Site icon Eyeview Sri Lanka

ஒரியன்ட் பைனான்ஸ் இன் மாற்று நிதி வணிகப் பிரிவு, ஆண்டின் வளர்ந்து வரும் இஸ்லாமிய நிதி நிறுவனமாக தங்க விருதினை வென்றது.

Share with your friend

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான ஒரியன்ட் பைனான்ஸ்,  மதிப்பிற்குரிய “இலங்கை இஸ்லாமிய வங்கி மற்றும் நிதித் தொழில் விருதுகளில்” தனது சாதனைகளை பெருமையுடன் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. இந் நிகழ்வில் ஒரியன்ட்  மாற்று நிதி வணிகப் பிரிவு (AFBU) இரண்டு மதிப்புமிக்க விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டுள்ளது. “ஆண்டின் வளர்ந்து வரும் இஸ்லாமிய நிதி நிறுவனத்திற்கான தங்க விருது, மற்றும் ஆண்டின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்திற்கான மெரிட் விருது”. இந்த பாராட்டுக்கள் இஸ்லாமிய நிதித்துறையில் சிறந்து விளங்குவதற்கும் புத்தாக்கத்திற்கும் AFBU காண்பிக்கும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.

ஒரியன்ட் பைனான்ஸ் மாற்று நிதி வணிகப் பிரிவு, இந்த ஆண்டின் வளர்ந்து வரும் இஸ்லாமிய நிதி நிறுவனமாக அங்கீகாரம் பெற்றது, அதன் பயணத்தில் ஒரு மைல்க்கல்லாக கருதப்படுகிறது. இஸ்லாமிய நிதிக் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் அதன் அர்ப்பணிப்பு, வெற்றிகரமான வணிக விரிவாக்கம், அதன் மக்கள் மற்றும் குழுவில் மூலோபாய முதலீடுகள், சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கான அர்ப்பணிப்பு, நெறிமுறை மற்றும் ஷரியா-இணக்க நடைமுறைகளை உறுதி செய்தல், அதன் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் விரிவான வரிசை என்பன இவ்வெற்றிக்கான முக்கிய காரணிகளாகும். இம்முயற்சிகள் ஒரியன்ட் மாற்று நிதி வணிகப் பிரிவின் வெற்றிக்கு கை கொடுத்தது என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. AFBU இஜாரா லீசிங் வணிகம் LKR 600 மில்லியனுக்கு அதிக தொகையையும், Wakalah தவணை முதலீடுகள் LKR 500 மில்லியனுக்கு அதிகமான தொகையையும் இரண்டாண்டுகளுக்குள் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரச்சாரத்திற்கான மெரிட் விருது, ஆக்கப்பூர்வமான உள்ளடக்கங்களை பகிர்ந்தமைக்காகவும், மூலோபாய இலக்கு பிரச்சாரங்களைச் செயல்படுத்தியமைக்காகவும், புதுமையான இடுகைகளை உருவாக்கியமைக்காகவும் AFBU குழுவை அங்கீகரித்துள்ளது. மேலும், தயாரிப்பு அம்சங்களின் தொடர்பு, இணக்கத் தேவைகளைப் பின்பற்றுதல் மற்றும் துல்லியமான இலக்குக் குழுக்களை அடைதல் ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

ஓரியன்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. கே.எம்.எம்.  ஜபிர், இச் சாதனைகளைப் பற்றி கருத்து தெரிவிக்கையில்  “இந்த மதிப்புமிக்க பாராட்டுகளைப் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் அவர்களது நிதித் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள எங்களை நாடியமைக்காக  எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய மாற்று நிதி வணிகப் பிரிவின் தலைவர் இபாத் சுஹரிக்கும் அவரது அர்ப்பணிப்புள்ள குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் வாடிக்கையாளர்களின் மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளுடன் எதிரொலிக்கும் பொறுப்பான நிதி தீர்வுகளை நாங்கள் தொடர்ந்து வழங்குவதோடு, எங்கள் சலுகைகளை மேலும் மேம்படுத்துவோம்” என குறிப்பிட்டார்.

ஒரியன்ட் பைனான்ஸ் தமது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிதிச் சேவைகளின் விரிவான தொகுப்பை வழங்குகிறது. இந்தச் சேவைகளில் நிலையான வைப்புத் திரட்டல், சேமிப்புக் கணக்குகள், குத்தகை, தங்கக் கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள், பெருநிறுவன நிதியுதவி ஆகியவை அடங்கும்.

ஒரியன்ட் பைனான்ஸ் 42 ஆண்டுகால ஸ்திரத்தன்மை, வலிமை, நம்பகத்தன்மை மற்றும் நிபுணத்துவத்தை நிதித்துறைக்கு கொண்டு வருகிறது. படிப்படியாக, Orient Finance PLC ஆனது வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதிச் சேவை வழங்குனராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இது புதுமைகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன் விதிவிலக்கான தயாரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஒரியன்ட் பைனான்ஸ் இலங்கை மத்திய வங்கியால் உரிமம் பெற்றுள்ளதுடன் LRA இனால் BB + (நிலையானது) என மதிப்பிடப்பட்டது.


Share with your friend
Exit mobile version