சீலைன் குழுவின் (Ceyline Group) துணை நிறுவனமான கலிபோலிங்க் லாஜிஸ்டிக்ஸ் (Califolink Logistics), கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினலில் (Colombo West International Terminal – CWIT) தனது இடைமுனைய சரக்கு வண்டி போக்குவரத்து (Inter Terminal Trucking) சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இதன் மூலம், இலங்கையின் முன்னணி போக்குவரத்து தீர்வு வழங்குநராக இருக்கும் தன்னுடைய தலைமைச் செயல் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

கலிபோலிங்க், கொழும்பு துறைமுகத்தில் சரக்கு கொள்கலன்களை கையாளல் திறனை மேம்படுத்தும் நோக்கில் தனது இடைமுனைய சரக்கு வண்டி போக்குவரத்து சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான போக்குவரத்து சேவைகளில் பெற்றிருந்த நிபுணத்துவத்தைத் தாண்டி, தனது உடைமைத்திரட்டுக்களை விரிவுபடுத்தும் முக்கிய மைல்கல்லாக அமைகின்றது. ஆரம்ப கட்டமாக 10 லொறிகளை கொண்டு இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் பெருமளவு வாகனங்களைக் கொண்டு இத்திட்டம் மேம்படுத்தப்பட இருக்கின்றது.
செயல்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்த கலிபோலிங்க் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர் நிமல் விஜேசிங்க,“கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினல் உடன் இணைந்து இடைமுனைய சரக்கு வண்டி போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்துவதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்கள் உடைமைத்திரட்டுக்களையும் வணிக பன்முகத்தன்மையையும் விரிவுபடுத்தும் துணிச்சலான படிமுறையாகும். மேலும் இது எங்களுக்கான முக்கிய மைல்கல் மட்டுமன்றி, கொழும்புத் துறைமுகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியில் பங்காற்றும் எங்கள் உறுதியின் சான்றாகும்,” என குறிப்பிட்டார்.
இந்நடவடிக்கையின் மூலோபாய முக்கியத்துவத்தை வலியுறுத்திய சீலைன் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் சதுர லகிந்து, “கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினலுடன் சீலைன் நிறுவனத்தின் வளர்ந்து வரும் வணிக உறவு, ஆரம்ப செயல்பாட்டு கட்டத்தில் சுதந்திரமாக இயங்கும் சுமை தூக்கி கருவிகளை பரிசோதிக்க எங்களது “Cey-Synergy” சுமை போக்குவரத்து கப்பலை வழங்கியதிலிருந்துடன் களஞ்சியக் கொள்கலன்கள், கண்காணிப்பு சேவைகள் மற்றும் இப்போது இடைமுனைய சரக்கு வண்டி போக்குவரத்திற்காக எங்களது சொந்த போக்குவரத்து படையை வழங்கிய வரையிலான ஒத்துழைப்புகள் அனைத்தும் கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினலுடன் உடன் இருதரப்புக்கும் நன்மை பயக்கும் கூட்டாண்மையை உருவாக்க நாங்கள் காட்டும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.” எனக் குறிப்பிட்டார்.
கலிபோலிங்க் லாஜிஸ்டிக்ஸ், இலங்கையில் இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் மோட்டார் வாகன இறக்குமதியாளர்களுக்கு சிறப்பு போக்குவரத்து சேவைகளை வழங்குகிறது. நம்பகமான மற்றும் திறம்பட செயற்படும் போக்குவரத்து சேவைகளில் வலுவான சாதனையை கொண்ட இந்நிறுவனம், நாட்டின் லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பை மேம்படுத்தும் பணியில் உறுதியாக செயற்பட்டு வருகின்றது.
மேலும், குறுகிய கால மற்றும் நீண்டகால சரக்கு கொள்கலன்கள் (Containers) வாடகைக்கு வழங்குவதில் முன்னோடியாக விளங்கும் கலிபோலிங்க், தனது “OUT OF THE BOX” தர அடையாளத்தின் கீழ் கப்பல் சரக்கு கடகங்களை நீடித்தும், வசதியான அதிசொகுசு வாய்ந்த வீடுகளாக மாற்றி, செயற்திறனையும் புதுமையான வடிவமைப்பையும் ஒருங்கிணைக்கும் திறமையை வெளிப்படுத்தி வருகின்றது.