Eyeview Sri Lanka

இலங்கையில் முதல் தடவையாக 5G-Advanced பரீட்சார்த்த செயற்பாட்டை SLT-MOBITEL முன்னெடுத்தது

Share with your friend

அபார 5 Gbps+ வேகத்தை எய்தியுள்ளது

மொபைல் தொழினுட்பத்தில் தலைமைத்துவத்தை மேலும் உறுதி செய்யும் வகையில், தேசிய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, இலங்கையில் முதன் முறையாக 5G-Advanced (5G-A) பரீட்சார்த்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்ததாக அறிவித்துள்ளது. இலங்கையில் அடுத்த தலைமுறை தொழினுட்பத்தை வெளிப்படுத்தியிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடாக இது அமைந்திருந்தது.

2025 ஜனவரி மாதம் 12ஆம் திகதி இந்த பரீட்சார்த்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதுடன், தொலைத்தொடர்பாடல் புத்தாக்கத்தில் SLT-MOBITEL இன் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி, இலங்கையின் முதலாவது 5G-A பரீட்சார்த்தமாக அமைந்திருந்தது. இதன் போது 5 Gbpsக்கு அதிகமான வேகம் எய்தப்பட்டதாக அறிவித்துள்ளது. கொழும்பு 8 இல் அமைந்துள்ள SLT-MOBITEL இன் தலைமையகத்தில் இந்த பரீட்சார்த்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதுடன், தொழினுட்ப சிறப்பு மற்றும் தொழிற்துறை தலைமைத்துவம் ஆகியவற்றுக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்தது. இந்த பரீட்சார்த்த செயற்பாட்டின் போது ZTE விகித சாதனம் மற்றும் Xiaomi 14 Ultra கையடக்க சாதனம் போன்றன பயன்படுத்தப்பட்டதுடன், 3CC Carrier Aggregation, Massive MIMO மற்றும் 1024QAM modulation தொழினுட்பம் ஆகியன C-band அலைவரிசையை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த பரீட்சார்த்த நடவடிக்கையினூடாக advanced 5G தொழினுட்பத்தின் மாற்றியமைக்கும் ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மொபைல் தொடர்பாடல்களில் புதிய யுகத்தை ஏற்படுத்தும் வகையில் அதியுயர் வேகங்கள், அதிகளவு தங்கியிருக்கும் திறன் மற்றும் உயர் வலையமைப்பு கொள்ளளவு போன்றன உறுதி செய்யப்பட்டுள்ளன.

மொபிடெல் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி சுதர்ஷன கீகனகே இந்த மைல்கல் சாதனைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “5G-Advanced ஐ வெற்றிகரமாக பரீட்சித்திருந்தமையினூடாக இலங்கையை அடுத்தகட்ட டிஜிட்டல் புரட்சிக்கு கொண்டு செல்வதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மீள உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தொழினுட்பங்களால் தொழிற்துறைகள் மற்றும் தனிநபர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளை கண்டறிவது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அவற்றினூடாக தேசத்தின் டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றக்கூடியதாக இருக்கும் மற்றும் இலங்கைக்கு பெருமளவு ஆதரவளிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.” என்றார்.

ஏற்கனவே காணப்படும் 5G தொழினுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட நுட்பமாக 5G Advanced அமைந்துள்ளது. இது advanced carrier aggregation techniques, massive MIMO (Multiple Input, Multiple Output), advanced modulation techniques (1024QAM) மற்றும் AI-driven network optimizations போன்றவற்றின் அடிப்படையில் அமைந்திருப்பதுடன், அதனூடாக வினைத்திறனை வழங்குகின்றது. சுகாதார பராமரிப்பு மற்றும் போக்குவரத்து முதல் மகிழ்வூட்டும் விடயங்கள் மற்றும் ஸ்மார்ட் நகரங்கள் போன்ற பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு இந்த மேம்படுத்தல்கள் வழியமைப்பதாக அமைந்துள்ளன.

இந்த வரலாற்று மைல்கல்லை எய்துவதற்கு SLT-MOBITEL உடன் கைகோர்த்திருந்த ZTE கோர்பரேஷன் சார்பாக அதன் இலங்கைக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி யாங் மின் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த கைகோர்ப்பினூடாக, தொலைத்தொடர்பாடல்கள் புத்தாக்கத்தில் சர்வதேச முன்னோடி எனும் நிலையை ZTE க்கு மேலும் உறுதி செய்ய முடிந்ததுடன், SLT-MOBITEL போன்ற பிரதான தொழிற்துறை பங்காளர்களுடன் பங்காண்மையை ஏற்படுத்தி டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்பை உறுதி செய்ய முடிந்துள்ளது. எமது நிறுவனத்தின் தொழினுட்ப மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு நிலையை இந்த பரீட்சார்த்த செயற்பாடு உறுதி செய்துள்ளது. இலங்கையின் மக்களுக்கு நவீன தொழினுட்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான SLT-MOBITEL இன் செயற்பாடுகளுக்கு எமது அர்ப்பணிப்பை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

SLT-MOBITEL இனால் 5G வணிக ரீதியான அறிமுகத்துக்கு முன்னரான பரீட்சார்த்த வலையமைப்பு செயற்படுத்தப்பட்டுள்ளது. அதனூடாக வாடிக்கையாளர்களுக்கு 5G தொழினுட்பத்தை பரிசோதித்து அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். 5G தயார் நிலையிலுள்ள சாதனங்களைக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு SLT-MOBITEL’ இன் 5G வணிக ரீதியான அறிமுகத்துக்கு முன்னரான பரீட்சார்த்த வலையமைப்பில் இந்த வலையமைப்பு அனுபவத்தைப் பெறலாம். கொழும்பு, கண்டி, அனுராதபுரம், காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் இந்த 5G பரீட்சார்த்த சேவைகள் வழங்கப்படுகின்றன.

2019 ஆம் ஆண்டு முதல் SLT-MOBITEL இனால் நாடு முழுவதிலும் 5G பரீட்சார்த்த நிறுவும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2019 ஏப்ரல் மாதத்தில் SLT-MOBITEL மொபைலினால், தெற்காசியாவின் முதலாவது மொபைல் வலையமைப்பினூடான 5G பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மொபைல் ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை அதன் 5G பரீட்சார்த்த வலையமைப்பில் அபார வேகங்களுடன் இணைத்திருந்தது. மேலும், இலங்கையில் முதன் முதலில் 5G SA & NSA hybrid பரீட்சார்த்த செயற்பாடுகளையும் SLT-MOBITEL மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாதனத்தின் பொருத்தப்பாடு மற்றும் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு SLT-MOBITEL வாடிக்கையாளர்கள் https://5g.sltmobitel.lk எனும் இணையத்தளத்துக்கு விஜயம் செய்ய முடியும். 5G- வசதியில்லாத சாதனங்களைக் கொண்டிருப்பவர்கள் தெரிவு செய்யப்பட்ட SLT-MOBITEL விற்பனை நிலையங்களுக்கு விஜயம் செய்து 5G தொழினுட்பத்தை அனுபவித்துப் பார்க்க முடியும்.


Share with your friend
Exit mobile version