- ஃபோர்ச்சூன் சஞ்சிகை மற்றும் Great Place to Work™ தரப்படுத்தலில் 2017ஆம் ஆண்டு 08வது இடத்திலும், 2020ஆம் ஆண்டு 2வது இடத்திலும் தற்பொழுது 1வது இடத்திற்கும் கம்பனி முன்னேறியுள்ளது
- DHL இன் 50 வருட பயணத்தில் பணியாளர்களின் மேம்பாடு மற்றும் ஈடுபாட்டில் கவனம் செலுத்தியமையால் மாற்றத்தக்க வெற்றி மற்றும் சிறந்த நிதி நிலைமை என்பன உணர்த்தப்பட்டுள்ளன
- புணியாளர்களைப் பலப்படுத்துவதற்கான புதிய யுகத்துக்கு கலாசார ஈடுபாடு கொண்ட திட்டம் வழிவகுத்துள்ளது
உலகின் முன்னணி சர்வதேச விரைவு சேவை வழங்குனரான DHL Express, ஃபோர்ச்சூன் சஞ்சிகையுடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ள உலகின் சிறந்த பணியிடங்களுக்கான வருடாந்தப் பட்டியலில் சிறந்த பணியிடங்களில் முதலாவதாகப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்கள் தொடர்ச்சியாக தனது மக்கள் மீதான முதலீடு மற்றும் முன்னேற்றத்துக்குக் கிடைத்த பரிசாக இது அமைந்துள்ளது. இதன் 2017ஆம் ஆண்டு 8வது இடத்திலிருந்து 2021ஆம் ஆண்டு 1வது இடத்துக்கு முன்னேற முடிந்துள்ளது.
“2009ஆம் ஆண்டு முதல் தனது மூலோபாயம் மீது கவனம் செலுத்தியதால் வழிநடத்தப்பட்ட மாற்றத்துக்கான சகாப்தத்தை DHL Express அனுபவித்திருந்தது. இந்த மூலோபாயத்தில் மக்களை எம்முடன் பணியாற்றுவதை ஊக்குவிப்பது மற்றும் தொழில்தருணருக்கான தெரிவாக அமைவது என்ற நோக்கத்தை அடைந்துள்ளோம்” என இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோன் பியர்சன் தெரிவித்தார். “220 நாடுகள் மற்றும் வித்தியாசமான முறைகளில் 111,000 சகபணியாளர்கள் பணியாற்றும் ஒரு கம்பனிக்கு இது தைரியமான நடவடிக்கையாகும். மக்கள் மீதான எமது நம்பிக்கை மற்றும் எமது வாடிக்கையாளர்களுக்கு ஒருவருக்கு ஒருவர் சிறப்பான விநியோகத்தை மேற்கொள்வது என்பன ஒவ்வொரு நாளும் என்னைத் தூண்டும். இந்த வெற்றியைச் சாதகமாக்கிய அனைத்து சகபணியாளர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த வருட கணக்கெடுப்பில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.
ஊழியர்களின் பணியை மதிப்பிடுவதற்கு DHL Express முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த விருது அங்கீகரித்துள்ள DHL இன் புத்தாக்கமான பல்வேறு திட்டங்களில் உருமாற்றத்தில் கவனம் என்ற மூலோபாயமும் ஒன்றாகும். DHL Express இன் கவனம் மூலோபாயனமாது Deutsche Post DHL குழுவை தொழில்வழங்குனர், முதலீடு மற்றும் உலகத்துக்கு தெரிவுகளை வழங்குபவர் என்ற இலக்கை நோக்கிக் கொண்டு செல்கிறது. சான்றழிக்கப்பட்ட சர்வதேச நிபுணர் (CIS) என அழைக்கப்படும் நிகழ்ச்சித்திட்டமே இதன் வெற்றிக்குப் பிரதானமாக அமைந்தது. வாடிக்கையாளர் மீதான கவனம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கலாச்சார மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்த இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வணிகத்துக்கான ஊக்குவிப்பு, அங்கீகாரம் மற்றும் விருதுகளை வழங்குவது போன்ற பரந்துபட்ட நடத்தைகள் தொடர்பில் சிரேஷ்ட தலைவர்கள் வழங்கு உற்சாகப் பயிற்சிகள் மற்றும் ஈடுபாடுகளை இவை உள்ளடக்கியுள்ளன.
உலக தொற்றுநோய் காலத்தில் சரக்குப் போக்குவரத்துத் துறையில் உள்ளவர்கள் பாரிய அழுத்தங்களுக்கு உள்ளாகினர். உலகின் சிறந்த பணியிடம்- 2021 என்ற அங்கீகாரம் DHL Express கலாச்சாரத்தின் வலிமைக்கு ஒரு சான்றாகும். இரகசியமான கணக்கெடுப்பின் மூலம் நேர்மை, நம்பகத்தன்மை, மரியாதை, பெருமை மற்றும் தோழமை என்பவற்றில் பணியாளர்களின் அனுபவங்கள் மதிப்பிடப்பட்டன. கம்பனியின் கலாசாரத்தை மீண்டும் வலியுறுத்தும் முயற்சிகள் மற்றும் திட்டங்களும் இந்தக் கணக்கெடுப்பின் போது கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டன. GPTW கணக்கெடுப்பு, 2020 இல் நிறுவனத்தின் 93% மதிப்பெண்ணை விஞ்சி, ஊழியர்களின் ஊக்கம் மற்றும் ஈடுபாடு நிலைகளில் அதிகரிப்பைக் காண்பிக்கிறது. இந்தச் சவால் மிக்க காலத்தில் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பணியாளர்களின் நலன்புரி குறித்து DHL Express கவனம் செலுத்தியதுடன், பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனரா, தொடர்பில் இருக்கின்றனரா என்பதை அறிந்து ஒத்துழைப்பு வழங்கியது.
“அனைவருக்கும் பணியாற்றுவதற்கு சிறந்த இடமாக இருப்பதில் இது முக்கியமானதாக இருந்ததில்லை, அதேநேரம், சிக்கலானதாகவும் இருந்ததில்லை” என சிறந்த பணியிடத்துக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி மிஷேல் சி.புஷ் தெரிவித்தார். “உங்களின் மக்களுக்காக நீங்கள் விநியோகத்தை மேற்கொள்ளும்போது உங்களின் வாடிக்கையாளர்களுக்கு விநியோகத்தை மேற்கொள்கின்றோம் என்பதை DHL Express நிரூபித்துள்ளது. தமது விநியோக சேவைக்கு வாடிக்கையாளர்கள் ‘சிறப்பு’ என்ற தரப்படுத்தலை வழங்குவதாக 94 வீதமான DHL பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது உலகளாவிய ரீதியிலான அளவு எல்லையின் 86 வீத சிறப்பான செயற்பாடாகும்” என்றார்.
“முன்னெப்போதும் இல்லாத அளவு பௌதீக ரீதியில் நாம் இடைவெளியைக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் இவ்வாறான விருதைப் பெறுவதையிட்டு நாம் உண்மையில் பெருமையடைகிறோம். DHL Express இன் வணிக செயற்பாடுகள் எமது மக்களின் இதயங்களில் உள்ளன. நாம் ஊக்கமளிக்கின்றோம், பலமளிக்கின்றோம் மற்றும் எமது மக்களின் மீது முதலீடு செய்கின்றோம், இதனால் பணிகளில் சிறப்பைக் காண்பிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி தரும் வகையில் விநியோகத்தைத் தொடர்ந்தும் மேற்கொள்வதால் வணிகம் வெற்றிகரமாக இடம்பெறுகிறது. மக்களுக்கிடையிலான தொடர்புகளை ஏற்படுத்துவது மற்றும் உலகளாவிய ரீதியில் வாழ்க்கையை முன்னெற்றுவதால் இது எமக்கு பலமாக அமைவதுடன், ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. எமது பணியாளர்களே னுர்டு ய ஐ சிறந்த பணியிடமாக மாற்றியுள்ளனர்” என DHL Express இன் ஆசிய பசுபிக்கிற்கான பிரதம நிறைவேற்று அதிகாரி கென் லீ தெரிவித்தார்.
DHL Express Sri Lanka இன் இலங்கைக்கான முகாமையாளர் டிமித்ரி பெரேரா குறிப்பிடுகையில், “எதிரிவினையாற்றக் கூடிய, புத்தாக்கம் நிறைந்த மற்றும் விசேடமாக சவால் நிறந்த சூழ்நிலையில் விரைவில் ஒன்றைத் தளுவக்கூடிய தன்மைகளால் கடந்த வருடங்களில் இலங்கையில் எமது செயற்பாடுகள் வரையறுக்கப்பட்டன. எனினும், சாதகமான பணியிடம் என்பதற்கான வரைவிலக்கணம் கடந்த வருடத்தில் மாற்றமடைந்ததுடன், துன்பங்களை எதிர்கொண்டு நாம் செழித்து வளர்ந்தது மட்டுமல்லாமல், தொற்றுநோய் சூழலிலும் வலுவான கலாச்சாரத்தை தொடர்ந்து வளர்த்து வருகிறோம் என்பதை உலகின் சிறந்த பணியிடத்துக்கான பட்டியலில் னுர்டு DHL Express முதலாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டதன் மூலம் நிரூபணமாகியுள்ளது” என்றார்.
உலகின் சிறந்த சிறந்த பணியிடமாக அங்கீகரிக்கப்பட, Great Place to Work’s Best Workplaces என்ற தேசிய ரீதியான பட்டியலில் கம்பனிகள் முதலாவது இடத்தில் தரப்படுத்தப்பட வேண்டும். நம்பிக்கை, புத்தாக்கம், கம்பனியின் மதிப்பு மற்றும் தலைமைத்துவம் என்பவற்றின் அடிப்படையில் பணியாளர்களின் அனுபவம் இரகசியமாக மதிப்பீடு செய்யப்பட்டே இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது. பணியாளர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வாறான பணிகளைச் செய்தாலும் அனைவரும் எவ்வாறான அனுபவத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதன் அடிப்படையில் கம்பனிகள் தரப்படுத்தப்படுகின்றன. இந்த வருடம் கொவிட்-19 பணியாளர்களுக்கும், தொழில்தருணர்களுக்கும் பௌதீக மற்றும் உளரீதியான கவனத்தை ஈர்க்கச் செய்தது.
ஊடகத் தொடர்பு :
ஷவந்தி பெரேரா
சந்தைப்படுத்தல் தொடர்பாடல் முகாமையாளர்
தொலைபேசி : 0777517207
மின்னஞ்சல் : shawanthi.perera@dhl.com
DHL – உலகத்துக்கான சரக்குப்போக்குவரத்துக் கம்பனி