Site icon Eyeview Sri Lanka

உலகை இலங்கைக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றும் பவர்

Share with your friend

“நாட்டினால் உங்களுக்கு என்ன செய்ய முடியும் எனக் கேட்பதைத் தவிர்த்து, உங்களால் நாட்டுக்கு என்ன பங்களிப்பை செய்ய முடியும்” எனும் வரலாற்றுக்கூற்றுக்கமைய, பவர் என அறியப்படும், ஏ.பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட், இலங்கையில் அல்பிரட் பவர் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது முதல் தொடர்ச்சியாக இந்தப் பங்களிப்பை வழங்கிய வண்ணமுள்ளது. 125 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் பிரசன்னத்தைக் கொண்டுள்ள பவர், முன்னரை விடவும் மீண்டெழுந்திறனுடன், உறுதியான வளர்ச்சியை பதிவு செய்யும் வகையில் இயங்குகின்றது.

பல தசாப்த காலங்களாக தொடரும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில், விவசாயம், தொழிற்துறை மற்றும் அறிவு-சார் அம்சங்களில், தேசத்தின் நிலைபேறான வளர்ச்சியில் பவர் பெருமளவு பங்களிப்பை வழங்கிய வண்ணமுள்ளது. சுவிட்சர்லாந்தின், ஜெனிவாவைச் சேர்ந்த Alfred et Eugénie Baurs மையத்தின் உரிமையாண்மையில் இயங்கும் இந்நிறுவனம், சுவிஸ் பாரம்பரியங்களுக்கமைய தனது பெறுமதிகளை பின்பற்றுகின்ற போதிலும், அனைத்து அம்சங்களிலும் உண்மையான இலங்கை நிறுவனமாக பவர் திகழ்கின்றது. 

இலங்கையின் விவசாயத் துறையின் முன்னோடியாகத் திகழ்வதுடன், இந்தத் துறையில் தனது புத்தாக்கம் மற்றும் சாதனைகளை பவர் நிறுவனம் உறுதியாக பதிவு செய்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் உயர் திறன் படைத்த, தொழில்நுட்ப அம்சங்கள் பொருந்திய உரக் கலவை வசதிகளை தன்வசம் கொண்டுள்ளதுடன், அமெரிக்காவின் சிறந்த துறைசார் செயற்பாட்டாளர்களிடமிருந்து இயந்திர சாதனங்களை இறக்குமதி செய்துள்ளது.

பயிர்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் படைப்புழுத் தாக்கம் (FAW) ஆரம்பித்த நிலையில், நாட்டின் பெருந்தோட்டப் பகுதிகளில் 2018 ஆம் ஆண்டில் பெரும் நெருக்கடியான நிலை எழுந்திருந்தது. இரு வருடங்களின் பின்னர் பவர் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் விருத்திப் பிரிவின் அணியினர் இந்த பீடைப் புழுத் தாக்கத்தை தணிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, இதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முதலாவது உயிரியல் களைநாசினியை வெற்றிகரமாக பதிவு செய்திருந்தது.

2021 ஆம் ஆண்டில் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினிகளை தடை செய்யும் தீர்மானத்தை நாடு மேற்கொண்டிருந்த நிலையில், இலங்கையில் நிலைபேறான விவசாய மற்றும் சேதனப் பயிர்ச் செய்கைக்கு அவசியமான சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிபுணர்களை பவர் அழைத்து வந்திருந்தது. பரந்தளவு பங்காளர் குழுக்களின் பங்கேற்புடன், பல்வேறு பயன்தரும் சந்திப்புகள் நடைபெற்றதுடன், நிலைபேறான விவசாய செயற்பாடுகளினூடாக பசுமையான பொருளாதாரத்துக்கு தனது உறுதியான பங்களிப்பை பவர் உறுதி செய்துள்ளதுடன், இந்தப் பிரிவில் முன்னணி ஆய்வு நிறுவனங்கள் மற்றும் கல்விமான்களின் ஆதரவுடன் சிறப்பு நிலையத்தை நிறுவுவதற்காக பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. 

சேதன உரத்துக்காக ISO சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கான முதல் படியை பவர் ஆய்வுகூட சேவைகள் மேற்கொண்டிருந்ததுடன், அதனை அண்மையில் பெற்றுக் கொண்டது. நிலைபேறான விவசாய செயன்முறைகள், பயிர் விளைச்சல்கள் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தல், சமூகத்துக்கு ஆரோக்கியமான உணவை உறுதி செய்தல் மற்றும் விவசாயிகள் மற்றும் சமூகத்துக்கு பாரியளவில் பாரதூரமான சூழல்சார் தாக்கம் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்வது போன்றவற்றை ஊக்குவிப்பதனுடாக நிறுவனத்தின் பயணத்துக்கு மேலும் வலுச் சேர்க்கப்படும்.

உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற சுகாதார பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்று, இலங்கையிலிருந்து தனது அலுவலகங்களை மூடி, அதன் விநியோகப் பணிகளை உள்நாட்டில் பிரிதொரு நிறுவனத்திடம் கையளிப்பதற்கு தீர்மானித்த நிலையில், பவர் நிறுவனம் அதன் முதலாவது தெரிவாக காணப்பட்டது. நாட்டின் முன்னணி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகத்தர்கள் எனும் வகையில், தனது பரந்தளவு விநியோக வலையமைப்பினூடாக, நோயாளர்களுக்கு அவசியமான மருந்துப் பொருட்கள் மற்றும் தடுப்பூசிகள் போன்றன கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், Sanofi மற்றும் GSK ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்குரிய பிரத்தியேக பங்காளராக திகழ்ந்தது. Novartis, Roche, Merck, MSD, Takeda, Eisai போன்ற பல்தேசிய மருந்துப்பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்தும் பவர் மீது தனது உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல தசாப்த காலங்களில் அதிகளவு புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறும் சூழலுக்கு இலங்கை முகங்கொடுத்துள்ள நிலையில், பவர் நிறுவனம் தனது Swiss Hotel Management Academy (SHMA) ஊடாக இலங்கையில் உலகப் புகழ்பெற்ற Ecole hôtelière de Lausanne இன் EHL Hospitality Business School இடமிருந்து VET by EHL கற்கையை விருந்தோம்பல் துறையைச் சேர்ந்தவர்களுக்காக வழங்க முன்வந்துள்ளது. 

நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களில் பொருளாதார சவால்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், Swiss Agency for Development and Cooperation (SDC) உடன் பவர் கைகோர்த்து, Skills for Sustainable Growth (SSG) திட்டத்தை ஆரம்பித்திருந்தது. கொவிட்-19 தொற்றுப் பரவல் உச்சகட்டத்தில் காணப்பட்ட சூழலில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மூன்றாண்டுகளில் 2,240 இளம் திறன் படைத்த இளைஞர் யுவதிகளை உருவாக்குவதை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளதுடன், ஹோட்டல் முகாமைத்துவத் துறையில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது, துறையில் பணியாற்றுவதற்கு அவர்களை தயார்ப்படுத்துவதற்கு அவசியமான பயிற்சிகள் மற்றும் திறன் மேம்படுத்தல்களை வழங்கல் ஆகியவற்றை எய்துவதில் கவனம் செலுத்தும்.

இந்த செயற்பாடுகளினூடாக, VTA ஸ்ரீ லங்கா மற்றும் நெஸ்லே லங்கா ஆகியவற்றுடன் அண்மையில் கைகோர்ப்புகளை மேற்கொண்டு, நாட்டின் சுற்றுலாத் துறைக்கும் பவர் ஆதரவளிக்கின்றது. Edelweiss உடன் தனது நீண்ட கால பங்காண்மையினூடாக, இலங்கைக்கு சுவிஸ் சுற்றுலாப் பயணிகளை அழைத்துவருவதிலும் பவர் தனது பங்களிப்பை மேற்கொள்கின்றது.

ஒழுக்கச் செயற்பாடுகள் மற்றும் ஆளுகைச் செயன்முறைகள் போன்றவற்றில் உறுதியான தந்திரோபாய வழிமுறைகளை பின்பற்றுகின்றமையை கௌரவிக்கும் வகையில், ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நஷனல் அமைப்பினால், இலங்கையில் மோசடிச் செயற்பாடுகளை குறைப்பதற்காக வியாபார சமூகத்தில் நற்செயற்பாடுகளை ஊக்குவிப்பதில் தனது முக்கிய பங்காளராக பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 17 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) பூர்த்தி செய்வதை நோக்கியும் பவர் செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது.

தனது சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்பாடுகளினூடாக பாடசாலை தளபாடங்களை நன்கொடையாக வழங்கும் நடவடிக்கைகளை பவர் முன்னெடுப்பதுடன், நாட்டின் 25 மாவட்டங்களில் இதுவரையில் 380க்கு அதிகமான பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அடங்கலாக 280க்கு அதிகமான நிறுவகங்களுக்கு நன்கொடைகளை வழங்கியுள்ளது. செவிப்புலன் குறைபாடுடைய சிறுவர்களுக்கான பாடசாலையின் பிரதான நன்கொடை வழங்குநராகவும் திகழ்கின்றது. குறைந்த வசதிகள் படைத்த நபர்களுக்கு பயிற்சிகளை பவர் வழங்குவதுடன், ஆறு மாத கால தொழிற்பயிற்சியை வழங்குவதுடன், முழு நேர தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது.

இலங்கையில் உறுதியான பிரசன்னத்தை பவர் கொண்டுள்ளதை அவதானிக்க முடிவதுடன், சிறந்த மற்றும் நெருக்கடியான காலப்பகுதிகளில் நாட்டுக்கு ஆதரவான தயாரிப்புகள் மற்றும் அறிவை கொண்டுவருவதில் பங்காற்றியுள்ளது. அல்பிரட் பவரினால் ஆரம்பிக்கப்பட்டு 125 வருடங்களாக தொடரும் பாரம்பரிய பெறுமதிகளுடன் தொடர்ந்தும் இயங்குவதுடன், தனது தற்போதைய வியாபார மாதிரிகளில் மேம்படுத்தல்களை மேற்கொள்வதுடன், நாட்டுக்கு அனுகூலங்களைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய புதிய பிரிவுகளுக்கு விரிவாக்கமடைந்த வண்ணமுள்ளது.

படங்கள்:

  1. கொழும்பில் அமைந்துள்ள பழைமையான பவர் கட்டடம் 
  1. பவர் நிறுவனத்தின் உயர், மேம்படுத்தப்பட்ட உரத் தொழிற்சாலை
  1. இலங்கைக்கு சேதன விவசாய நிபுணர்களின் விஜயத்தின் போது
  1. விருந்தோம்பல் துறையில் திறன்கள் இடைவெளியை நிவர்த்தி செய்ய சுவிஸ் அரசாங்கத்துடன் பவர் இணைந்து செயலாற்றுகின்றது

Share with your friend
Exit mobile version