Eyeview Sri Lanka

இயந்திரமயமாக்கல் மூலம் உற்பத்தி செலவுகளைக் குறைத்து, உற்பத்தி திறனை அதிகரிக்கும் ஆகாரபத்தன விவசாய நிறுவனம்

Share with your friend

நவீனமயமாக்கல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களில் 10 பெயர்களைக் குறிப்பிடும்படி இலங்கை மக்களிடம் கேட்டால், பிராந்திய விவசாய நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று கூட அந்த பட்டியலில் இடம்பெறாது. எனினும், பலருக்கு தெரியாத ஒரு உண்மை – அகரபத்தன விவசாய நிறுவனம் நிச்சயமாக இந்த பட்டியலில் இடம் பெற வேண்டிய ஒன்று. உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக, அகரபத்தன நிறுவனம் தனது நிறுவனத்தில் பல மாற்றங்களை செயல்படுத்தியுள்ளது. இதில் மிக முக்கியமான மாற்றம் என்பது தேயிலை கொழுந்து பறித்தலின் இயந்திரமயமாக்கல் ஆகும். இது இலங்கையின் தேயிலைத் தொழிலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது. 

இயந்திரமயமாக்கலின் மூலம் தொழிலாளர்களின் தேயிலை கொழுந்து பறிக்கும் திறன் 50%-60% வரை அதிகரித்துள்ளது. தேயிலை கொழுந்து பறிக்கும் செலவு கிலோவுக்கு 50 ரூபா வரை குறைந்துள்ளது, இது ஒட்டுமொத்த செயல்பாட்டு செலவில் 20%-25% குறைவாகும். இயந்திரமயமாக்கல் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கியுள்ளது, இதன் விளைவாக அவர்களின் வருமானமும் ஏறத்தாழ இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

அகரபத்தன தேயிலைத் தோட்டம் 2019 ஆம் ஆண்டில் இயந்திரமயமாக்கலுக்கு மாறியது, இது தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் திறமையின்மை போன்ற சவால்களை சமாளிக்க ஒரு உகந்த தீர்வாக அமைந்தது. ஆரம்பத்தில் ஒரு துணிச்சலான முடிவாகத் தோன்றிய இந்த மாற்றம், இன்று நிறுவனத்தின் வணிக உத்திகளில் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. இந்த மாற்றம், இலங்கையின் தேயிலைத் தொழிலில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. அகரபத்தன விவசாய நிறுவனம் இந்தத் துறையில் ஒரு புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.

அகரபத்தன விவசாய நிறுவனமும் மற்ற தேயிலைத் தோட்ட நிறுவனங்களைப் போலவே தொழிலாளர் பற்றாக்குறையால் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், இயந்திரமயமாக்கலே இதற்கு சிறந்த தீர்வு என்பது இப்போது தெளிவாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டில், நிறுவனத்தில் 3,700 தொழிலாளர்களின் பற்றாக்குறை இருந்தது. இந்த சிக்கலை சமாளிக்க இயந்திரமயமாக்கல் பெரிதும் உதவியாக இருந்தது. தற்போது, அகரபத்தன தோட்டங்களில் 75% கொழுந்து பறிக்கும் பணிகள் இயந்திரங்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

இதை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக, எதிர்வரும் ஆண்டில் அவர்கள் தங்கள் மொத்த தேயிலை செய்கையின் பரப்பில் 30% வரை இயந்திரமயமாக்கலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த முயற்சி, அகரபத்தன விவசாய நிறுவனத்தின் நீண்டகால தூரநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது – இது எதிர்காலம் சார்ந்த, நிலையான தேயிலைத் தொழிலை உருவாக்குவதற்கான வழியாகும். இது, மனித மூலதனத்தின் சவால்கள் மற்றும் செயல்பாட்டுத் தேவைகள் ஆகிய இரண்டிற்குமே ஒரு நிலையான தீர்வாக அமையும்.

நவீன இயந்திர உபகரணங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள்

அகரபத்தன விவசாய நிறுவனம் இயந்திரமயமாக்கலுக்காக 75 மில்லியன் ரூபாய் முதலீடு செய்து, 451 தேயிலை கொழுந்து பறிக்கும் இயந்திரங்களை வாங்கியுள்ளது. இந்த இயந்திரங்கள் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட Tajassa பிராண்டைச் சேர்ந்தவை, இவை தற்போது தேயிலைத் தொழிலில் பயன்படுத்தப்படும் உயர்தர தேயிலை கொழுந்து பறிக்கும் இயந்திரங்களாக கருதப்படுகின்றன. 2023/24 நிதியாண்டில், நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களுக்கான முதலீட்டை 79% அதிகரித்து, 112 மில்லியன் ரூபாய் முதல் 200 மில்லியன் ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இதில், 17 மில்லியன் ரூபாய் இயந்திரமயமாக்கலின் அடிப்படைப் பணிகளுக்காகவும், 162 மில்லியன் ரூபாய் உற்பத்தி உபகரணங்களுக்காகவும் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இந்த முதலீடுகள், நிர்வாக மற்றும் உற்பத்தி செயல்முறைகளை டிஜிட்டல் மாற்றம் (Digital Transformation) மற்றும் இயந்திரமயமாக்கலுக்கு (Mechanization) உட்படுத்துவதற்கான எங்கள் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை சிறப்பாக பிரதிபலிக்கின்றன,” என அகரபத்தன விவசாய நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Denham Madena குறிப்பிட்டார்.

இந்த மாற்றம் தொழிலாளர்களின் மனோபலத்தையும் உயர்த்தியுள்ளது. முன்பு, இயந்திரமயமாக்கல் காரணமாக மனித உழைப்பு குறைந்து வேலை இழப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்த்து, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிப்பதன் மூலம் இந்த நிலைமை மாறிவிட்டது. எனவே, ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயந்திரமயமாக்கல் பயன்படுத்தப்படுகிறது என்பதை ஊழியர்கள் இப்போது புரிந்துகொள்கிறார்கள். இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு ஏராளமான ஊழியர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றுள்ளனர். அதன்படி, கொழுந்து பறிக்கும் காலத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்தும் ஒரு ஊழியரின் தினசரி வருமானம் சுமார் 2000 ரூபா அதிகரித்துள்ளது, மேலும் ஒரு வருட காலத்தில் பெருந்தோட்ட ஊழியர்களின் வருவாய் சராசரியாக 1150 ரூபா அதிகரித்துள்ளது. இயந்திரமயமாக்கல் பெருந்தோட்ட சேவையின் கௌரவத்தையும் வேலை திருப்தியையும் அதிகரித்துள்ளது என்பதும் தெளிவாகிறது.

இயந்திரமயமாக்கல் செயல்பாட்டில், தேயிலை கொழுந்துகளின் தரத்தை பராமரிப்பதற்காக, பாரம்பரிய முறைகளுடன் இசைவான வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. தோட்டத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் இயந்திரங்கள் மூலம் தேயிலை கொழுந்து பறிக்க தொடர்ச்சியான பயிற்சி பெறுகின்றனர். இந்த பயிற்சியில் கைக்கவசங்கள் அணிதல் இயந்திரங்களை பாதுகாப்பாக கையாளுதல், இவை தேயிலை உற்பத்தியின் ஆரோக்கியத்தையும் பணியிட பாதுகாப்பையும் (Workplace Safety) உறுதி செய்கின்றன. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படும் தேயிலைக் கொழுந்து பறிக்கும் இயந்திர நுட்பங்கள் குறித்து, அகரபத்தன நிறுவனம் சர்வதேச நிபுணர்களின் ஆலோசனையுடன், இந்த இயந்திரமயமாக்கல் செயல்முறையைக் கண்காணித்து, தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இயந்திரம் மூலம் தேயிலை கொழுந்து பறிப்பதன் மூலம், பறிக்கும் உச்சகட்ட காலத்தில் (peak season), முழு தோட்டத்தையும் ஒரு மாதத்தில் இருமுறை முழுமையாக பறிக்க முடிகிறது. குறைந்தபட்ச பறிப்புக் காலத்திலும் (off-season), மாதத்திற்கு 1.5 முறை முழு தோட்டத்தைத்திலுள்ள கொழுந்துகளை பறிக்க இயந்திர முறை உதவுகிறது. மொத்த பறிப்பு செயல்முறையில், 55%-60% கொழுந்துகளை தொழிலாளர்கள் பறிக்கின்றனர். மீதமுள்ள 40% இயந்திரங்கள் மூலம் பறிக்கப்படுகிறது.

வணிகரீதியாக, இயந்திரமயமாக்கல் தொடர்ச்சியான உற்பத்தியை உறுதி செய்வதால், தேயிலையின் தரம் பராமரிக்கப்படுகிறது. மேலும் இழப்புகள் குறைகின்றன. கொழும்பு தேயிலை ஏலத்தில் (Colombo Tea Auction) தேயிலையின் சராசரி விலையை உயர்த்த முடிகிறது. நீண்டகால நன்மையாக, செலவு-திறமை (Cost-efficiency) பராமரிக்கப்படுகிறது, தரம் குறையாமல் இருக்கிறது. அகரபத்தன தோட்டத்திற்கு நீண்டகால இலாபம் (Long-term profitability) கிடைக்கிறது. இந்த மாற்றத்தால், முதலில் தொழிலாளர் பற்றாக்குறைக்கான தீர்வாக தொடங்கிய இயந்திரமயமாக்கல், இன்று நிறுவன வளர்ச்சி மற்றும் மதிப்பு உருவாக்கத்தின் (Value Creation) முக்கிய உத்தியாக மாறியுள்ளது.

நிலையான எதிர்காலத்திற்காக

அகரபத்தன தோட்டம், வணிக ரீதியாக இயந்திர மூலம் தேயிலை கொழுந்து பறிக்கும் முதல் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனமாக திகழ்கிறது. புத்தாக்கப்படுத்துதல், உகந்த நிதி நிர்வகிப்பு மற்றும் வலுவான கூட்டு சமூக பொறுப்பு ஆகியவற்றின் மூலம் ஒரு நிலையான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுகிறது. தற்போதுள்ள விளைநிலங்களில் 30% இயந்திரமயமாக்கலை எதிர்பார்க்கிறது. புதிய இயந்திரங்கள் மற்றும் தொழில்துறை உபகரணங்களை அறிமுகப்படுத்தி செயல்பாட்டு செயல்முறைகளை நவீனமயப்படுத்துகிறது. இலங்கையின் மிகவும் புத்தாக்கமான தோட்ட நிறுவனமாக மாறுவதை இலக்காக கொண்டுள்ளது. அகரபத்தனத்தின் மாதிரி திட்டம் எந்த தோட்டத்திலும் எளிதாக செயல்படுத்தக்கூடியது. தொழிலாளர்களுக்கான முதலீடுகளை தொடர்ந்து செய்து, புத்தாக்கங்களைள ஏற்றுக்கொண்டு, எந்த சவாலையும் சமாளிக்கத் தயாராக உள்ள இலங்கையின் ஏற்றுமதி தொழிலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend
Exit mobile version