Site icon Eyeview Sri Lanka

இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான உலக உச்சிமாநாடு விருதுகள் 2021ல் உலகச் சம்பியன் பட்டத்தை வென்ற SLIIT மாணவர்கள்

Share with your friend

உலக உச்சிமாநாடு விருதுகள் 2021ல் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பிரிவின் கீழ் SLIIT கணினி பீடத்தின் ‘CocoRemedy’ திட்டம் உலகச் சம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றைப் பதிவுசெய்துள்ளது. 

SLIIT  கணினி பீடத்தின் பட்டதாரிகளான சமித்த விதானாராச்சி, ஞானோத் சத்துரமடு அகலங்க, தினலி குணசேகர மற்றும் திவ்யானி ராஜபக்ஷ ஆகியோரால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. SLIIT உதவிப் பேராசிரியர் கலாநிதி ஜனக விஜேகோன், இலங்கை தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்தின் கலாநிதி நயனி ஆராச்சிகே மற்றும் திலானி  லுனுகலகேவுடன் இணைந்து இத்திட்டத்தை இணை மேற்பார்வைசெய்தனர். 

அதிநவீன தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும், CocoRemedy திட்டமானது தொழில்துறைக்கான தென்னை நோய்கள் மற்றும் பூச்சித் தொல்லைகளைக் கண்காணித்து அடையாளம் காணும் முதலாவது கையடக்கத்தொலைபேசி மற்றும் இணைய அடிப்படையிலான செயலியாகும். இந்தப் புத்தாக்கமான தீர்வானது ஆழமான கற்றல், பட செயலாக்கம், புதுமையான தீர்வானது ஆழமான கற்றல், பட செயலாக்கம், க்ரூட்சோர்சிங் போன்றவற்றைப் பயன்படுத்தி விவசாயிகளைப் பீடித்திருக்கும் வற்றாத பிரச்சினையை சமாளிப்பதுடன், குறிப்பாக தென்னை சாகுபடியை அழிக்கும் வெலிகம தென்னை இலை வாடல் நோய் (WCLWD) மற்றும் தென்னை கம்பளிப்பூச்சி தொற்று (CCI) ஆகியவற்றை முகாமைத்துவம் செய்வதற்கு உதவுகிறது.

ICTA இனால் ஒழுங்கமைக்கப்பட்ட ‘e-Swabhimani 2021’ இல் டிஜிட்டல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியமைக்கான விருதுக்கு CocoRemedy பரிந்துரைக்கப்பட்டிருந்ததுடன், உலக உச்சிமாநாடு விருதுகளுக்கு இலங்கையிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட எட்டு பிரதிநிதித்துவத்தில் சம்பியன்ஷிப்பை வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஒரேயொரு திட்டமாக இது அமைந்துள்ளது.

இந்தக் கௌரவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கலாநிதி.ஜனக விஜேகோன் “உலக உச்சிமாநாடு விருதுகளின் பிரிவில் சம்பியன்ஷிப் கிடைத்துள்ளமை வரலாற்று ரீதியில் நாட்டுக்குப் பெருமையான விடயமாகும். சமூகத்தில் உடனடியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதற்கான தளமாக CocoRemedy அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறோம். உலகளவில் நடைபெறும் டிஜிட்டல் புரட்சியை உறுதிசெய்ய கடுமையாக உழைத்த குழுவிற்கு அனைத்துப் பாராட்டுகளும் சாத்தியமான முடிவுகளை வழங்கும் உள்நாட்டு தீர்வுகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன” என்றார்.

2009ஆம் ஆண்டிலிருந்து உலக உச்சிமாநாடு விருதில் இலங்கையின் பயணம் ஆரம்பமானதுடன், இது 18 விருதுகளுக்குக் காரணமாகும், இதில் இரண்டு மட்டுமே இளைஞர் பிரிவில் கல்வியூட்டலுக்கானதாக அமைந்தன.

CocoRemedy இன் வெற்றினாது இலங்கையிலுள்ள இளம் திறமையாளர்களை சர்வதேச அரங்கிற்குக் கொண்டுவந்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் பசுமை ஆற்றல் பிரிவில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட முதல் தயாரிப்பு இதுவாகும் என்பதுடன், மேலும் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்ற ஒரே தயாரிப்பும் இதுவாகும்.

ஊழஉழசுநஅநனல ஆனது உலக உச்சிமாநாடு விருதின் பிரதான வகையான ‘சுற்றுச்சூழல் மற்றும் பசுமை ஆற்றல்’ பிரிவில் பட்டியலிடப்பட்டது, இலங்கையிலிருந்து இந்தப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தயாரிப்பு என்ற தனித்துவமான சிறப்பைப் பெற்றது.  இந்த ஆண்டு பட்டியலிடப்பட்ட 119 தீர்வுகளில் இதுவும் ஒன்றாகும்.

உள்ளூர் பொருத்தத்துடன் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைத் தேர்ந்தெடுத்து மேம்படுத்துவதை உலக உச்சிமாநாடு விருதின் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், உலக உச்சிமாநாடு விருது என்பது 26 வயதிற்குட்பட்ட இளைஞர்களை அங்கீகரிக்கும் ஒரு ஐக்கிய நாடுகளின் முன்முயற்சியாகும், அவர்கள் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்களை (ICTs) பயன்படுத்தி ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் (UN SDGs) நடவடிக்கை எடுக்கவும், முன்னேற்றத்தை உறுதி செய்வதையும் நோக்காகக் கொண்டதாகும். 2021 ஆம் ஆண்டில், ஜனநாயக, உள்ளடக்கிய மற்றும் அதிக போட்டித்தன்மை கொண்டதாக அங்கீகரிக்கப்பட்ட 200 நாடுகளின் விண்ணப்பதாரர்களிடமிருந்து 45 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


Share with your friend
Exit mobile version