இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனம் மற்றும் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட Softlogic Life, காப்புறுதி சந்தையில் புதிய தரநிலைகளுடன் நிலையான வளர்ச்சியை வெளிப்படுத்தி, 2024 ஆம் ஆண்டில் சிறந்த நிதி செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2014 இல் 3 பில்லியன் ரூபாவை மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணமாக (GWP) பதிவு செய்த Softlogic Life, 2024 டிசம்பர் 31 ஆம் திகதி நிறைவடையும் போது அதை 31.6 பில்லியன் வரை 10 மடங்கு வளர்ச்சியை அடைந்துள்ளது. 2024 மூன்றாம் காலாண்டில் 20% வருடாந்த வளர்ச்சியுடன் 16.8% சந்தைப் பங்கைப் பெற முடிந்தது. இந்த அனைத்து வெற்றிகளும் காப்புறுதித்தாரர்களுக்கு தனித்துவமான மதிப்பை வழங்குவதிலும், அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பு மற்றும் புத்தாக்கங்களை வழங்குவதிலும் Softlogic Life இன் அளப்பரிய அர்ப்பணிப்பை காட்டுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் கவர்ச்சிகரமான மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணத்தின் கூட்டு வருடாந்த வளர்ச்சி விகிதம் 26% சதவீதமாக வளரச்சியடைந்துள்ளது. 2024 நான்காம் காலாண்டின் முடிவில் 750,000க்கும் மேற்பட்ட செயலில் உள்ள ஆயள் காப்புறுதி பத்திரங்களைக் கொண்டிருந்தது. இதன் மூலம் இலங்கையின் 13% வேலை செய்கின்ற மக்கள் தொகைக்கு, அதாவது 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளது.
காப்புறுதித்தாரர்களுக்கான தங்கள் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், 2024 ஆம் ஆண்டில் 14.2 பில்லியன் ரூபா உரிமைக்கோரல்கள் மற்றும் சலுகைகளை வழங்கியுள்ளது. சுகாதாரம் மற்றும் பிற அபாயங்களுக்கான உரிமைக்கோரல்கள் 2024 இல் 11 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
38.2% பங்கு இலாபத்துடன் உயர் நிதி வலிமையை பராமரித்து வரும் நிறுவனம், கடந்த 6 ஆண்டுகளாக 20%க்கும் அதிகமான பங்கு வருவாய் வளர்ச்சியை தொடர்ந்து பராமரித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டில் Softlogic Life இன் வரிக்கு பிந்தைய இலாபம் 4.5 பில்லியன் ரூபாவாக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 59% அதிகரிப்பாகும். 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 98% வளர்ச்சியுடன் 2024 ஆம் ஆண்டில் ரூ. 6.3 பில்லியன் வரிக்கு முந்தைய இலாபத்தைப் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் மொத்த சொத்துக்கள் 53.6 பில்லியன் ரூபாவாகும். மொத்த பங்கு மதிப்பு 10.4 பில்லியன் ரூபாவாகும். மேலும், 43.9 பில்லியன் ரூபா நிதி முதலீடு அதன் மொத்த சொத்துக்களில் 82% ஐ குறிக்கிறது. 298% மூலதன சமப்படுத்தல் விகிதத்துடன், 120% ஒழுங்குமுறை தேவைகளை மீறி, பொருளாதார சவால்களை வெற்றி கொள்ளும் திறன் கொண்ட நிறுவனமாக Softlogic Life அடையாளப்படுத்தப்படுகிறது.
Softlogic Life நிறுவனத்தின் சிறப்பான செயல்திறன் குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் அசோக் பதிரகே கருத்து தெரிவிக்கையில், ‘இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமாக நிலைபெற்றுள்ள Softlogic Life தொடர்ந்து சிறந்த நிதி முடிவுகளை பதிவு செய்து வருகிறது. எந்த சூழ்நிலையிலும் நிலையான வளர்ச்சியை அடையும் திறன் கொண்ட எங்களது வலுவான மூலோபாய பார்வை, செயல்பாட்டு சிறப்பு மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட புத்தாக்க சேவை ஆகியவற்றின் மூலம் அவர்கள் மீதான உறுதியான கவனத்தை நன்கு காட்டியுள்ளோம். எங்கள் சந்தை இருப்பை மேலும் விரிவுபடுத்துவதில் காப்புறுதித்தாரர்களுக்கு மற்றும் பங்குதாரர்களுக்கு உயர்ந்த மதிப்புகளை வழங்க நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்’ என்றார்.
Softlogic Life இன் வெற்றிக்கான முக்கிய காரணிகளாக காப்புறுதி சேவைகளை பெறுவதற்கான எளிமை, திறன் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக காப்புறுதித் துறைக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட புத்தாக்கங்களைக் குறிப்பிடலாம். அதன் சிறப்பு படியாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Health Score’ காப்புறுதித்தாரர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை நன்கு பராமரிக்க உதவுகிறது. மேலும் தனது செயல்பாடுகளில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த செயல்படும் Softlogic Life, சில நிமிடங்களில் உரிமைக்கோரல் செயல்முறையை பூர்த்தி செய்து வாடிக்கையாளர் திருப்தியை உயர்த்தக்கூடிய AI மற்றும் இயந்திர கற்றல் மூலம் இயங்கும் புதிய சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் டிஜிட்டல் சேவைகள் மற்றும் முழுமையான டிஜிட்டல்மயமாக்கப்பட்ட விற்பனை தளங்களை அறிமுகப்படுத்தியுள்ள Softlogic Life, அதன் மூலம் காப்புறுதி சேவைகளை வழங்குவதில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது. இந்தப் புதிய சேவைகள் மூலம் காப்புறுதித் துறையில் புதிய அடையாளத்தை உருவாக்கிய Softlogic Life, காப்புறுதியின் மதிப்பு குறித்த பொதுமக்களின் நம்பிக்கையை உயர்த்துவதற்கும் பெரும் பங்களிப்பை செய்துள்ளது.
இதுதொடர்பில், Softlogic Life இன் முகாமைத்துவப் பணிப்பாளர் இப்திகார் அஹமட் கருத்து தெரிவிக்கையில்,’Softlogic Life இன் வெற்றி நிதி வளர்ச்சியால் மட்டுமே தீர்மானிக்கப்படவில்லை. நாங்கள் பாதுகாக்கும் வாழ்க்கை மற்றும் நாங்கள் கட்டியெழுப்பும் நம்பிக்கை ஆகியவை அந்த வெற்றியின் காரணிகளாகக் குறிப்பிடப்படலாம். இலங்கையின் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளம் மற்றும் அதிக பாதுகாப்பு அடிப்படையிலான உரிமைக்கோரல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் எங்கள் நிலைப்பாடு, இந்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதி மற்றும் எங்கள் பாதுகாப்புக்கான அர்ப்பணிப்பின் சிறந்த சான்றாகும். கடந்த 10 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சிக்கு பின்னால் இருந்த பெரும் சக்தியாக இந்த அர்ப்பணிப்பு மாறியது குறிப்பிடத்தக்கது, இது எந்த நிலையிலும் ஒரு சிறப்பு சாதனையாகும்’ என்றார்.
2025 புத்தாண்டை ஆரம்பிக்கும் போது காப்புறுதித் துறை மற்றும் நாட்டின் முன்னால் உள்ள வரம்பற்ற வாய்ப்புகள் குறித்த நம்பிக்கையை உறுதிப்படுத்த “Infinite by Nature” கருப்பொருளை Softlogic Life முன்னெடுத்துள்ளது. 2024 ஆண்டின் இறுதியில் பதிவு செய்யப்பட்ட வலுவான முடிவுடன், வேகமான வளர்ச்சியை அடைவதற்கும், நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களுக்கு அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த வரம்பற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கும் அவர்கள் செயல்பட்டுள்ளனர்.
துறை தரநிலைகளை மீண்டும் மீண்டும் புதுப்பித்து, வளர்ச்சிக்கான புதிய பரிமாணங்களைத் திறந்து, புத்தாக்கங்களை முன்னெடுத்து மில்லியன் கணக்கான இலங்கையர்களுக்கு நிச்சயமாக தேர்வு செய்யக்கூடிய ஆயுள் காப்புறுதியாளராக தனது சிறப்பை நிரூபிக்க Softlogic Life முடிந்துள்ளது. சாதனை நிகர ஊக்குவிப்பு மதிப்பெண் (NPS) 68 உடன் வலுவான வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் சேவை சிறப்புக்கான சிறந்த உதாரணத்தை வழங்க முடிந்த நிறுவனம், நிறுவன அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஆளுமை மற்றும் நிலைத்தன்மைக்கான விருதுகளுக்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற CA TAGS விருது விழாவில் இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் மூன்றாவது இடத்தைப் பெற்ற Softlogic Life, தொடர்ந்து நான்கு தடவைகள் இந்த விருதைப் பெற்ற நிறுவனமாக சிறப்பிடம் பெற்றது. அதேபோல, நிறுவன அறிக்கையிடலில் ஒட்டுமொத்த சிறப்புக்காக காப்புறுதிப் பிரிவில் தங்கம் மற்றும் வெண்கல விருதுகளைப் பெற்றுக் கொண்ட Softlogic Life நிறுவனம், மேலும் 6 பிரிவுகளில் பாராட்டப்பட்டது.