உள்ளூர் தகவல் தொடர்பாடல் துறையில் முன்னணியில் இருக்கும் டயலொக் ஆசிஆட்டா, உள்ளூர் விவசாயத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், நவீன தகவல் தொழில்நுட்பத்தை உள்ளிணைத்து விவசாயிகளின் வாழ்க்கையை வளமாக்கும் நோக்கத்துடன் ‘உழவர் தோழன்’ என்ற கையடக்கத் தொலைபேசி App ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது பாரம்பரிய பொருளாதார பயிர்களுடன் தொடர்புபட்டது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் வடிவமைக்கப்பட்ட இந்த App ஐ விவசாயத்தில் ஈடுபடும் அனைவரும் எளிதாக உள்ளிணைக்க முடியும். இந்த App இன் மூலம் விவசாயிகளின் தேவைக்கேற்ப, செய்கை நிலத்தின் அமைப்பிற்கு ஏற்ப, செய்கை பண்ணப்படுகின்ற பயிர் மற்றும் பயிரின் வளர்ச்சி நிலை ஆகியவற்றுக்கு அமைவாக துல்லியமான மற்றும் விரிவான தகவல் விபரங்கள் வழங்கப்படுகின்றன. மிகவும் பரந்த அளவிலான சேவைகளுடன் இயங்கும் இந்த தனித்துவமான உழவர் தோழன் App ஐ Google Play Store மூலம் மொபைல் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து இந்த சேவையுடன் இணைந்துக்கொள்ள முடியும். மேலும் 616 என்ற துரித சேவை அழைப்பு இலக்கத்தினை அழைப்பதன் மூலமும் இச்சேவையுடன் இணைந்துக்கொள்ள முடியும். டயலொக் இணைப்பு மூலம் இந்த மொபைல் App சேவையுடன் இணைபவர்களுக்கு டேட்டா கட்டணம் ஏதும் கிடையாது, மேலும் தினசரி கட்டணமாக ரூபா. 2 மற்றும் உரிய வரிகள் மாத்திரமே அறவிடப்படும். எந்த ஒரு தகவல் விபரத்தையும் பெற்றுக்கொள்ள 616 இற்கு அழைப்பினை ஏற்படுத்துவதற்கு அழைப்பொன்றுக்கு ரூபா ஒன்று மற்றும் உரிய வரி என்ற வீதத்திலும் கட்டணம் அறவிடப்படும்.
இச்சேவையை உள்ளூர் விவசாயிகளுக்கு மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது தேயிலை செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக இந்த உழவர் தோழன் சேவையில் அதுவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், தேயிலை தொழில் தொடர்பான சிறப்புத் தகவல்கள் மற்றும் தேயிலை செய்கை தொடர்பான அறிவுறுத்தல்களும் குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகள் மூலம் விவசாயிகளின் கைத்தொலைபேசிகளுக்கு உடனுக்குடன் வழங்கப்படுகின்றன.
புகழ்பெற்ற சர்வதேச தேயிலை உற்பத்தியாளரான அக்குரஸ்ஸ நந்தன தேயிலை தொழிற்சாலையானது, இந்த தனித்துவமான தொழில்நுட்பத்தை டயலொக் உழவர் தோழன் சேவையுடன் இணைந்து விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு அவர்களின் உற்பத்தித் திறனையும் மேம்படுத்துவதன் மூலம் உயர் நன்மைகளை அடையப்பெற்றுள்ள நிறுவனத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
விவசாயத் திணைக்களத்துடன் இணைந்து விவசாய ஆலோசனைச் சேவையாக 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உழவர் தோழன் அழைப்புச் சேவையானது, டயலொக் ஆசிஆட்டாவின் மத்தியஸ்தப் பணிகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான மற்றும் நிலைபேற்றுடனான அங்குரார்ப்பண செயற்திட்டங்களில் ஒன்றாகும். தற்போது, தேயிலை உட்பட 32 க்கும் மேற்பட்ட பயிர்களை உள்ளடக்கிய, 10,000,000 விவசாயிகள் தங்கள் பயிர்களை வெற்றிகரமாக செய்கை பண்ண தேவையான ஆலோசனை சேவைகள் வழங்கப்படுகின்றன.