வலு மற்றும் சூழலமைவு, மூலப்பொருட்கள் மற்றும் வளங்கள் மற்றும் உள்ளக சூழல் தரம் ஆகிய ஐந்து பிரிவுகளின் அடிப்படையில் இதற்கான தகைமை வழங்கப்படுகின்றது.

CarbonNeutral® என்பதன் கீழ் சான்றளிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது ஆடை உற்பத்தி குழுமத்தின் அங்கமாக ஸ்டார் திகழ்கின்றது. இந்தச் சான்றிதழை உலகின் முன்னணி காபன் சான்றிதழ் வழங்கும் இயற்கை மூலதன Natural Capital பங்காளர்களால் வழங்கப்படுகின்றது. சகல தொழிற்சாலைகளினதும் பச்சை இல்ல வாயு வெளியேற்றம் தொடர்பான சுயாதீன மதிப்பாய்வுகளை தொடர்ந்து இந்த சாதனை பெறப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டில் 14 வியாபார அலகுகளிலுமிருந்து 17,581.09tCO2e கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. 2021 ஆம் ஆண்டில், குழுமத்தினால் அதன் காபன் வெளியேற்றத்தை 14,474 tCO2e ஆக கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்ததுடன், இவற்றை சீரமைப்பதனூடாக நிகர பூஜ்ஜிய காபன் அர்ப்பணிப்பும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

நிலைபேறாண்மையின் அடையாளமாக திகழ ஸ்டார் காமென்ட்ஸ் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், நிலைபேறான வருமதிகளை பெற்றுக் கொடுக்கும் வகையில், சூழல் பாதுகாப்பு பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளது. இந்த ஆண்டில் HIGG Facility Environmental Module (HIGG FEM)க்காக தனது முழு தொழிற்சாலை வலையமைப்புகளையும் பின்பற்றி இயங்கச் செய்யும் வகையில் குழுமம் தற்போது செயலாற்றி வருகின்றது. 2023 ஆம் ஆண்டளவில் இரசாயன கையிருப்பை பூஜ்ஜிய நச்சுத் தன்மைக்கு கொண்டு வரும் வகையிலான CLEANCHAIN முறைமையை பின்பற்றி வருகின்றது. அத்துடன் INSEE ECOCYCLE உடன் கைகோர்த்து உள்நாட்டு காணி நிரப்புகைகளைச் சேர்ந்த 100 சதவீதமான தொழிற்துறைசார் கழிவுப் பொருட்களை வேறாக்கும் பணிகளில் பங்களிப்பு வழங்குகின்றது.


Share with your friend
Exit mobile version