Eyeview Sri Lanka

உலக சுற்றுலாத் தினத்தை கொண்டாடும் வகையில் இளமை, நிலைபேறானதன்மை மற்றும் சர்வதேச தலைமைத்துவத்துவம் சங்கமிக்கும் Srilanka Tourism Expo ஆரம்பம் 

Share with your friend

பரந்தளவிலான விடயங்களை உள்ளடக்கியதான வேலைத்திட்டங்களுடன் 2025 ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடுவதற்கு இலங்கை தயாராகி வருகின்றது.  ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா நிறுவனத்தினால் (UNWTO) வெளியிடப்பட்ட சுற்றுலா கைத்தொழில் மற்றும் நிலைபேறான மாற்றம் எனும் தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி வேலைத்திட்டங்களின் மூலம் சுற்றுலாத் துறையின் எதிர்காலம் கருதி இளம் தலைமுறை, சிறிய மற்றும் மத்திய அளவிளலான துறைகளின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாகாண மட்டத்திலான போட்டிகளில் தொடங்கி சர்வதேச மட்டத்திலான கருத்தரங்குகள் வரையான சகல வேலைத்திட்டங்களும் உலக சுற்றுலாத்துறையில் இலங்கையை உச்ச இடமொன்றில் நிலைநிறுத்துவதற்கு தனித்துவமான பங்களிப்பை வழங்குகிறது. சுற்றுலா அமைச்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA),, இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் (SLITHM, சுற்றுலாப் பொருளாதாரம் மற்றும் விருந்தோம்பல் பட்டதாரிகள் சங்கம் (AATEHM),  இலங்கை சுற்றுலா வழிநடத்துனர் சங்கம் (SLAITO),  இலங்கைச் சுற்றுலா ஹோட்டல் சங்கம் (THASL), கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிலைபேறான சுற்றுலா அலகு ஆகியவை  மேற்படி வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்கின்றன.

இலங்கைச் சுற்றுலா கண்காட்சி ஊடாக இலங்கையின் திறன்கள், ஆக்கத்திறன், கைத்தொழில் பன்முகத்தன்மை ஆகியவற்றை உலக அரங்கில் எடுத்துரைப்பதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது.  2021 ஆம் ஆண்டில் One Galle Face ஹோட்டலில் நடைபெற்ற முதலாவது கண்காட்சியின் மூலம் மக்களுக்கு சுற்றுலா மற்றும் விருந்தோம்புகை துறை அடைந்துள்ள வலுவான இடத்தை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. 2022 ஆம் ஆண்டில் அது வன் கோல்பேஸ் ஹோட்டலில் SLAITO இன் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற Sri Lanka Tourism Expo கண்காட்சி சுற்றுலாத் துறையின் எதிர்காலம் கருதிய வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது.  2025 ஆம் ஆண்டில் நடைபெறும் கண்காட்சியின் போட்டி நிகழ்ச்சிகள் இளம் தலைமுறையினரையும்,  சிறிய மற்றும் மத்திய அளவிலான தொழில் முயற்சிகள் தொடர்பான விழிப்புணர்வு திட்டங்கள் ஊடாக தொழில் முயற்சியாளர்களையும் ஆராய்ச்சி மற்றும் தலைமைத்துவ மாநாடுகள் ஊடாக சர்வதேச நிபுணர்களையும் ஒருங்கிணைக்கின்றது.

அகில இலங்கை பாடசாலை சுற்றுலா கழகங்களின் மாகாண மட்ட போட்டிகளுடன் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் ஒன்பது மாகாணங்களையும் உள்வாங்கும் வகையில் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வடமத்திய மாகாணத்தில் நிறைவு பெற்றுள்ளது. SLITHM இன் ஒத்துழைப்புடன் நடைபெற்ற மேற்படி போட்டிகளில் சமையல் கலை, உணவுபானச் சேவைகள், வீட்டுப் பராமரிப்பு, சுற்றுலா அறிவு போன்ற துறைகளுக்கு ஏற்புடைய திறன்களை கொண்ட ஏராளமான மாணவர்கள் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் கலந்து கொண்டனர்

SLTDA இன் ஒத்துழைப்புடன் சிறிய மற்றும் மத்திய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்களும் நடைபெற்றன. சுற்றுலாத் துறையின் சிறிய மற்றும் மத்திய அளவிலான தொழில்முயற்சிகளை வலுவூட்டவும் அதன்  தரத்தை மேம்படுத்தவும், தேசிய மட்டத்திலான மூலோபாயங்களுடன் இணைவதற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதுமே அதன் நோக்கமாகும். Guest Houses மற்றும் Homestays தொடக்கம் போக்குவரத்து வழிநடத்துனர்கள் மற்றும் உள்நாட்டு வழிகாட்டுநர்கள் வரை விரிந்து பரந்து காணப்படுகின்ற சிறிய மற்றும் மத்திய அளவிலான தொழில்முயற்சியாளர்கள் சுற்றுலாத் துறையின் முதுகெலும்பாக திகழ்கின்றதொரு பின்னணியில் இவ்வாறான வேலைத்திட்டங்கள் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. சிறிய மற்றும் மத்திய அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கான கொழும்பு மாவட்ட வேலைத்திட்டம் SLTDA தரக்கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைமையில் அக்டோபர் மாதம் 02 ஆம திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில்  நடைபெறுகின்றது. அதன் போது கொள்கை வகுப்பாளர்களுக்கும், உலகத் தலைவர்களுக்கும் சிறிய மற்றும் மத்திய அளவிலான தொழில்முயற்சியாளர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை கொண்டு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது. 

சுற்றுலா அமைச்சு, SLTDA, AATEHM மற்றும் SLAITO ஆகியவை ஏற்பாடு செய்யும் கொழும்பு சுற்றுலா சந்தை மற்றும் தொழில் கண்காட்சி செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி One Galle Face ஹோட்டலில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த கண்காட்சி 65 கண்காட்சிக் கூடங்களை கொண்டுள்ளது. உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களுக்கு வெளிநாட்டு கொள்வனவாளர்களுடன் இணையக் கூடிய ஒரு தளமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க, இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பயின், SLTDA தலைவர் புத்திக ஹேவாவசம் SLCB மற்றும் UNWTO உத்தியோகத்தர்கள் மற்றும் துறை சார்ந்த பங்குதாரர்கள் பலரும் இந்த அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கை சுற்றுலாத் தொழில் மற்றும் தொழில்சார்  கண்காட்சி செப்தம்பர் மாதம் 28 ஆம் திகதி தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்தவின் தலைமையில் One Galle Face ஹோட்டலில் நடைபெறவுள்ளது. மேற்படி கண்காட்சி விருந்தோம்புகை மற்றும் சுற்றுலாத் துறையின் முதன்மை சேவை வழங்குநர்களுடன் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ள இளம் தொழில் வல்லுனர்களை இணைக்கின்றது. அது மாணவர்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு காத்துக்கொண்டிருப்பவர்களுக்கான நேர்முக பரீட்சைகள், தொழில்சார் வழிகாட்டுதல் அமர்வுகள் மற்றும் செயலர்வுகளை உள்ளடக்கியுள்ளது.

 பத்தாவது சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாடு (ITRC) அக்டோபர் மாதம் முதலாம் திகதி BMICH இல் நடைபெற இருக்கின்றது. அந்த மாநாட்டுக்கு 30-க்கும் மேற்பட்ட சர்வதேச பேராசிரியர்கள் மற்றும் அறிவார்ந்த அறிஞர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரனசிங்க தலைமையில் அந்த மாநாடு ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

அதே நாளில் அகில இலங்கை பாடசாலை சுற்றுலா கழகங்களின் போட்டி தொடரின் இறுதிப்போட்டி SLITHM மற்றும்  SLCB இன் தலைவர் தீர ஹெட்டிஆரச்சியின் தலைமையில் ஹோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. சகல மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 300 இறுதி போட்டியாளர்கள் அதில் பங்கேற்கவுள்ளதோடு 30 வெற்றியாளர்கள் இதன்போது தெரிவு செய்யப்படவுள்ளனர்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் துறைசார்ந்த வல்லுநர்களின் தலைமையில் BMICH இல் நடைபெறவுள்ள சர்வதேச சுற்றுலா தலைவர்களின் மாநாட்டுடன் இம்முறை சுற்றுலாத் தின கொண்டாட்டங்கள் நிறைவு பெறுகின்றன.

“இலங்கையின் சுற்றுலாத்துறையின் எதிர்காலத்துக்கு சுற்றுலா புத்தாக்கம் மற்றும் தொடர்புகள்” எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள அறிவார்ந்த கலந்துரையாடல்  அதில் தனித்துவமான ஒரு அம்சமாகும். பீட்டர் ஹில், மிகெல் குணான், புத்திக்க ஹேவாவசம்,அமிதாப் காந்த் அல்லது சைமன் அன்ஹோல்ட்  போன்ற சர்வதேச புகழ்மிக்க நிபுணர்கள் இதில் கருத்துரை தெரிவிக்கவுள்ளார்கள். இலங்கை உலக  புவிசார் சுட்டியில் உச்ச இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றதென்பதேயே இவர்களின் பங்கேற்பு பிரதிபலிக்கின்றது. சர்வதேச தர நியமங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கும் அவற்றை உள்நாட்டு தேவைக்கேற்ற வகையில் மீன் உருவாக்கம் செய்வதற்கும் தேவையான வழிகாட்டுதல்களை இதன் போது பெற முடியும்.

இலங்கை சுற்றுலா கண்காட்சி 2025 வெறுமனே ஒரு கொண்டாட்டத்துக்கு மட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. அது ஆழமான நோக்குடன் கூடிய ஒரு அணுகுமுறை ஆகும். பிரதி அமைச்சர், கைத்தொழில் பங்குதாரர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்களின் பங்கேற்பின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் அடையாளத்துக்கு அத்துறையின் முக்கியத்துவம் உறுதியாகின்றது. ஒரு மாதத்துக்கும் மேல் நடைபெறவுள்ள மேற்படி வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு சுற்றுலா பொருளாதாரம் மற்றும் விருந்தினர் உபசரிப்பு முகாமைத்துவ பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர், பணிப்பாளர் சபை மற்றும் அதன் அங்கத்தவர்கள் பெரும் பங்காற்றி உள்ளதோடு இதர சகல நிறுவனங்கள் மற்றும் அலுவலர்களும் அதில் கனிசமான பங்களிப்பை வழங்கி இருக்கின்றார்கள்.


Share with your friend
Exit mobile version