தேசிய நீதிமன்ற வரம்புக்கு அப்பால் கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய ஒப்பந்தம் (BBNJ) எனப்படும் உலகளாவிய கடல்சார் ஒப்பந்தத்தில் கையொப்பமிட வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் மூலம் நேற்றைய தினம் பரிந்துரைக்கப்பட்டதுடன், அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியமைக்கு Greenpeace South Asia அமைப்பு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. (1) இது ஒழுங்குமுறைக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் பகுதிகளில் மனித நடவடிக்கைகளினால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் பிரதேசங்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஒரு மைல்கல்லாகும்.

“முக்கியமாக இந்தியப் பெருங்கடல் கடலோரப் பகுதிக்கான சங்கத்தின் (IORA) தலைவர் என்ற அடிப்படையில் எமது கடல்களின் சிறந்த முறையில் பராமரிப்பதற்கு முன்னுரிமை வழங்குவதற்கு இலங்கையின் தலைமைத்துவம் செயலாற்றுவது பற்றி எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த செயல்களினால் குறிப்பிடுவது யாதெனில், கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையினை பாதுகாப்பதற்காக நாடுகளுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக இலங்கை கடினமாக உழைக்கின்றது.” என Greenpeace South Asia அமைப்பின் இலங்கை விளம்பர செயற்பாட்டாளர் திருமதி. அனீகா பெரேரா கூறினார்.
இவ்வாறு உலகளாவிய கடல்சார் ஒப்பந்தம் என பொதுவாக அறியப்படும் டீடீதுே ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கியதனால் பெருங்கடல் பகுதிகளை பராமரிப்பதனை ஆதரிக்கும் அதே வேளையில் நிலையான மீன்பிடி மேலாண்மையை மேம்படுத்துவதற்கும் கடல்சார் அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கும் இலங்கைக்கு வாய்ப்பு காணப்படுகின்றது. சர்வதேச கடல்பரப்பில் கடல்வளங்களை அதிக அளவில் சுரண்டல், வாழ்விடங்களை அழித்தல் மற்றும் உயிரியல் பன்முகத்தன்மையை இழத்தல் ஆகிய விடயங்கள் பற்றி கண்ணோட்டம் செலுத்தும் பட்சத்தில் இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைப்பது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும்.
இவ் ஒப்பந்தம் கரையோரத்தில் ஆரம்பித்து 200 கடல் மைல்கள் (370 கிலோமீற்றர்) அப்பால் இருக்கும் பெருங்கடலின் பெரும் பிரதேசத்தை பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக மாற்றக் கூடிய ஓர் உறுதியான பொறிமுறையாகும். (2) அதனோடு அதிக அளவில் மீன் பிடித்தல் மற்றும் சுற்றுச் சூழல் மாசடைதல் காரணமாக அச்சுறுத்தலுக்கு ஆளாகின்ற இப்பிரதேசத்தின் கடல்சார் சூழல் மெதுமெதுவாக பழைய நிலைமைக்கு திரும்புவதற்கு இதன் மூலம் வழிவகுக்கப்படுவதுடன், சிறந்த கடல்சார் சுற்றுச்சூழல் ஒன்றை உருவாக்குவதற்கு இவ் ஒப்பந்தம் மிகவும் உதவியாக இருக்கும். சாதகமான கடல்சார் சூழல் ஓர் நாட்டின் நிலையான காலநிலைக்கு மட்டுமே அவசியமான ஒரு விடயமல்ல. உலகளாவிய ரீதியில் பார்க்கும் பட்சத்தில், நாட்டின் கரையோர மக்கள், மீனவர்கள் மற்றும் மாலுமிகள் உள்ளாக பல மில்லியன் கணக்கான மக்களுக்கு நிலையான வாழ்க்கை தரத்தை உருவாக்குவதற்கு அத்தியாவசியமாகும். நடைமுறைப்படுத்துவதுடன்,
இவ்விசேட ஒப்பந்தத்தை நிதி வளம் மற்றும் தொழில்நுட்ப கொள்ளளவு ஆகியவற்றில் வரையறுக்கப்பட்ட, இலங்கை உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் Greenpeace South Asia அமைப்பின் கவனத்திற்கு வந்துள்ளன. அதன் காரணமான, கடல்வள பாதுகாப்பினை பயனுள்ள முறையில் செயற்படுத்துவதை உறுதி செய்வதுடன், கொள்ளளவினை அதிகரித்தல், வளங்களை பிரித்துக் கொள்ளல் ஆகியவை மட்டுமல்லாமல் சர்வதேச ஒத்துழைப்பை பேணுவதற்கான கோரிக்கைகளை ஆதரிக்கவும் இந்த அமைப்பு செயல்படுகிறது.
கடந்த ஆண்டில் ஏற்பட்ட நாசகரமான காலநிலை அனர்த்தங்களுக்கு இலங்கை மட்டுமல்லாது முழு தெற்காசியாவிற்கும் முகங்கொடுக்க நேரிட்டதுடன் வெப்ப அலை, அதிக மழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் கடல் அரிப்பு ஆகிய விடயங்களினால் உயிர் சேதங்களும், பொருளாதார சேதங்களும் ஏற்பட்டன. எமது சூழலில் காலநிலை, காடுகள் மற்றும் பெருங்கடல்கள் என்பன ஒற்றை அமைப்பாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதுடன், நல்ல அல்லது கெடுதியான விடயங்களின் போதும் அவற்றுக்கிடையே அவ் ஒருங்கிணைந்த உறவு காணப்படுகின்றது. இதனால் காலநிலை மாற்றம் மற்றும் பாதகமான வானிலை தாக்கங்கள் ஆகியவற்றை குறைக்க முடியும். அதன் அடிப்படையில் நாட்டின் தலைமைத்துவம் இந்த தொடர்பை அங்கீகரித்து, முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் பாதுகாக்கும் நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்குவது மிகவும் அவசியமாகும்.
2024 பெப்ரவரி மாதத்தில் Greenpeace அமைப்பின் உலகப் புகழ் பெற்ற கப்பலான சுயெைமழற றுயச்சழைச இலங்கையை நெருங்கியது. இவ் அமைப்பின் தெற்காசிய அலுவலகத்தை திறக்கும் அதே நேரத்தில், கடல் பாதுகாப்பு மற்றும் இலங்கை போன்ற தீவுகளாக காணப்படும் நாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐக்கிய நாடுகளின் (BBNJ) தேசிய நீதிமன்ற வரம்புக்கு அப்பால் கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மை ஒப்பந்தம் பற்றி இந்நாட்டின் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதில் ஒரு பெரும் அடைவினை அக்கப்பலின் வருகை குறிப்பிட்டது. கடந்த 2024 வருடம் முழுவதும் கடல் பாதுகாப்பு தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகள், சமூக வலைத்தளங்களுக்கு ஊடாக பிரச்சாரம் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கான பட்டறைகள் உள்ளடங்களாக தொடர்ச்சியான ஆலோசணை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், நாடு பூராகவும் உள்ளூர் குழுக்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. அதனோடு, இவ் BBNJ ஒப்பந்தத்தை அனுமதித்து, கையொப்பமிடுவதற்கு அரசு முன்னுரிமை வழங்குமாறு கேட்டு Greenpeace அமைப்பு மூலம் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இவ் ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச சமுத்திர பரப்பில் பாதுகாக்கப்பட்ட கடல் பிரதேசங்கள் (MPAs) வலையமைப்பை உருவாக்குவதற்கு சட்டக்கோவையினை உருவாக்குவது மற்றும் நாட்டின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட கடல்சார் பகுதிகளில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான தரநிலைகளை நிறுவுதல் (EIAs), கடல் மரபணு வழங்களிலிருந்து நன்மைகளை சமமாக பகிர்ந்து கொள்ளுதல் (MGRs) மற்றும் கடல் பாதுகாப்பு தொடர்பான கொள்ளளவு மேம்பாடு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் நிலையான, சிறந்த நிதிசார் வள் பாவனையை முன்னேற்றுதல் ஆகிய நன்மைகளை பெற்றுக் கொள்ளுதல் போன்ற விடயங்களின் காரணமாக அரசின் கவனம் செலுத்தப்பட்டது. உலகளாவிய கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளின் போது இலங்கை முக்கியமாக களத்தில் செயற்படுவதற்கான அடித்தளம் இவ் ஒப்பந்தத்தின் மூலம் அமைக்கப்படுவதுடன், இலங்கை ஓர் தீவு என்ற அடிப்படையில் டீடீதுே ஒப்பந்தத்தின் சட்ட கட்டமைப்பின் கீழ் மேம்படுத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் நன்மைகளை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் இந் நடைமுறை மூலம் கவனம் செலுத்தப்படுகின்றது.
பெருங்கடலில் விசாலமான சரணாலயங்களை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கக் கூடிய உலகளாவிய கடல்சார் ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்குவதற்கு எடுத்த இம்முடிவின் மூலம், கடல்சார் சூழல்களின் மீள்தன்மையினை பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு எடுத்துக் காட்டப்படுகின்றது. இன்று மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியிணருக்கும் உதவியாக இருக்கக் கூடிய BBNJ ஒப்பந்தத்தின் குறிக்கோள்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதை உறுதி செய்யும் நோக்கில், இலங்கை அரசு மற்றும் பிற பிராந்திய பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்ற Greenpeace South Asia அமைப்பு ஆவலுடன் காத்திருக்கின்றது.
ஊடக ஒருங்கிணைப்பாளர்: Greenpeace South Asia இலங்கை செயற்பாட்டாளர் திருமதி. அனீகா பெரேரா
கைத்தொலைபேசி இல: +94773925597
மின்னஞ்சல்: aperera@greenpeace.org
முக்கியமான குறிப்புகள்:
(1) 2024-12—23 தினத்தில் நடைபெற்ற கெபினட் முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு:
https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=16&It
(2) தேசிய நீதிமன்ற வரம்புக்கு அப்பால் கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய ஒப்பந்தம் (BBNJ) 2023 ஜூன் மாதத்தில் சம்மதிக்கப்பட்டது. அவ் ஒப்பந்தம் ஐக்கிய நாடுகளின் கடல் நீதிகள் பற்றிய மாநாட்டின் (UNCLOS) கீழ் செயற்படும் மூன்காவது ஒப்பந்தமாகும். உலகளாவிய கடல்சார் ஒப்பந்தத்தில் உள்ளடங்கிய ஓர் ஒப்பந்தமாக அது அமலுக்கு வருவதற்கு ஆகக் குறைந்தது 60 நாடுகள் அதற்கு உள்வாங்கப்பட வேண்டி இருப்பதுடன், இன்று வரையில் ஒப்பந்தத்திற்கு கையொப்பமிட்டுள்ள 106 நாடுகளில் 15 நாடுகள் இவ் ஒப்பந்தத்தை அமுலுக்கு கொண்டு வரும் செயற்பாட்டினை பூரணப்படுத்தி உள்ளது.